கோவில் கும்பாபிஷேகம்

Monday, July 18, 2016

"வேலைவாய்ப்புப் பதிவு மேற்கொள்ள பள்ளிகளில் வசதி'

"வேலைவாய்ப்புப் பதிவு மேற்கொள்ள பள்ளிகளில் வசதி'

By அரியலூர்

First Published : 19 July 2016 05:17 AM IST

 

 

 

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மதிப்பெண் சான்று வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

எனவே மாணவர்கள் மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாளன்று ஆதார் அட்டை எண், குடும்ப அட்டை, செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களை எடுத்து வந்து பதிவு செய்து கொள்ளலாம்.

 

அசல் சான்றிதழ் வழங்கப்படும் நாள் முதல் 15 தினங்கள் வரை வேலைவாய்ப்பு பதிவுப்பணி அந்தந்த பள்ளிகளிலேயே நடைபெறும். பதிவுப்பணி நடைபெறும் 15 நாட்களுக்கும் மதிப்பெண் சான்று வழங்க தொடங்கிய முதல் நாளையே பதிவுமூப்பு தேதியாக வழங்கப்படும்.

 

மேலும் h‌t‌t‌p‌s:​‌t‌n‌v‌e‌l​a‌i‌v​a​a‌i‌p‌p‌u.‌g‌o‌v.‌i‌n  என்ற வேலைவாய்ப்புத் துறை இணையதளம் வழியாகவும் பதிவு செய்து கொள்ளலாம்.

 

10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற வேலைவாய்ப்புப் பதிவு செய்ய விரும்பும் அனைத்து மாணவர்களும் தவறாது இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் .சரவணவேல்ராஜ் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

 

Nandri: dinamani

 

Saturday, July 16, 2016

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் லாரி மோதி சாவு

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் லாரி மோதி சாவு

By அரியலூர்

First Published : 17 July 2016 01:26 AM IST

 

பொய்யூர் அருகே சனிக்கிழமை இரவு லாரி மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.நானங்கூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவபெருமாள்.

 

இவரது மனைவி சத்யா(35). சனிக்கிழமை இரவு சிவபெருமாள் தனது மனைவி சத்யாவை அழைத்துக் கொண்டு பொய்யூர் அருகே சென்று கொண்டிருந்தார்.

 

அப்போது அந்த வழியாக சுண்ணாம்புக் கல் ஏற்றிக்கொண்டு வந்த லாரி இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதாம்.

 

இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த சத்யா மீது லாரியின் பின்பக்கச் சக்கரம் ஏறியது.

 

இதில்,சத்யா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த சிவபெருமாள் அருகில் உள்ள அரசு ஆரம்பு சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.

 

கீழப்பழூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Monday, July 11, 2016

11 கோயில்களில் கும்பாபிஷேகம் ஏராளமானோர் தரிசனம்

11 கோயில்களில் கும்பாபிஷேகம் ஏராளமானோர் தரிசனம்

 

 

Date: 2016-07-11 12:07:26

அரியலூர் : அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 11 கோயில்களில் கும்பாபிஷேகம் நடந்தது. அரியலூர் கோ.சி.நகர் விநாயகர் கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, லட்சுமி பூஜை, கோபூஜை, முதலாம் யாக சால பூஜை என பல்வேறு பூஜைகள் நடைப்பெற்றது. நேற்று காலை கடம் புறப்பாடு நிகழ்ச்சி நடைப்பெற்று, பின்னர் கோயில் கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியர்கள் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

 

இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் கயர்லாபாத் அடுத்த கல்லங்குறிச்சி விநாயகர் மற்றும் மாரியம்மன் கோயில், செந்துறை அடுத்த பொய்யாதநல்லூர் காமாட்சியம்மன் கோயில், பெருமாண்டி விநாயகர், அய்யானார், செல்லியம்மன் கோயில், குவாகத்தை அடுத்த இருகளாங்குறிச்சி ஸ்ரீபாலகுமார விநாயகர் கோயில், கீழப்பழுவூர் ஆலந்துறையார் கட்டளை ஸ்ரீவிநாயகர், கருப்பசாமி, பெரியநாயகி கோயில், மலத்தான்குளம் மாரியம்மன் கோயில், தா.பழூர் அடுத்த மேலக்குடிகாடு சிவன் கோயில், மீன்சுருட்டி வெத்தியார்வெட்டு முனீஸ்வரர் கோயில், விக்கிரமங்கலம் அடுத்த கோரைக்குழி மாரியம்மன் கோயில் ஆகிய 11 கோயில்களில் கும்பாபிஷேக விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.