கோவில் கும்பாபிஷேகம்

Sunday, October 9, 2011

அக். 18-ல் விமானப் படைக்கு ஆள்சேர்ப்பு முகாம்

அரியலூர், அக். 6: தஞ்சையில் அக்டோபர் 18 ஆம் தேதி விமானப் படைக்கான ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது.

 

 இதுகுறித்து விமானப்படை ஆள் சேர்ப்பு பிரிவு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

 

 இந்திய விமானப் படையில் குருப் ஒய் பிரிவில் (நான்-டெக்னிக்கல் டிரேடு) தொழில்பிரிவுகளில் பணியாற்றுவதற்கு விருப்பம் உள்ள இளைஞர்கள் இந்த ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்கலாம்.

 

 1991, ஜனவரி 1 முதல் 1995, மார்ச் 31 ஆம் தேதிக்குள் பிறந்த தமிழகம் மற்றும் புதுவை மாநிலத்தைச் சேர்ந்த திருமணமாகாத இளைஞர்கள் தஞ்சாவூரில் அக்டோபர் 18 ஆம் தேதிதியில் நடைபெறும் ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்கலாம்.

 

 ஆட்டோடெக், ஜிடிஐ, ஐஏஎப்(பி), மியூஸிடிசியன் டிரேடுகள் தவிர குருப் ஒய் பிரிவில் பணியாற்றுவதற்காக இந்த ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது. அக்டோபர் 18 ஆம் தேதி காலை 6 மணி முதல் 10 மணிக்குள் இந்த முகாம் நடைபெறும்.

 

 பிளஸ் 2 படிப்பில் கலை, அறிவியல் அல்லது வணிகவியல் பாடங்களுடன் குறைந்தபட்சம் 50 சத மதிப்பெண்கள் பெற்று தேர்வாயிருக்க வேண்டும் அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பாலிடெக்னிக் கல்லூரியில் ஏதாவதொரு பொறியியல் பிரிவில் மூன்று ஆண்டு பட்டயப் படிப்பில் குறைந்தபட்சம் 50 சத மதிப்பெண்கள் பெற்று தேர்வு பெற்றிருக்க வேண்டும்.

 

 முகாமில் பங்கேற்பவர்கள் தங்களது எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 அல்லது பட்டயப் படிப்புக்கான மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மை சான்றிதழ்கள், இதரச் சான்றிதழ்கள், (என்சிசி சான்றிதழ் இருந்தால் கொண்டு வரலாம்), பென்சில், ரப்பர், ôர்ப்பனர், கறுப்பு அல்லது நீல நிற பந்துமுனை பேனா, அனைத்துச் சான்றிதழ்களின் நகல், 2 வெள்ளை கவர்கள், பிளஸ் 2 படிப்பை தமிழகம், புதுவையில் படிக்காதவர்கள் இருப்பிடச் சான்றிதழ், சமீபத்தில் எடுக்கப்பட்ட வண்ணப் புகைப்படம் 7 ( பாஸ்போர்ட் அளவு ), உடல்திறன் தேர்வுக்கான ஸôர்ட்ஸ் மற்றும் ஷூ ஆகிய விளையாட்டு உடைமைகளையும் தவறாமல் கொண்டு வரவேண்டும்.

 

 எழுத்து மற்றும் உடல்திறன் தேர்வில் தேர்வானவர்களுக்கு மட்டும் விண்ணப்பங்கள் வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு

 

 WWW.indianairforce.nic.in Gu\  என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். மேலும், 044-22390561, 044-22396565 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க