கோவில் கும்பாபிஷேகம்

Saturday, April 19, 2014

நல்ல திட்டங்கள் கிடைக்க திமுகவை ஆதரியுங்கள்

நல்ல திட்டங்கள் கிடைக்க திமுகவை ஆதரியுங்கள்

By அரியலூர்

First Published : 13 April 2014 03:27 AM IST

தமிழகத்துக்கு நல்ல திட்டங்கள் கிடைக்க திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்றார் நடிகர் வாகை சந்திரசேகர்.

அரியலூர் மாவட்டம், வி. கைகாட்டி பகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் தொல். திருமாவளவனை ஆதரித்து வெள்ளிக்கிழமை இரவு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர் மேலும் பேசியது:

தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் 3 மாதங்களில் மின்வெட்டைச் சரி செய்து மின்மிகை மாநிலமாக மாற்றிக் காட்டுவேன் என ஜெயலலிதா கூறினார். ஆனால் 3 ஆண்டுகளாகியும் அதைச் சரி செய்யவில்லையே.

ஒவ்வொரு குடும்பத்துக்கும் 20 லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும் என்று கடந்த தேர்தலில் கூறினார். அதுவும் செயல்படுத்தப்படவில்லை, ஆனால் அதற்கு மாறாக தண்ணீர் பாட்டில் 1 லிட்டர் 10 ரூபாய்க்கு விலைக்கு விற்கப்படுகிறது.

மத்திய அரசிடம் போராடி தமிழ்நாட்டுக்குத் தேவையான திட்டங்களைத் திமுகவால் பெற்றுத் தர முடியும். எனவே திமுக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திருமாவளவனை வெற்றி பெறச் செய்யுங்கள் என்றார் அவர்.

முன்னதாக சுண்டக்குடி, ஆலந்துரையார் கட்டளை உள்ளிட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்தார். திமுக மாவட்டச் செயலர் எஸ்.எஸ். சிவசங்கர், தா. பழூர் ஒன்றியச் செயலர் க.சொ.க. கண்ணன், அரியலூர் ஒன்றியச் செயலர் ஜோதிவேல், மாவட்டத் துணைச் செயலர் நா. தனபால், அரியலூர் நகரச் செயலர் முருகேசன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தெய்வ. இளையராஜா, தொண்டரணி அமைப்பாளர் த. அறிவழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Nandri : Dinamani

 

http://www.dinamani.com/edition_trichy/ariyalur/2014/04/13/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE/article2165551.ece

 

No comments:

Post a Comment

வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க