கோவில் கும்பாபிஷேகம்
Wednesday, July 22, 2020
Know your District : Ariyalur District - Population
Know your District - Ariyalur District
Ariyalur District consists of Four Taluks viz., Ariyalur,
Sendurai, Udayarpalayam and Andimadam (Andimadam Taluk is formed as per G.O.(Ms)
No. 167 Revenue(RA1(1)) Department dated : 08-05-2017) comprising of 195
Revenue Villages.
Friday, June 13, 2014
"கட்டுநாடு" பற்றி தெரிந்துகொள்ள ஒரு முயற்சி....
Thursday, June 12, 2014
Wednesday, June 11, 2014
Friday, September 17, 2010
பனங்கூர் கிராமத்தில் பகுதிநேர ரேஷன்கடை திறப்பு விழா

அரியலூர் சட்டசபை தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, ரேஷன்கடையை திறந்துவைத்து, அரியலூர் எம்.எல்.ஏ., பாளை அமரமூர்த்தி பேசியதாவது:இன்றைய காலகட்டத்தில் ரேஷன் பொருட்கள் மக்களின் அத்தியாவசிய தேவைகளில் முதலிடம் வகிப்பதாக உள்ளது. எனவே, அரசின் விதிகளை தளர்த்தி இந்த பனங்கூர் கிராமத்தில் பகுதி நேர ரேஷன்கடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.வாழைக்குழி, நானாங்கூர், நெருஞ்சிக்கோரை ஆகிய ஊர்களிலும் திருமானூர் காந்தி நகர் பகுதியிலும் பகுதி நேர ரேஷன்கடைகள் திறக்கப்படும்.
பனங்கூர் ரேஷன்கடையானது வாரம் ஒருநாள் வியாழக்கிழமையன்று இயங்கும். கூடுதல் பணியாளர் நியமிக்கப்பட்ட பிறகு, வாரம் இரண்டு நாள் இயங்க உத்தரவிடப்படும். பொதுமக்கள் இதை பயன்படுத்தி வளமாக வாழ வேண்டும்.
சுண்டக்குடி பகுதிக்கு அரியலூரிலிருந்து கூடுதல் பஸ்வசதி ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த பகுதியில் ஏற்பட்டுள்ள நல்ல முன்னேற்றம் தொடர, பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.சிதம்பரம் லோக்சபா தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுப சுந்தரசோழன், கதிர்வேல் மைன்ஸ் கணேசன், ஆர்.ஐ., லெனின் சசிக்குமார், வி.ஏ.ஓ., முருகேசன், ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ், பஞ்சாயத்து துணை தலைவர் குணசேகரன், காங்கிரஸ் வட்டார தலைவர் சௌந்தர்ராஜன், மதிவாணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.ஓட்டக்கோவில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி செயலாளர் முருகேசன் நன்றி கூறினார்.
Monday, September 6, 2010
இல்லற இன்பம்
ஒரு முறை கபீர்தாசரிடம் அவருடைய பக்த்தர் அறிவுரை கேட்க்க வந்திருந்தார். அவர் தயங்கித் தயங்கி கபீர்தாசரிடம், “எனக்கு இல்லற வாழ்க்கை இன்பமாக இல்லை! என்னுடைய மனைவியும் நானும் இன்பமாக குடும்பம் நடத்தவில்லை! எப்பொழுதும் சண்டைதான்! நான் என்ன சொன்னாலும் அவள் கேட்பதில்லை!எதிர்த்துப் பேசறா… எரிஞ்சு விழறா… கோபப்படறா… எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை என்றார்”.
கபீர்தாசர் பார்த்தார். “சரி இன்னும் கொஞ்ச நேரம் இங்கேயே இருங்கள்?”, யோசனை செய்து பதில் சொல்கிறேன்! என்று சொல்லிவிட்டு, ஒரு பெரிய நூல் கண்டை எடுத்துக் கொண்டுவந்து வீட்டிற்கு வெளியே வெளிச்சத்தில் உட்கார்ந்தார். அந்த பெரிய நூல்கண்டு சிக்கலாயிருந்தது. அதனால் கபீர்தாசர் அதில் உள்ள சிக்கல்களை ஒவ்வொன்றாக பிரித்தெடுத்தார். நல்ல வெளிச்சமாகத்தான் இருந்தது. மனைவியிடம் விளக்கை எடுத்துக் கொண்டுவா என்றார். அந்த அம்மாவும் ஒரு விளக்கை எடுத்துக் கொண்டுவந்து அவர் பக்கத்திலே வைத்துவிட்டு உள்ளே போய்விட்டார்கள். “இவ்வளவு வெளிச்சத்தில் விளக்கு எதற்கு என்று எதுவும் கேட்க்கவில்லை”.
சிறிது நேரம் கழித்து அந்த அம்மா இரண்டு டம்ளர் பாலைக் கொண்டுவந்து அவர்கள் முன்னால் வைத்தார்கள். இரண்டு பேரும் அதை எடுத்துக் குடிக்க ஆரம்பித்தார்கள். வந்திருந்தவரின் முகம் சுருங்க ஆரம்பித்தது… பாலை அவரால் குடிக்க முடியவில்லை. ஏனெனில், அந்த அம்மா பாலில் சர்க்கரைக்குப் பதிலாக, உப்பைப் போட்டு இருந்தார்கள். வந்தவர், கபீர்தாசர் முகத்தைக் கவனித்தார். அவர் முகத்திலே எந்த வித்தியாசமும் இல்லை. அவர் அதை அப்படியே குடித்துவிட்டார். அந்த அம்மா, “பாலுக்குச் சர்க்கரை போதுமா?” என்று கேட்க்கிறார்கள்! அதற்கு கபீர்தாசர், “போதும்! இனிப்பு சரியாக இருக்கிறது!” என்கிறார்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டு எதிரில் இருந்தவர், “இன்னும் என்னுடைய கேள்விக்கு பதில் சொல்லவில்லையே!” என்று கபீர்தாசரைப் பார்த்து விளவினார். அதற்கு கபீர்தாசர், “நான் இப்பொழுது என் மனைவிக்கு என்ன பதில் சொன்னனோ அதுதான் உங்கள் கேள்விக்கும் பதில் என்றார்”. யஜீர் வேதம் என்ன சொல்கிறது தெரியுமா? “எந்தக் குடும்பத்திலே கணவனும் மனைவியும் ஒருத்தர் குற்றத்தை இன்னொருத்தர் பார்க்காமல் இருக்கிறார்களோ அந்தக் குடும்பம் பூலோக கைலாசம்” என்றார்.
இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், கபீர் வெளிச்சத்தில் உட்கார்ந்து கொண்டு விளக்கை கேட்டபோது, அவர் மனைவி ஏதும் கேட்க்காமல் விளக்கைக் கொண்டு வந்து வைத்தார். கபீரின் மனைவி பாலில் சர்க்கரைக்குப் பதிலாக உப்பைப் போட்டிருந்த போதும், கபீர் ஏதும் கூறாமல் அதைக் குடித்தார். இதுவே இல்லற இன்பம்.
கபிலர்… நானும் என் மனைவியும் குடும்பத்திலே ஒருவரை ஒருவர் ரொம்ப “விட்டுக் கொடுத்து” நடந்து கொள்வோம். அதனால் எங்களுக்குள் மனஸ்தாபம் வருவதே இல்லை.
“இதுவே இல்லற இன்பம்”
Monday, May 24, 2010
Thursday, March 4, 2010
அரியலூரில் விஜயகாந்த் ஆர்ப்பாட்டம்
Friday, February 26, 2010
பொங்கல் விளையாட்டு: நாளை இறுதிப்போட்டி
ஜனவரி 16,2010,00:00 IST
அரியலூர்:பொங்கல் போட்டிகளின் இறுதிப் போட்டி நாளை (17ம் தேதி) நடக்கிறது.அரியலூர் ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்ட ஊராட்சிகளான ஆலந்துறையார் கட்டளை, மேலக்கருப்பூர், கடுகூர், காவலூர், வெங்கடகிருஷ்ணாபுரம், சுண்டக்குடி, உட்பட பல ஊராட்சிகளில் பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் நடந்தது.நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் ஆகிய போட்டிகளில் ஜூனியர் மற்றும் சீனியர் ஆண்கள் பெண்கள் இருவரும் சதுரங்கம், கேரம், நூறு மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர் ஆண்கள், பெண்கள் இருபாலரும் கைப்பந்து போட்டியில் சீனியர் ஆண்களும், டென்னிகாய்ட் போட்டியில் ஜூனியர் மகளிரும் கலந்து கொண்டனர். இறுதிப் போட்டி நாளை( 17ம்தேதி) நடக்கிறது.
Nandri: www.dinamalar.com
http://www.dinamalar.com/Tnspl_districtdetail.asp?news_id=290199&ncat=Ariyalur
சிறப்பு மனுநீதி நாள் முகாம் நிறைவு
First Published : 04 Jun 2009 11:57:47 AM IST
அரியலூர், ஜூன் 3: அரியலூர் ஒன்றியத்தைச் சேர்ந்த ஆலந்துறையார் கட்டளை கிராமத்தில் சிறப்பு மனுநீதிநாள் முகாம் நிறைவு விழா மாவட்ட ஆட்சியர் அனில்மேஷ்ராம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
விழாவில் திட்ட அலுவலர் எஸ்.வெங்கடாசலம், கிராமத்தில் ஊராட்சியின் மூலம் சாலை மேம்பாட்டு பணிகள், ஊரக கட்டமைப்புப் பணிகள், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் செய்யப்படும் பணிகள் குறித்துப் பேசினார்.
விழாவில் ரூ 1.63 லட்சத்தில் 22 நபர்களுக்கு பட்டா மாற்றம், இந்திராகாந்தி முதியோர் உதவித் தொகை ஆணை 22 பேருக்கு, ஊனமுற்றோர்க்கான உதவித் தொகை 2 பேருக்கு உள்ளிட்ட 63 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அனில்மேஷ்ராம் வழங்கினார்.
விழாவில் பிற்பட்டோர் நல அலுவலர் கே. சீனிவாசன், மகளிர் திட்ட அலுவலர் எஸ். வசந்தா, கோட்டாட்சியர் ஆர். சுதர்சனம், வட்டாட்சியர் எம். எட்டியப்பன், சமூக நலத் துறை வட்டாட்சியர் கே. காசி, ஆதிதிராவிடர் நலத் துறை தனி வட்டாட்சியர் எம். மகேஸ்வரன் உள்ளிட்டோர் பேசினர்.
Nandri : www.dinamani.com
http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Edition-Trichy&artid=69168&SectionID=138&MainSectionID=138&SEO=&Title=
அன்பு கிராம நண்பர்களுக்கு
நமது ஊருக்காக இந்த வலைப்பதிவை ஆரம்பித்து உள்ளோம். நமது கிராம உறவுகள் தங்களை பற்றிய விபரங்களை இந்த வலைபதிவில் தெரியபடுத்தலாம். நமது கிராமத்தை பற்றிய புகைப்படங்களையும் அனுப்பி வைத்தால் நமது வலைத்தளத்தில் பதிவிடுகிறோம்.
நீங்கள் தொடர்பு கொள்ள
மெயில் முகவரி alanthuraiyarkattalai@gmail.com
அன்புடன்
ரத்தினம் பத்மநாபன்
ஆலந்துறையார் கட்டளை கிராமம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.
ஆலந்துறையார் கட்டளை பஞ்சாயத்து மொத்தம் ஆறு கிராமங்களை உள்ளடக்கியது.
1. ஆலந்துறையார் கட்டளை (Alanthuraiyar kattalai)
2. வாளைக்குழி (Valaikuzhi)
3. பனங்கூர் (Panangur)
4. சிறுதொண்டான் காணி (Siruthondan Kani)
5. கீழகாங்கியனுர் (Keelakankiyanur)
6. மீளகாங்கியனுர் (Melakankiyanur)
கிராமத்தில் ஒரு பாலர் பள்ளியும் மற்றும் ஒரு தொடக்க பள்ளியும் உள்ளது. பள்ளியில் ஆண் மற்றும் பெண் இருபாலரும் படித்து வருகின்றனர்.
எங்கள் கிராமத்தை பற்றிய அதிக தகவலுக்கு எங்கள் கிராம தளத்தை பாருங்கள்.



















