கோவில் கும்பாபிஷேகம்

Sunday, February 11, 2018

அறிவியல் கண்காட்சியில் வென்ற பள்ளி மாணவிக்கு பாராட்டு

அறிவியல் கண்காட்சியில் வென்ற பள்ளி மாணவிக்கு பாராட்டு

கும்பகோணத்தில் அண்மையில் நடைபெற்ற அறிவியல் தொழில்நுட்பக் கண்காட்சியில் முதல் பரிசு பெற்ற அரியலூர் கீழப்பழுவூர் அருணாச்சலா மெட்ரிக். பள்ளி மாணவி கௌரவிக்கப்பட்டார்.


கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரியில் அறிவியல் தொழில்நுட்பக் கண்காட்சியில் அண்மையில் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகேயுள்ள அருணாச்சலா மெட்ரிக். பள்ளி 8 ஆம் வகுப்பு மாணவி கு. தாரா ஸ்ரீ முதல் பரிசு பெற்றார். மேலும் அவர்,

இஸ்ரோ விண்வெளி மையத்துக்கு செல்வதற்கு தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து மாணவி தாரா ஸ்ரீ, தனது பரிசு, கேடயத்தை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி, பள்ளி தாளாளர் டி. அருணாச்சலம் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகளிடம் காண்பித்து பாராட்டு பெற்றார்.

Thursday, January 18, 2018

அச்சுறுத்தும் சுண்ணாம்புக்கல் சுரங்கங்கள்! சிமென்ட் ஆலைகளுக்கு எதிராகக் கொந்தளித்த கிராம மக்கள்

அச்சுறுத்தும் சுண்ணாம்புக்கல் சுரங்கங்கள்! சிமென்ட் ஆலைகளுக்கு எதிராகக் கொந்தளித்த கிராம மக்கள்



 எம்.திலீபன்



சிமென்ட் ஆலைகளுக்குச் சொந்தமான சுண்ணாம்புக்கல் சுரங்கங்களை மூடும் வரையிலும் விடப்போவதில்லை என்று பனங்கூர் கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அரியலூர் மாவட்டம் பனங்கூர் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்கிராமத்தைச் சுற்றி ராம்கோ, செட்டிநாடு, டால்மியா மற்றும் அரசு சிமென்ட் ஆலைகளுக்குச் சொந்தமான 7-க்கும் மேற்பட்ட சுண்ணாம்புக்கல் சுரங்கங்கள் உள்ளன. இதில் சுரங்கம் தோன்றுவதற்காக இரவு நேரத்தில் வெடி வைப்பதால் வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. இரவு பகல் பாராமல் கனரக வாகனங்கள் இயக்கப்படுவதால் சுற்றுச்சூழல் மாசடைந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பல்வேறு நோய்கள் ஏற்படுவதோடு விவசாயமும் பாதிக்கப்படுகின்றன.

அடிக்கடி பல்வேறு விபத்துகள் ஏற்படுகின்றன. அரசின் விதிகளை மீறி அதிக ஆழத்தில் சுணணாம்புக்கல் சுரங்கங்கள் தோண்டப்படுவதால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டு அருகில் உள்ள கிராமங்களிலும் குடிநீர் பிரச்னை ஏற்படுகின்றன. இவ்வாறு மக்களுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் சுண்ணாம்புக்கல் சுரங்கங்களை அரசு ஆய்வு செய்து அரசின் விதிமுறைகளை மீறிய சுரங்கங்களை மூட வேண்டும். அந்த ஆலையின் உரிமத்தைத் தடை செய்ய வேண்டும் எனப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பனங்கூர் கிராமத்தில் உள்ள இளைஞர்கள், பொதுமக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.