மாநில அளவிலான சிறப்பு விளையாட்டு விடுதியில் சேர அழைப்பு
By அரியலூர்,
First Published : 06 April 2015 12:57 AM IST
மாநில அளவிலான சிறப்பு விளையாட்டு விடுதியில் சேருவதற்கான தேர்வு ஏப்.16-ல் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக அரியலூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகுநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை நேரு விளையாட்டரங்கத்தில் இயங்கி வரும் சிறப்பு விளையாட்டு விடுதியில் மாணவ, மாணவிகளுக்கான சேர்க்கை (2015-16 ஆண்டு) நடைபெற உள்ளது.
தடகளம், கூடைப்பந்து, குத்துச்சண்டை, கையுந்துபந்து, மற்றும் டேக்வாண்டோ ஆகிய விளையாட்டுகளில் சிறந்த பங்களிப்பு அளித்து வரும் மாணவர்களுக்கும், தடகளம், கால்பந்து, மற்றும் கையுந்து பந்து ஆகிய விளையாட்டுகளில் சிறப்பிடம் பெற்று விளங்கும் மாணவிகளுக்கும் விளையாட்டு விடுதியில் சேருவதற்கான தேர்வு ஏப். 16,17 ஆம் தேதிகளில் சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது.
விடுதியில் சேர,குறைந்த பட்ச தகுதியாக அங்கீகரிக்கப்பட்ட தனித்திறன் போட்டிகளில் முதல் 3 இடங்களில் வென்றவராக இருக்க வேண்டும். குழுப் போட்டிகளில் பங்கேற்பவராயிருப்பின், முதலிடம் (அல்லது) 2 ஆம் இடம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும், 185 செ.மீ உயரத்திற்கு மேல் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
தகுதிகள்: இத்தேர்வில் கலந்து கொள்ள விளையாட்டுகளில் ஆர்வமுள்ள, 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது பயிலும் நபர்களும் விண்ணப்பிக்கலாம். கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளும் விண்ணப்பிக்க தகுதியுடையோராவர்.
வயது வரம்பு: 1.1.2015 அன்று 22 வயதுக்குள்பட்டவராக இருக்க வேண்டும்.
சேர்க்கை விண்ணப்பங்களை அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்க அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Nandri : dinamani
No comments:
Post a Comment
வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க