இன்றைய காலகட்டத்தில் நில உரிமை (பட்டா / சிட்டா) விவரங்கள் பார்த்து தெரிந்துகொள்ளுவது மிகவும் முக்கியம். இன்று நாம் பயன்படுத்திக்கொண்டு இருக்கும் நிலம் நமது பாட்டன் / முப்பட்டனுடையது. காலம் காலமாக நாம் அனுபவித்து வருவது. அதனால் நம்மிடம் இருக்கும் நிலம் அரசாங்க ஆவணத்தில் யாருடைய பெயரில் இருக்கிறது. நிலத்தின் உரிமையாளர்கள் என்று யாருடைய பெயர்களை குறிப்பிட்டுள்ளார்கள் என்பதை தெரிந்து கொள்ளுவது அவசியம்.
நீங்கள் உங்களுடைய நிலத்தின் உரிமையாளர் மற்றும் ஏனைய விபரங்களை தெரிந்துகொள்ள கீழ் உள்ள இணைய தளத்தில் சென்று.
http://edistrict.tn.gov.in:8080/eservicesnew/land/chitta_ta.html?lan=ta
01. மாவடத்தை தேர்வு செய்யவும் - அரியலூர்
02. வட்டத்தை தேர்வு செய்யவும் - அரியலூர்
03. கிராமத்தை தேர்வு செய்யவும் - நான் ஆலந்துறையார் கட்டளை.
04. பட்டா எண் கொடுக்கவேண்டும். இது நம்மிடம் உள்ள பட்டா புத்தகத்தில் இருக்கும். அதில் உள்ள பட்டா எண்ணை கொடுக்கவும்.
05. அடுத்ததாக நாம் புல எண் என்பதை கொடுக்க வேண்டும். இந்த புல எண் 99/999ஆ இது போன்ற வடிவத்தில் இருக்கும். இதில் முதலில் உள்ள இரண்டு எண்கள் புல எண்களாகும் அடுத்து உள்ள மூன்று எங்கள் உட்பிரிவு எண்களாகும்.
குறிப்பு: நகராட்சி, மாநகராட்சி, மற்றும் கிராம நத்தம் இல்லாத நிலங்களுக்கு மட்டும் இச்சேவை பொருந்தும்.
No comments:
Post a Comment
வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க