பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 08. அன்புடைமை
குறள் எண்: 77
என்பி லதனை வெயில்போலக் காயுமே
யன்பி லதனை யறம்.
என்பு இலதனை வெயில் போலக் காயுமே
அன்பு இலதனை அறம்.
விளக்கம்:
எலும்பு இல்லாத புழுக்களின் உடம்பை வெயில் காய்ந்து வருத்தும். அதுபோல அன்பு இல்லாத உயிர்களை அறமானது வருத்தி வதைக்கும்.
அன்பு இல்லாதவர்கள் அறம் எதுவென்று அறிந்து கொண்டு செயலாற்ற முடிவதில்லை. அன்பும் அறமும் வேறு வேறாகப் பிரித்துப் பார்க்க முடியாதவை. அன்பு உயிர்களின் ஆற்றலை வளர்க்கும். அன்பு, அறத்தின் வழி உயிரை நடத்தித் துன்பங்கள் தாங்கிக் கொள்ளும் ஆற்றலைத் தரும். அன்பு இல்லாதபோது அறம் இன்றிப் போகும். அந்த நிலை உயிர்களை வாட்டி வதைக்கும்.
Nandri : மலர்சபா
No comments:
Post a Comment
வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க