அரியலூர் ஏ.கே.எம். ஐ.ஏ.எஸ். அகடாமியில் படித்த 11 பேர்கள் குரூப்–2 தேர்வில் தேர்ச்சி
பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, செப்டம்பர் 13, 5:40 PM IST
கருத்துக்கள்0வாசிக்கப்பட்டது31
அரியலூர், செப்.13–
அரியலூர் மாவட்ட தலை நகரத்தில் வ.உ.சி.தெருவில் ஏ.கே.எம். ஐ.ஏ.எஸ்.அகாடமி பயிற்சி மையம் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. இந்த பயிற்சி மையத்தில் தமிழ்நாடு தேர்வாணைகுழு நடத்தும் ஆசிரியர் தேர்வு சிறப்பு காவல்படை, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் குரூப்–2 தேர்வு போன்றவற்றில் தேர்வு கலந்து கொள்ள மாணவ–மாணவிகளுக்கு சிறப்பான பயிற்சி அளிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் குரூப்–4 தேர்வில் 17 பேர்களும் ஆசிரியர் பயிற்சி(டெட்) தேர்வில் 20 பேர்களும் சிறப்பு காவல்படை தேர்வில் 12 பேர்களும் கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் 7 பேர்களும் குரூப்–2 தேர்வில் 8 பேர்களும் தேர்ச்சி பெற்று உள்ளார்கள்.
அதனை தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதத்தில் தொடங்கிய குரூப்–2 தேர்வில் 12 மாணவ–மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் நடத்திய நகராட்சி ஆணையர், மற்றும் சார்பதிவாளர் தேர்வில் 11 மாணவ–மாணவிகள் தேர்ச்சி பெற்று பிரதான தேர்வுக்கு தகுதியாகியுள்ளார்கள்.
ஏ.கே.எம். ஐ.ஏ.எஸ். அகாடமி நிறுவனர் டாக்டர் கதிர் கணேசன், இயக்குனர் மற்றும் பயிற்சியாளர் ராஜேஷ் ஆகியோர்கள் வாழ்த்து தெரிவித்து பாராட்டி இனிப்புகள் வழங்கினார்கள்.
No comments:
Post a Comment
வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க