கோவில் கும்பாபிஷேகம்

Monday, November 29, 2010

Part-time fair price shop opened

Part-time fair price shop opened

Special Correspondent

ARIYALUR: Collector T.K.Ponnusamy on Monday opened a part-time fair price shop at Vazhaikuzhi village in Ariyalur district in the presence of Palai D.Amaramurthy, MLA of Ariyalur.

Family card holders

The District Collector said 411 fair price shops were functioning in the district and 2.10 lakh family card holders were attached to these shops.

He pointed out that the newly opened part-time fair price shop would function on Wednesdays and Thursdays. R.Pichai, District Revenue Officer and other officials attended the function

Monday, November 22, 2010

மாதம் ரூ1,000 மத்திய அரசால் உதவி தொகை வழங்ப்படுகின்றது

  2010 +2 தேர்வில் 80% மதிப்பெண் எடுத்து இந்த ஆண்டு 2010-ல் பட்ட படிப்பு (BA /B.Sc/ B.E/ B.Tech/ B.Com/ BBA/ B.Pharm/ B.Arch etc...) சேர்ந்த மாணவர்களுக்கு மாதம் ரூ1,000 மத்திய அரசால் வழங்ப்படுகின்றது (முதுகலை (Master Degree) படிக்கும் போது மாதம் ரூ.2,000 வழங்கப்படும்). 2009 மற்றும் அதற்க்கு முன்னர் தேர்சி பெற்றவர்களுக்கு இந்த உதவி தொகை கிடைக்காது. இது 2010-ல் 80 % மதிப்பெண் எடுத்தவர்களுக்கு மட்டுமே. இந்த உதவி தொகை. தமிழகத்தில் மொத்தம் 4883 மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.4,50,000-க்கு குறைவாக இருக்க வேண்டும்.

மாணவர்கள் இந்த இணையதளத்திற்க்கு http://www.tn.gov.in/dge/scholarship/login.php சென்று தங்களுடைய +2 தேர்வு பதிவு எண்ணை (Registration Number) சமர்பிக்கவேண்டும் தங்களுடைய மதிப்பெண்ணை சரிபார்த்து 80% சதவீதத்திற்க்கு மேல் இருந்தால் விண்ணப்ப படிவத்தை டவுன்லோட் செய்யலாம். நவம்பர் 12-ஆம் தேதி வரைதான் விண்ணப்பத்தை டவுன்லோடு செய்ய முடியும்  . பூர்த்தி செய்து அனுப்ப கடைசி தேதி நவம்பர் 16.

உடன் சமர்பிக்க வேண்டிய சான்றிதழ்கள்

1. சாதி சான்றிதழ்
2.
வருமான சான்றிதழ்
3. +2
மதிப்பெண் சான்றிதழ்

பூர்தி செய்யப்ப்பட்ட விண்ணப்பத்தை  அனுப்ப வேண்டிய முகவரி

இணை இயக்குனர் ( மேல் நிலை)
அரசு தேர்வுகள் இயக்ககம்
DPI.
வளாகம், கல்லூரி சாலை
சென்னை - 600006

மேலும் விபரம் இந்த இணையதளத்தில் http://www.tn.gov.in/dge உள்ளது.

Wednesday, November 17, 2010

பெரிதாக குறிவை

பெரிதாக குறிவை' என்பது ஆரம்பத்தில் மிகக் கடினமானதாகத் தோன்றும். ஏனென்றால் நம் வாழ்நாள் முழுவதும் இதற்கு மாறான முறையில் வேலை செய்தே பழகிவிட்டோம். இன்றைக்கு நம்மிடையே இருக்கும் நடைமுறை விதிகள் எல்லாம் 'போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து', 'இருப்பதை  விட்டு விட்டுப் பறப்பதைப் பிடிக்க நினைக்காதே', 'தேன்கூட்டில் கல் எறியாதே' என்பன போன்றவை. இப்போது இருக்கும் இடத்திலேயே இருந்தால் போதும், மாற்றம் கூடாது என்பதையே வலியுறுத்துகின்றன.

 

நமக்கேற்ற புதிய சவால்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி? மலை ஏறும் விளையாட்டு வீரன் டாட் ஸ்கின்னரைக் கேட்டால் சொல்வார். 'ஒரு மலையைப் பார்த்தவுடன் உங்கள் மனதில் பயம் எழவில்லையா? அப்படியானால் ஏறுவதற்கு மிகவும் சுலபமான மலையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டுவிட்டீர்கள். உண்மையான சவால் என்றால் அதை நினைக்கும்போதே மனத்தில் பிரமிப்பான பயம் ஏற்பட வேண்டும். உங்கள் தற்போதைய வலிமைக்கு உட்பட்ட மலையில் ஏறுவது என்றால் அதில் செலவிடும் நேரம், உழைப்பு எல்லாமே வீண். அது மட்டுமல்ல, பெரிய சாதனை ஒன்றைச் செய்யும் வாய்ப்பையும் தவறவிடுகிறீர்கள்!

 

மற்றவர்களெல்லாம் முடியாத காரியம் என்று கைவிட்டவற்றை எடுத்துக்கொண்டு மோதிப் பார்த்துவிடுகிற மனம்தான் இதற்கு அடிப்படைத் தேவை. சூரத் நகரத்தில் பிளேக் நோய் பரவிவிட்டது. இப்போது ஊரையே சுத்தப்படுத்தியாக வேண்டும். அதிகாரிகள் எல்லோரும் இதில் கை வைக்கப் பயந்தார்கள். பதவிக்கே ஆபத்து வரவழைக்கக் கூடிய விஷயம் இது. அந்த நேரத்தில் ஒரே ஒரு அதிகாரி மட்டும் 'நான் செய்கிறேன்' என்று முன்வந்தார். அவர்தான் எஸ். ஆர். ராவ். இருபதே மாதங்களில் வெற்றிகரமாக வேலையைச் செய்து முடித்தார். இன்றைக்கு பல வருடம் கடந்துவிட்டது. இன்றும் கூட சூரத் மக்களுக்கு அவர்தான் சூப்பர் ஸ்டார்!

 

இங்கு எஸ். ஆர். ராவ் மட்டுமல்ல இன்னும் பலர் பெரிதாக குறி வைத்து அவற்றை சாதித்து காட்டுகிறார்கள்.

 

 

வரப்ரசாத் ரெட்டி: இந்தியாவிலிருந்து மஞ்சல் காமாலையை (ஹெபடைடிஸ்-பி) ஒழித்துக்கட்டப் போகிறேன் என்று புறப்பட்டார்.

ஜி. வெங்கடசுவாமி: உலகம் முழுவதில் பார்வைக் குறைபாடு உடையவர்கள் அனைவருக்கும் பார்வை தரப்போகிறேன் என்று கூறியதுதான் இன்று அரவிந்த் கண் மருத்துவமனையாக உருவெடுத்துள்ளது.

டைட்டான் கைக் கடிகார நிறுவனத்தின் செர்க்லெஸ் தேசாய் உலகிலேயே மெலிய நீர் புகாத கைக் கடிகாரம் தயாரிக்க முனைந்தபோது அவருடைய வல்லுநர்களே 'அது எங்களால் இயலாத காரியம்' என்றுதான் சொன்னார்கள். இது 'ஸ்விட்சர்லாந்துகாரர்களாலேயே முடியாத விஷயம். நம்மால் எப்படி முடியும்?' என்றார்கள். ஆனால் தேசாய் விடவில்லை; அவருடைய அணியும் சளைக்க வில்லை. கடைசியில் அதே எஞ்சினியர்கள், 'அட! நம்மிடமும் இந்தத் திறமை ஒளிந்திருக்கிறதே!" என்று கண்டுபிடித்தார்கள். நம்மால் என்ன சாதிக்க முடியும் எனபதற்கு அளவுகோலாக, நாம் இதுவரை சாதித்தவற்றையே வைத்துக்கொள்வது கூடாது, அப்போது ஓர் எல்லைக்கு மேல் வளராமல் நின்றுவிடுவோம்.

மாற்றுப்பாதையில் மனம் சிந்திக்க ஆரம்பித்தவுடன் இலக்குகள் மட்டும் பெரிதாவதில்லை; மனிதர்களையும் ஒரேடியாக மாற்றிவிடுகிறது. பழகிய பாதையை மாற்றியாக வேண்டும் என்ற சவால் தோன்றியவுடன், அதைச் சாதிப்பதற்குத் தேவையான திறமைகளும் தானாகவே வளர்ந்துவிடுகின்றன.

 

தோல்விக்கு ஆயிரம் வழிகள். வெற்றிக்கு மிகக் குறைந்த வழிகள்தான்.

 

வெற்றிகளில் இருந்து கற்றுக்கொள்வது மனத்தையும் உற்சாகப்படுத்தும்.

 

வெற்றிகளும் விதிவிலக்குகளும் பல சாத்தியங்களைத் திறந்து காட்டுகின்றன

 

Nandri :Dhinam oru thagaval  - http://ceoblog.kapsystem.com/

 

ஆலந்துறையார் கட்டளை பஞ்சாயத்தில் இருக்கும் பனங்கூர் கிராமத்திற்கு தனி வலைப்பதிவு


அன்பு கிராம உறவுகளுக்கு,

வணக்கம்.

நமது பஞ்சாயத்தில் இருக்கும் பனங்கூர் கிராமத்திற்கு என்று தனி வலைப்பதிவு ஒன்றை நமது சொந்தம் காந்தி. கோ. அவர்கள் ஆரம்பித்துள்ளார். வலைப்பதிவு மிகவும் அருமையாக உள்ளது. உறவுகள் நேரம் இருந்தால் சென்று பாருங்கள்.

நண்பர் கோவிந்தராசு மகன் காந்தி, தொழில் நுட்ப துறையில் வேதியியல் பாடப் பிரிவு பயின்றுள்ளார். தற்பொழுது சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துக்கொண்டு இருக்கின்றார்.

அன்புடன்
கிராம நண்பர்கள்



திருச்சிவாழைக்குழி கிராமத்தில் பகுதி நேர அங்காடித் திறப்பு

அரியலூர், நவ. 15: அரியலூர் மாவட்டம், ஆலந்துறையார் கட்டளை ஊராட்சி, வாழைக்குழி கிராமத்தில் பகுதிநேர அங்காடி திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு தலைமை வகித்து, அங்காடியைத் திறந்துவைத்து மாவட்ட ஆட்சியர் தி.க. பொன்னுசாமி பேசியது:

அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் 411 நியாய விலைக் கடைகள் மூலம் 2.10 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெற்று வருகின்றனர். இந்தப் பகுதியில் வசித்து வரும் மக்கள் சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள ஆலந்துறையார் கட்டளை அங்காடிக்குச் சென்று பொருள்களை வாங்கி வர வேண்டி இருந்து வந்தது.

தற்போது, வாழைக்குழி கிராமத்தில் பகுதி நேர அங்காடி திறக்கப்பட்டதன் மூலம் இந்தப் பகுதி மக்கள் வாரத்தில் புதன், வியாழக்கிழமைகளில் பொருள்களை இங்கு பெற்றுக் கொள்ளலாம்.

அனைத்து நியாய விலைக் கடைகளிலும், அத்தியாவசியப் பொருள்களைத் தயாராக வைத்திருக்க வேண்டும். அங்காடிக்கு வந்து சேரும் பொருள்களில் காலதாமதம் ஏற்பட்டால் மறுநாள் வாங்கிச் செல்ல வேண்டும்.

மக்களுக்காக அரசு பல்வேறு நலத் திட்டங்களைச் செய்து வருகிறது. அரசு வழங்கும் நலத் திட்ட உதவிகளைப் பெற்று மக்கள் பயன் பெற வேண்டும் என்றார் பொன்னுசாமி.

விழாவுக்கு, அரியலூர் சட்டப்பேரவை உறுப்பினர் பாளை து. அமரமூர்த்தி முன்னிலை வகித்தார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ரெ. பிச்சை, திருமானூர் ஒன்றியக் குழுத் தலைவர் எஸ்.ஆர்.எம். குமார், ஊராட்சித் துணைத் தலைவர் வெ. குணசேகரன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் த. அறிவழகன், மண்டல இணைப் பதிவாளர் ஆர். ராமமூர்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் சிவராசு, அரியலூர் வட்டாட்சியர் கோவிந்தராஜுலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Wednesday, November 3, 2010

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

அன்பு கிராம நண்பர்கள் மற்றும் அவரது குடும்பத்தாருக்கும்,
வணக்கம்
சொந்தங்கள் அனைவருக்கும் எங்களது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
அன்புடன்
வலைபதிவு நண்பர்கள்