கோவில் கும்பாபிஷேகம்

Saturday, June 20, 2015

அரியலூர் மாவட்டத்தில் 2–வது கட்டமாக 101 கிராம ஊராட்சிகளில் விளையாட்டு போட்டி

அரியலூர் மாவட்டத்தில் 2–வது கட்டமாக 101 கிராம ஊராட்சிகளில் விளையாட்டு போட்டி
பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, ஜூன் 20, 2:50 PM IST கருத்துக்கள்0வாசிக்கப்பட்டது8 Share/Bookmark printபிரதி
அரியலூர் மாவட்டத்தில் 2–வது கட்டமாக 101 கிராம ஊராட்சிகளில் விளையாட்டு போட்டி
அரியலூர், ஜூன் 20–

அரியலூர் மாவட்டத்தில் 2015–ஆம் ஆண்டிற்கு இரண்டாம் கட்டமாக மீதமுள்ள 101 கிராம பஞ்சாயத்துகளுக்கு கிராமப்புற விளையாட்டுப்போட்டிகள் (20.06.2015 மற்றும் 21.06.2015 ஆகிய நாட்களில்) நடத்தப்படவுள்ளது.

அரியலூர் ஒன்றியத்தில் ஆலந்துரையார்கட்டளை, இடையத்தாண்குடி, அஸ்தினாபுலம், சீனிவாசபுரம், உசேனாபாத், ஆண்டிப்பட்டாக்காடு, இலுப்பையூர், மணக்கால், நாகமங்கலம், உள்பட 18 கிராம ஊராட்சிகளிலும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் ஓலையூர், புதுக்குடி, ஸ்ரீராமன், தேவனூர், கருக்கை, கடுகூர், கோவில் வாழ்க்கை, மேலூர், உள்பட 18 கிராம ஊராட்சிகளிலும்,

செந்துறை ஒன்றியத்தில் ஆதனக்குறிச்சி, அசாவீரன் குடிக்காடு, கீழமாளிகை, மணக்குடையான், நாகல்குழி, நமங்குணம், சன்னாசிநல்லூர், அயன்தத்தனூர், மணப்பத்தூர், நக்கம்பாடி, பாளையக்குடி, சிறுகடம்பூர், துளார், வீராக்கன் ஆகிய 14 கிராம ஊராட்சிகளிலும், தா.பழூர் ஒன்றியத்தில் ஆதிச்சனூர், இடங்கன்னி, வாளைக்குறிச்சி, அம்பாப்பூர், உள்பட 17 கிராமப்பஞ்சாயத்துகளிலும் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

போட்டிகள் கிராம பஞ்சாயத்தினை சேர்ந்த 30 வயதிற்கு கீழ் உள்ள ஆண் ,பெண்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும். போட்டிகளில் கலந்துகொள்ள அந்தந்த கிராமத்திற்கு உட்பட்டவர்கள் மட்டும் தங்கள் தேர்தல் அடையாள அட்டை அல்லது பொது விநியோக அடையாள அட்டையை காண்பித்து அதன் அடிப்படையில் போட்டியாளர்கள் ஊராட்சி எழுத்தரிடம் தங்கள் பெயர் (ஆண்,பெண்) வயது, விலாசம், தொலைபேசி எண் ஆகியவற்றை பதிவு செய்துகொள்ள வேண்டும்.

தடகளம் (ஆண்கள் மற்றும் பெண்கள்), கையுந்து பந்து (ஆண்கள் மற்றும் பெண்கள்), கபாடி (ஆண்கள் மற்றும் பெண்கள்), கால் பந்து (ஆண்கள் மட்டும் ஆகிய போட்டிகள் நடத்தப்பட உள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு தனியாக இரு தடகளப் பிரிவுளில் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. போட்டிகள் கிராம ஊராட்சிகளில் உள்ள பள்ளி விளையாட்டு மைதானம், பொதுதிடல் ஆகியவற்றில் நடைபெற உள்ளது.

ஊராட்சிகளில் அமைந்துள்ள சுய உதவிக்குழுக்கள், இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் இப்போட்டிகளில் முழுமையாக பங்கேற்கலாம். போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப்பெறுபவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.

போட்டிகளில் விளையாட்டு வீரர்கள், வீராங்கணைகள் அவரவர் கிராம ஊராட்சிகளில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

 

No comments:

Post a Comment

வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க