அரியலூர்:அரியலூர் மாவட்ட கலெக்டர் சரவண வேல்ராஜ் வெளியிட்ட அறிக்கை:அரியலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊரக அலகில் பஞ்., யூனியன்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்கள், இன சுழற்சி அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது.
அரியலூர், திருமானூர், செந்துறை, ஜெயங்கொண்டம், தா.பழூர், ஆண்டிமடம் உள்ளிட்ட இடங்களில் உள்ள பஞ்., யூனியன் அலுவலகங்களுக்கான இரவு காவலர் பணியிடங்கள் மற்றும் ஒரு சில இடங்களில் அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளது. காலிப்பணியிடம் மற்றும் அதற்கான இனசுழற்சி பற்றிய முழு விபரம் சம்பந்தப்பட்ட பஞ்., யூனியன் வளாகத்தில், பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.இரவு காவலர் பணிக்கு ஆண் விண்ணப்பதாரர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். எட்டாம் வகுப்புக்கு கீழ் படித்திருக்க வேண்டும். சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். கல்வி சான்று, சாதி சான்று, நன்னடைத்தை சான்று, முன்னுரிமை கோருதல் சலுகை உள்ளிட்டவற்றுடன் விண்ணப்பதாரர் அந்தந்த பஞ்., யூனியன்களில் வசிப்பதற்கான சான்று பெற்றிருக்க வேண்டும். இதற்கான நகல்களுடன் மாவட்ட கலெக்டர் (வளர்ச்சி) அலுவலகம், அரியலூர். என்ற முகவரிக்கு, பிப்ரவரி, 10ம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Nandir : http://www.dinamalar.com/district_detail.asp?id=1175694
No comments:
Post a Comment
வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க