அரியலூர் மாவட்டத்தில் கனிம வளக் கொள்ளை: ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் விசாரணைக் குழு அமைக்க வேண்டும்: வேல்முருகன் பேட்டி
By DN, அரியலூர்
First Published : 01 April 2015 02:37 AM IST
அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் கனிம வளக் கொள்ளை குறித்து ஆய்வு செய்ய மூத்த ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்றார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி. வேல்முருகன்.
செந்துறை அருகேயுள்ள ஆலத்தியூரில் தனியார் சிமென்ட் ஆலைகளைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அவர் அளித்த பேட்டி:
அரியலூர் மாவட்டத்தில் உள்ள 9 தனியார் சிமென்ட் ஆலைகளால் விளைநிலங்கள், நீர்நிலை புறம்போக்குகள் என 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. மேலும் அரசு விதிமுறைகளை மீறி கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. மதுரையில் சகாயம் குழு ஆய்வு செய்ததைப் போல, அரியலூர் மாவட்டத்தின் கனிம வளங்கள் கொள்ளை குறித்து ஆய்வு செய்ய மூத்த ஐஏஎஸ் அதிகாரி தலைமையிலான குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும்.
சுண்ணாம்பு சுரங்கங்கள் அமைந்துள்ள இடங்களை சுற்றியுள்ள கிராம மக்களுக்கு குடிநீர், சாலை வசதி, மருத்துவ வசதி உள்ளிட்டவைகளை நிறைவேற்ற வேண்டும். சிமென்ட் ஆலைகளுக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ. 20 லட்சம் இழப்பீட்டுத் தொகை, வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும். இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், சிமென்ட் ஆலைகளுக்கு மூலப் பொருள்களை ஏற்றிச் செல்லும் லாரிகள், சிமென்ட் ஏற்றிச் செல்லும் லாரிகள் சிறைபிடிக்கப்படும் என்றார்.
Nandri :
http://www.dinamani.com/edition_trichy/ariyalur/2015/04/01/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE-/article2740907.ece
No comments:
Post a Comment
வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க