கோவில் கும்பாபிஷேகம்

Sunday, December 17, 2017

தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு முகாம் - ஆலந்துறையார் கட்டளை

தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு முகாம்

By DIN  |   Published on : 18th December 2017 05:36 AM  |   அ+அ அ-   |  
அரியலூர் மாவட்டம் செந்துறை, உஞ்சினி, ஆலந்துறையார் கட்டளை ஆகிய பகுதிகளில் உள்ள சுண்ணாம்புக் கல் சுரங்கங்களில் செட்டிநாடு சிமென்ட் கார்ப்பரேசன், இந்தியன் பீரோ ஆப் மைன்ஸ் சார்பில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
ஆலைத் தலைவர் எம். சுந்தரமூர்த்தி, சுரங்கத் தலைவர் ஜி. ரகுநாதன் சிங் ஆகியோர் தலைமை வகித்து, தூய்மை இந்தியா திட்டம், சுரங்கப் பராமரிப்பு ஆகியவை குறித்து தொழிலாளர்களிடம் விளக்கினர். மேலும் அவர்கள் சுரங்கத்தைச் சுற்றியுள்ள கிராம பொதுமக்களிடம் நன்னடத்தை குறித்து விளக்கினர்.
சுரங்கப் பொதுமேலாளர் ஏ.மரிய பார்லாண்ட், கணக்கியல் துறை பொதுமேலாளர் எம்.ஜெயப் பிரகாஷ் காந்த், சுற்றுச்சூழல் துறை மேலாளர் பி. தனபாலன் மற்றும் சுரங்க அதிகாரிகள், தொழிலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Monday, December 11, 2017

பருத்தி பயிருக்கு மருந்து அடித்த 2 பேர் மயக்கம்

பருத்தி பயிருக்கு மருந்து  அடித்த 2 பேர் மயக்கம்

By DIN  |   Published on : 12th December 2017 08:18 AM  |   அ+அ அ-   |  
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே திங்கள்கிழமை பருத்தி பயிருக்கு மருந்து அடித்த 2 பேர் மயக்கமடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருமானூர் பகுதிகளில் மானாவாரிய பயிர்களான பருத்தி அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. உயர்ந்து வளரக்கூடிய பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளதால், இதன் மீது அடிக்கப்படும் மருந்து, விவசாயிகள் மீது பட்டு அவர்கள் மயக்கமடைந்து வருவது தொடர்கிறது.
இந்நிலையில், கல்லக்குடியைச் சேர்ந்ந்த விவசாயி முருகேசன்(58) என்பவர் தனது வயலில் பயிரிடப்பட்டுள்ள பருத்திக்கு திங்கள்கிழமை மருந்து அடிக்கும் போது மயக்கமடைந்துள்ளார். இதேபோல் ஆங்கியனூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னையன்(47) என்பவரும் பருத்திக்கு மருந்து அடிக்கும் போது மயக்கமடைந்துள்ளார். இவர்கள் இருவரும் கீழப்பழுவூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.