கோவில் கும்பாபிஷேகம்

Sunday, October 9, 2011

திமுக வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு

 

அரியலூர், அக். 3: அரியலூர் நகர்மன்றத் தலைவர், உறுப்பினர்கள் பதவிக்கு  போட்டியிடும் திமுக வேட்பாளர்கள், நகரின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

 

  அரியலூர் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடும் ஆர். முருகேசன், 6, 8, 13, 15- வது வார்டுகளில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தார். 

 

  இதுபோல, 8-வது வார்டுக்குள்பட்ட அழகப்பாநகர், பெரியார்நகர் பகுதிகளிலும், 6- வது வார்டுக்குள்பட்ட கபிரியேல் தெரு, காளியம்மன் கோயில் தெரு, கருத்தான்படையாச்சித் தெரு பகுதிகளிலும், 13-வது வார்டுக்குள்பட்ட பெரிய அரண்மனைத் தெரு, ஒப்பிலாத அம்மன் கோயில் தெரு, கண்ணுடையான் கோயில் தெரு பகுதிகளிலும், 15-வது வார்டுக்குள்பட்ட மேல அக்ரஹாரம், முனியப்பன் கோயில் தெரு பகுதிகளிலும் திமுக வேட்பாளர்கள் வாக்கு சேகரித்தனர்.   அப்போது, திமுக வேட்பாளர்கள் முருகன், விஜயலட்சுமி செல்வராஜன், லட்சுமி, சந்திரகலா ஆகியோரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். கட்சி நிர்வாகிகள் எழில் மாறன், சின்ன முருகன், சாமிநாதன், ரவீந்திரன், செல்வராஜ், பெருமாள், ஏ.கே. ராஜா உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

 

 

No comments:

Post a Comment

வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க