கோவில் கும்பாபிஷேகம்

Tuesday, February 3, 2015

ஊரக வளர்ச்சி துறை வேலை விண்ணப்பிக்க அழைப்பு

அரியலூர்:அரியலூர் மாவட்ட கலெக்டர் சரவண வேல்ராஜ் வெளியிட்ட அறிக்கை:அரியலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊரக அலகில் பஞ்., யூனியன்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்கள், இன சுழற்சி அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது.

அரியலூர், திருமானூர், செந்துறை, ஜெயங்கொண்டம், தா.பழூர், ஆண்டிமடம் உள்ளிட்ட இடங்களில் உள்ள பஞ்., யூனியன் அலுவலகங்களுக்கான இரவு காவலர் பணியிடங்கள் மற்றும் ஒரு சில இடங்களில் அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளது. காலிப்பணியிடம் மற்றும் அதற்கான இனசுழற்சி பற்றிய முழு விபரம் சம்பந்தப்பட்ட பஞ்., யூனியன் வளாகத்தில், பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.இரவு காவலர் பணிக்கு ஆண் விண்ணப்பதாரர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். எட்டாம் வகுப்புக்கு கீழ் படித்திருக்க வேண்டும். சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். கல்வி சான்று, சாதி சான்று, நன்னடைத்தை சான்று, முன்னுரிமை கோருதல் சலுகை உள்ளிட்டவற்றுடன் விண்ணப்பதாரர் அந்தந்த பஞ்., யூனியன்களில் வசிப்பதற்கான சான்று பெற்றிருக்க வேண்டும். இதற்கான நகல்களுடன் மாவட்ட கலெக்டர் (வளர்ச்சி) அலுவலகம், அரியலூர். என்ற முகவரிக்கு, பிப்ரவரி, 10ம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Nandir : http://www.dinamalar.com/district_detail.asp?id=1175694

குரூப் 1 தேர்வில் வென்றோருக்குப் பாராட்டு

குரூப் 1 தேர்வில் வென்றோருக்குப் பாராட்டு
By
அரியலூர்
First Published : 02 February 2015 01:59 AM IST


டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வில் அரியலூரைச் சேர்ந்த 9 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

டிஎன்பிஎஸ்சி சார்பில், துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட 79 பதவிகளுக்கான குரூப் 1 முதல்நிலைத் தேர்வுகள் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 20 ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. இதில் அரியலூர் ஏகேஎம் ஐஏஎஸ் அகாதெமியில் பயின்ற தினேஷ், செந்தில், முத்தமிழ்ச்செல்வன், கலையரசன், இலுப்பையூர் சின்னத்துரை, பொய்யாதநல்லூர் சிவராமகிருஷ்ணன், கரைவெட்டிபரதூர் பிரபாகரன்,

காட்டுப்பிரிங்கியம் சுதா, மற்றும் பயிற்சி மையத்தின் இயக்குநர் ராஜேஷ் உள்ளிட்ட 9 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களை பயிற்சி மைய நிறுவனர் கதிர். கணேசன் பாராட்டினார்.

 

Nandri : Dinamani

 

மகனை அடித்துக் கொன்ற தந்தை கைது

மகனை அடித்துக் கொன்ற தந்தை கைது

By அரியலூர்,
First Published : 02 February 2015 01:56 AM IST

அரியலூர், மாவட்டம், கீழப்பழூவூர் காவல் சரகம்,சுண்டக்குடி காலனித் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் (55). இவரது மகன் பாஸ்கர் (35). இருவரும் விவசாயக் கூலித் தொழிலாளிகள்.

இவர் அடிக்கடி குடித்து விட்டு தகராறு செய்ததால், இவரது மனைவி லெட்சுமி தனது 2 குழந்தைகளுடன், தனது தாய் வசிக்கும் நாகமங்கலத்துக்குச் சென்று விட்டார். பெருமாளும், பாஸ்கரும் ஒரே வீட்டில் இருந்தனர்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை பெருமாள் தனது மகனிடம் வீட்டுக்கு கூரை போடுமாறு கூறியுள்ளார், ஆனால் தன்னிடம் பணமில்லை என்று பாஸ்கர் கூறியதால் இருவருக்கிடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது பெருமாள் மூங்கில் குச்சியால் தாக்கியதில் பாஸ்கர் அதே இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து கீழப்பழூவூர் காவல் நிலைய ஆய்வாளர் ரவீந்திரபிரகாஷ் வழக்குப் பதிந்து பெருமாளை கைது செய்தார்.

 

Nandri : Dinamani