கோவில் கும்பாபிஷேகம்

Friday, May 30, 2014

கீழப்பழூவூர்ஆலந்துறையார் கோயிலில் ஜூன் 2-ல் பாலாலயம்

கீழப்பழூவூர்ஆலந்துறையார் கோயிலில் ஜூன் 2-ல் பாலாலயம்

By அரியலூர்,

First Published : 30 May 2014 04:44 AM IST

கீழப்பழூவூர் ஆலந்துறையார் கோயிலில் வருகிற ஜூன் 2 ஆம் தேதி(திங்கள்கிழமை ) பாலாலயம் நடைபெறுகிறது.

அரியலூர் மாவட்டம், கீழப்பழூவூர் ஆலந்துறையார் கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இக்கோயிலின் குடமுழுக்கு நடைபெற்று 12 ஆண்டுகள் கடந்துவிட்டன. இதைத்தொடர்ந்து இந்தக் கோயில் திருப்பணி செய்து குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு ஜூன் 1-ம் தேதி பாலாலயத்துக்கான யாகசாலை பூஜைகள் நடக்கின்றன. ஜூன் 2-ம் தேதி காலை 9 மணிக்கு பாலாலய பூஜைகள் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீனம் தேவஸ்தான கட்டளை குமாரசுவாமி தம்பிரான் சுவாமிகள் கலந்துகொண்டு அருளாசி வழங்குகிறார்.

ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அலுவலர் (பொ) ராஜேந்திரன், திருஞானசம்பந்தர் அறநெறி வார வழிபாட்டு அறக்கட்டளையினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

 

No comments:

Post a Comment

வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க