அரசுப் பள்ளிகளில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவர்கள்
By dn, அரியலூர்
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அரியலூர் மாவட்ட அரசுப் பள்ளிகளில் வெள்ளூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ். சரண்யா 490 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார்.
இவர் பெற்றுள்ள மதிப்பெண்கள்: தமிழ்-99, ஆங்கிலம்-91, கணிதம்-100, அறிவியல்-100, சமூக அறிவியல்-100. சுண்டக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி என். அனிதா, கீழகாவட்டாங்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ஏ. அனுசுயா, மருதூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் ஆர். ராகுல் ஆகிய 3 பேர் 486 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் இரண்டாமிடத்தைப் பெற்றனர்.
கண்டக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி எம். ராதா, அரியலூர் மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவர் டபுள்யு. பாலாஜி, சின்னவளையம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர் வி. குரு, பெரியத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவி எஸ். செந்தாமரைச்செல்வி ஆகிய 4 பேர் 485 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் மூன்றாமிடம் பெற்றனர்.
Nandri : Dinamani
No comments:
Post a Comment
வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க