கோவில் கும்பாபிஷேகம்

Friday, June 13, 2014

"கட்டுநாடு" பற்றி தெரிந்துகொள்ள ஒரு முயற்சி....

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

"கட்டுநாடு" என்பது நம்பகுதி மக்களுக்கு நன்கு தெரிந்த ஒரு வார்த்தை/பெயர். அந்த பெயருக்கு/வார்த்தைக்கு வயதில் முதியவர்களுக்கு சரியான விளக்கம்/காரணம் தெரிந்துருக்கும் என்று நம்புகிறேன். ஆனால் புதியவர்களில் எத்தனை பேருக்கு தெரியும்

"செட்டிநாடு" என்ற வார்த்தையை போல இதுவும் வந்துருக்கும் என்று கூறலாம். ஆனால் இன்று "செட்டிநாடு" என்று சொன்னால் தமிழ் பேசும் மக்களில் அதிகபடியானவர்களுக்கு  அந்த வார்த்தைக்குறிய குறைந்தபட்ச தகவலாவது  தெரியும். நீங்கள் இணையத்தில் "செட்டிநாடு" என்று தட்டச்சு செய்து பாருங்கள் உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும் கிடைக்கும். ஆனால் "கட்டுநாடு" என்று தட்டச்சு செய்து தேடினால் இரண்டு தினமலர்/தினமணி இணைப்பும் மற்றும் நமது வலைதளத்தில் உள்ள தகவல்தான் கிடைக்கும் வேறு எந்த ஒரு தகவலும் கிடைக்காது.

அதனால் "கட்டுநாடு" என்ற வார்த்தை எப்போது முதல் பயன்பாட்டில் உள்ளது? அது எத்தனை ஊர்களை உள்ளடக்கியது? அப்படி அழைக்க காரணம் என்ன? அந்த பகுதிக்கு என்று எதாவது தனித்தன்மை இருக்கா? போன்ற ஏகப்பட்ட கேள்விகளுக்கு பதில்தேடி  எழுதுவது தான் இந்த பதிவு.... 

நண்பர்கள் தங்களுக்கு தெரிந்த தகவலை ஷேர் பண்ணுங்க.... எல்லாவற்றையும் சேர்த்து ஒரு கட்டுரையாக எழுதி இணைத்தில் போடுவோம், நமக்கு பிறகு வரும் சந்ததியாவது படித்து தெரிந்துகொள்ளட்டும்....

தொடர்புக்கு :

இணையதளம்      : www.alanduraiyarkattalai.com
மின்னஞ்சல்          : alanthuraiyarkattalai@gmail.com
பேஸ்புக்                 : https://www.facebook.com/alanthuraiyarkattalai
கூகிள் பிளஸ்      : http://www.google.com/+alanthuraiyarkattalai
அன்புடன் 

3 comments:

வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க