கல்லங்குறிச்சி கலியுக வரதராஜப் பெருமாள் திருக்கல்யாணம்
By அரியலூர்
First Published : 04 April 2015 05:10 AM IST
கல்லங்குறிச்சி கலியுக வரதராஜப் பெருமாள் திருக்கல்யாணம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
அரியலூர் அருகேயுள்ள கல்லங்குறிச்சியில் பிரசித்தி பெற்ற கலியுக வரதராஜப் பெருமாள் கோயில் உள்ளது. நூற்றாண்டு பழமையான இக்கோயிலின் ஆண்டு திருவிழா மார்ச் 28 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து தினமும் பெருமாள் சூரிய வாகனம், வெள்ளி பல்லக்கு, வெள்ளி சிம்ம வாகனம், புன்னை மர வாகனம், வெள்ளி சேஷ வாகனம், வெள்ளி யானை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
பூதேவி, ஸ்ரீதேவி தாயாருடன் கலியுக வரதராஜப் பெருமாள் எழுந்தருளினார். பட்டாச்சாரியார்கள் திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர். முன்னதாக பக்தர்கள் பெருமாளுக்கு பழம், இனிப்பு வகைகள், பட்டாடைகள், பூக்கள், உள்ளிட்ட பொருள்களை சீர்வரிசையாக எடுத்து வந்தனர். இதில் அரியலூர், பெரம்பலூர், கடலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை தரிசித்தனர்.
No comments:
Post a Comment
வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க