கோவில் கும்பாபிஷேகம்

Tuesday, June 9, 2015

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் - UDAYARPALAYAM

அரியலூர்

உடையார்பாளையம் (ஆங்கிலம்:Udayarpalayam) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பேரூராட்சி ஆகும்.[5][6] உடையார்பாளையம் நகரில் புகழ்மிக்க கோவில்கள் பல உள்ளன. அவற்றுள் சிறீ பயற்ணீநாத சுவாமி ஆலயம் உலகச் சிறப்பு வாய்ந்தது. இக்கோவில் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

பெயர்க்காரணம், தமிழ்நாட்டில் உள்ள பழைய ஜமீன்களுள் உடையார்பாளையம் ஒன்று. வீரத்திற்கும் தியாகத்திற்கும் கல்விக்கும் பெயர் பெற்ற பல ஜமீன்தார்கள் இதனைச் சிறப்புடன் ஆண்டிருக்கிறார்கள். இது 'காலாட்கள் தோழ உடையார்கள்' தங்கள் படைகளுடன் தங்கிய இடம் மட்டுமல்லாமல் பல்லவர்களின் வழித்தோன்றல்களான வன்னியகுல சத்திரியர்கள் 350க்கும் மேற்பட்ட கிராமங்களை ஆட்சி செய்த சமஸ்தானத்தின் தலைநகரம் என்பதால் இந்நகருக்கு 'உடையார்பாளையம்' என்னும் பெயருண்டானது.

புராணக் காலபெயர்கள் 
ஜில்லிகா வனம்
திருப்பத்ராரணியம்
திருமுற்கபுரி
திருப்பயறணீச்சுரம்

பிற பெயர்கள்
கோயில்கள் நகரம்
ஜமீன்தார் நகரம்
ஏழைகளின் பட்டு நகரம்
பாளையக்காரர் ஆட்சிக்காலத்தில் இரண்டாம் காஞ்சிபுரம் நகராகவே இந்நகரம் இருந்துள்ளது.

ஆன்மிகப் பெருமை

உடையார்பாளையம் நகரத்தில் பலகாலம் முந்தைய வரலாற்றுச் சின்னங்களும், தொன்மையான கோயில்கள் அமைந்திருப்பதால் வரலாற்று மற்றும் ஆன்மிக சுற்றுலாத் தலமாக உள்ளது. இவ்வூருக்குப் திருப்பத்ராரணியம், திருமுற்கபுரி, திருப்பயறணீச்சுரம் முதலிய பல பெயர்கள் உண்டு.

முன்பு, இவ்வூர் வழியே சென்ற வணிகன் ஒருவன் மிளகுக்கு அக்காலத்தில் அதிக வரி விதிக்கப்பட்டதால் அவற்றை பயிறு என்று பொய் கூறிக் குறைந்த வரி செலுத்திவிட்டுக் கொண்டு செல்ல, விருத்தாச்சலம் சென்று பார்க்கும் போது மிளகெல்லாம் பயிறாகியிருக்கவே, இத்தல சிவபெருமான், வணிகன் பொய் சொல்லிச் சென்றதற்கு அளித்த தண்டனை என்பதுணர்ந்து இங்கு வந்து வழிபட்டு முறையிட்டு இறையருளால் பயிறெல்லாம் மீண்டும் மிளகாக மாறப்பெற்றான். இதனாலேயே இத்தல இறைவனாருக்கு "பயறணி நாதர்" என்ற திருப்பெயரும், ஊருக்கு "பயறணீச்சுரம்" என்ற பெயரும் ஏற்பட்டன. [8]

இங்கே உள்ள "சிறீ பயறணீசுவரர் ஆலயம்" தமிழகத்தின் தொன்மையான கோயில்களில் ஒன்று. சுவாமியின் திருநாமம் வடமொழியில் முற்கபுரீசுவரர் எனவும் தமிழில் பயறணீநாதர் எனவும் மற்றும் அம்பிகையின் திருநாமம் தமிழில் நறுமலர்ப்பூங்குழல்நாயகி எனவும் வடமொழியில் சகுந்தளாம்பிகை எனவும் அழைக்கப்படுகிறது. இவ்வாலயம் அரியலூர் மாவட்டத்தின் சுற்றுலா இடமாகும்.

இங்குள்ள வில்வளைத்த பிள்ளையார் அருச்சனனுக்கு காண்டீப வில்லை வளைத்துக் கொடுத்தவர் என்று ஐதீகம். இவர் திருக்கரத்தில் ஒரு வில் உள்ளது

சோழர்-பல்லவர் காலக் கலை நகரம்

அரியலூர் மாவட்டத்தின் மத்திய பகுதியில் அமைந்திருக்கும் வரலாற்று மற்றும் ஆன்மிக சிறப்பு வாய்ந்த நகரம் உடையார்பாளையம்.

பழைமை வாய்ந்த இந்நகரைத் தலைமையகமாகக் கொண்டு பல ஊர்களை பாளையத்துக்காரர்கள் ஆண்டார்கள். இன்றளவிலும் இந்நகரில் அரண்மனை சிதலடைந்த வடிவில் இருக்கிறது. இன்றளவும் அங்கே அரச வம்சத்தினர் வாழ்ந்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் அக்காலத்திலிருந்து நகரத்தின் உள்கட்டமைப்பு செம்மையாக திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை. இங்குள்ள சிவன் கோயில் உள்கட்டமைப்பில் தமிழகளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது.[சான்று தேவை] இங்கு சிதிலமடைந்த பெருமாள் கோவில் ஒன்றும் உள்ளது.

பல்லவர்களின் வழித்தோன்றல்களான வன்னியகுல சத்திரியர்கள் [9] "காலாட்கள் தோழ உடையார்" என்ற பட்டபெயருடன் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியில் ஆட்சி செய்து வந்தனர். அதன் அடையாளமாக 30 ஏக்கர் பரப்பில் அரண்மனையும், பீரங்கி, துப்பாக்கி, வாள்கள், வேல்கம்புகள், அம்பாரி, பல்லக்கு உள்ளிட்ட பொருட்கள் அங்கு கொட்டிக் கிடக்கின்றன. "தமிழ்த் தாத்தா" . வே. சாமிநாத ஐயர் உள்ளிட்ட அறிஞர்களை உடையார்பாளையம் அரசர்கள் ஆதரித்தனர்.

பழமொழி: உள்ளூரில் ஓணான் பிடிக்காதவன், உடையார்பாளையம் போய் உடும்பு பிடிப்பானா?

பொருள்: உள்ளூரில் ஒரு சிறு செயல் செய்யத் தெரியாதவன், முன்பின் தெரியாத ஒரு பெரிய ஊருக்குப் போய் அங்கு ஒரு பெரிய செயலை செய்து காட்டுவானா?

விளக்கம்: உடையார்பாளையம் என்பது பல்லவர்களின் வழித்தோன்றல்களான வன்னியகுல சத்திரியர்கள் அரசாண்ட ஒரு சமஸ்தானம். உள்ளூரிலேயே சாதாரண மனிதன் என்று கருதப்படுபவன் எப்படி ஒரு அரசுப் பகுதியில் ஒரு வீரச்செயலை செய்துகாட்ட முடியும் என்பது செய்தி.


No comments:

Post a Comment

வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க