கோவில் கும்பாபிஷேகம்

Sunday, February 6, 2011

குறளின் குரல் - 07.02.11

பால்: இன்பத்துப்பால்
இயல்: களவியல்
அதிகாரம்: 115. அலர் அறிவுறுத்தல்
குறள் எண்: 1144

கவ்வையாற் கவ்விது காம மதுவின்றேற்
றவ்வென்னுந் தன்மை யிழந்து.

கவ்வையான் கவ்விது, காமம்; அது இன்றேல்,
தவ்வென்னும், தன்மை இழந்து.

விளக்கம்:

ஊரார் எம் காதலைப் பழித்துப் பேசுவதால் என்னுடைய காதல் உணர்வானது மேலும் மேலும் வளர்ந்து இன்பம் தருகிறது. அந்தப் பழிச்சொல் மட்டும் இல்லையென்றால் இன்பம் தரும் தன் தனித்தன்மையை இழந்து, அக்காதல் உணர்வு குறைந்து சுவையற்றதாகிவிடும்.

 

 பழிச்சொல்லும் காதல் உணர்வை வளர்த்து இன்பம் தரும் விந்தை காதலில் மட்டுமே சாத்தியம்.


 

அலர்மகிழ்ச்சி, மலர்ந்த பூ, நீர், மஞ்சள், மிளகுக்கொடி, (இங்கே) பழிச்சொல்

உடன்போக்காகத் தலைவி தலைவனுடன் சென்ற பிறகு அவளது களவு வாழ்க்கையைப் பற்றி அயலவர் பலரும் அறிந்து கொள்வர். அதன் தொடர்ச்சியாய் அது பற்றியே பேசுவர். அதற்கு அலர் என்று பெயர்.

 

கவ்வை - ஒலி, துன்பம், பொறாமை, கவலை, கள், செயல், எள் இளங்காய், ஆயிலியம், துன்பம், பழிச்சொல்

 

தவ்வுதல் குறைதல்

 

Nandri : malar

 

No comments:

Post a Comment

வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க