"வேலைவாய்ப்புப் பதிவு மேற்கொள்ள பள்ளிகளில் வசதி'
By அரியலூர்
First Published : 19 July 2016 05:17 AM IST
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மதிப்பெண் சான்று வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே மாணவர்கள் மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாளன்று ஆதார் அட்டை எண், குடும்ப அட்டை, செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களை எடுத்து வந்து பதிவு செய்து கொள்ளலாம்.
அசல் சான்றிதழ் வழங்கப்படும் நாள் முதல் 15 தினங்கள் வரை வேலைவாய்ப்பு பதிவுப்பணி அந்தந்த பள்ளிகளிலேயே நடைபெறும். பதிவுப்பணி நடைபெறும் 15 நாட்களுக்கும் மதிப்பெண் சான்று வழங்க தொடங்கிய முதல் நாளையே பதிவுமூப்பு தேதியாக வழங்கப்படும்.
மேலும் https:tnvelaivaaippu.gov.in என்ற வேலைவாய்ப்புத் துறை இணையதளம் வழியாகவும் பதிவு செய்து கொள்ளலாம்.
10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற வேலைவாய்ப்புப் பதிவு செய்ய விரும்பும் அனைத்து மாணவர்களும் தவறாது இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் எ.சரவணவேல்ராஜ் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Nandri: dinamani
No comments:
Post a Comment
வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க