1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
வி.கைகாட்டி, செப். 2-
அரியலூர் அருகே சுண்டக்குடி கிராமத்தில் 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் அரியலூர் வட்டம் சுண்டக்குடி கிராமத்தில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிற்கால சோழர்களால் கட்டப்பட்ட சிதிலமடைந்த வரலாற்று சின்னமான பிரகன் நாயகி உடனுறை சோழீஸ்வரர் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் ஸ்ரீபிரசன்ன வெங்கடேசுவர பெருமாள், ஸ்ரீவினாயகர், ஸ்ரீமுருகன், ஸ்ரீகஜலெட்சுமி, ஸ்ரீகால பைரவர்,ஸ்ரீசனீஸ்வரர், மற்றும் நவக்கிரகங்கள் ஆகிய தெய்வங்களுக்கு புதிதாக விமானங்களுடன் தனி தனி சன்னதி அமைத்து ரூ.30 லட்சத்தில் திருப்பணி நடைபெற்றது.
கடந்த 30-ந் தேதி காலை 9 மணிக்கு மேல் விக்னேஸ் வரர்பூஜை, மஹா சங்கல்பம், வேதா அனுக்ஜை, ஆச்சார்ய வர்ணம் ,புண்யாக வாசணமும், பகல் 12மணிக்கு மஹா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, ப்ரவேச பலி, மிருத் சங்கிரணமும், மாலை 5 மணிக்கு மேல் அங்குரார்பணம், லக்ஷா பந்தனம், கும்ப அலங்காரம், ஸ்வாமி அம்பாள் கலாகார் ஷணம், யாகசாலை பிரவேசம், முதற்காலயாக வேள்வி பூஜை, திரவ்யா ஹூதி, பூர்ணா ஹூதி, மகா தீபாராதனை நடைபெற்றது.
நேற்று காலை 8.30 மணிக்கு மேல் விசேஷசந்தி இரண்டாம் கால யாக வேள்வி பூஜை திரவ் யாஹூதி, பூரணாஹூதி, மகாதீபாராதனை2-ம் கால பூஜை நடைபெற்றது.
மாலை 5.30 மணிக்கு மேல் மூன்றாம் கால யாக வேள்வி பூஜை, பிரம்ம சாரிபூஜை, கன்யா பூஜை, சுவாசினி பூஜை, த்ரவ்யாஹூதி, வஸ்த்ரா ஹூதி பூர்ணாஹூதி, மகா தீபா ராதனை மற்றும் 3-ம் கால பூஜை நடைபெற்றது.
நேற்று காலை 6.15 மணிக்கு மேல் லஷ்மி கணபதி பூஜை, கோ பூஜை, நான்காம் கால யாக வேள்வி பூஜை, ஸ்வர் ஸாஹூதி நாடிசந்தாம, த்ரவ் யாஹூதி மஹா பூர்ணாஹூதி மஹா தீபாராதனையும் நடை பெற்றது. பின்னர் காலை 9.20க்கு யாத்ரா தானம், கடம் புறப்பாடும், காலை 9.30 க்கு மேல் ராஜ கோபுரம், விமானத் திற்கு சிவாச்சாரியர்களால் புனித நீர் ஊற்றி கும்பாபி ஷேகம் நடத்தப்பட்டது.
விழாவில் சுண்டக்குடி ஆரம்ப சுகாதர நிலைய தலைமை மருத்துவர் மணி வண்ணன் மருத்துவர் உமா மகேஸ்வரி ஊராட்சி மன்ற தலைவர்சாமிநாதன், ஒன்றிய குழு உறுப்பினர் சுரேஷ் குமார், மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சோழிஸ்வரரின் அருளை பெற்றனர்.
கும்பாபிஷேகத்தை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.
Nandri : http://www.maalaimalar.com/2013/09/02204624/1000-year-old-temple-consecrat.html
No comments:
Post a Comment
வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க