11 கோயில்களில் கும்பாபிஷேகம் ஏராளமானோர் தரிசனம்
Date: 2016-07-11 12:07:26
அரியலூர் : அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 11 கோயில்களில் கும்பாபிஷேகம் நடந்தது. அரியலூர் கோ.சி.நகர் விநாயகர் கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, லட்சுமி பூஜை, கோபூஜை, முதலாம் யாக சால பூஜை என பல்வேறு பூஜைகள் நடைப்பெற்றது. நேற்று காலை கடம் புறப்பாடு நிகழ்ச்சி நடைப்பெற்று, பின்னர் கோயில் கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியர்கள் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் கயர்லாபாத் அடுத்த கல்லங்குறிச்சி விநாயகர் மற்றும் மாரியம்மன் கோயில், செந்துறை அடுத்த பொய்யாதநல்லூர் காமாட்சியம்மன் கோயில், பெருமாண்டி விநாயகர், அய்யானார், செல்லியம்மன் கோயில், குவாகத்தை அடுத்த இருகளாங்குறிச்சி ஸ்ரீபாலகுமார விநாயகர் கோயில், கீழப்பழுவூர் ஆலந்துறையார் கட்டளை ஸ்ரீவிநாயகர், கருப்பசாமி, பெரியநாயகி கோயில், மலத்தான்குளம் மாரியம்மன் கோயில், தா.பழூர் அடுத்த மேலக்குடிகாடு சிவன் கோயில், மீன்சுருட்டி வெத்தியார்வெட்டு முனீஸ்வரர் கோயில், விக்கிரமங்கலம் அடுத்த கோரைக்குழி மாரியம்மன் கோயில் ஆகிய 11 கோயில்களில் கும்பாபிஷேக விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
No comments:
Post a Comment
வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க