கோவில் கும்பாபிஷேகம்

Sunday, July 6, 2014

சுண்டக்குடியில் விலையில்லா மடிக்கணினிகள்

சுண்டக்குடியில் விலையில்லா மடிக்கணினிகள்

By அரியலூர்,

First Published : 06 July 2014 04:04 AM IST

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி அருகே உள்ள சுண்டக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 51 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

மடிக்கணினிகளை வழங்கி மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் கணேசன் பேசியது:

தமிழக அரசு மாணவர்கள் நலனில் மிகுந்த அக்கறை செலுத்தி வருகிறது.

கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழகத்தை மாற்ற முதல்வர் பல்வேறு நலத் திட்ட உதவிகளைச் செயல்படுத்தி வருகிறார்.

விலையில்லா சைக்கிள், எழுதுபொருள்கள், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக தனியார் பள்ளிகளுக்கு இணையாக கல்வி தரத்தை உயர்த்த, அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் விலையில்லா மடிக்கணினி வழங்கப்படுகிறது.

இதுபோன்ற திட்டங்கள் மூலம் மாணவ, மாணவிகள் தங்கள் கல்வித் திறனை வளர்த்துக் கொண்டு, வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றார் அவர்.

நிகழ்ச்சியில் அரியலூர் உதவித் தொடக்க கல்வி அலுவலர் விஜயலெட்சுமி மடிக்கணினி செயல்பாட்டை விளக்கினார்.

பள்ளித் தலைமை ஆசிரியர் அருள்ராஜ் வரவேற்றார். தமிழ் ஆசிரியர் செல்வமணி நன்றி கூறினார்.

 

Nandri : www.dinamani.com

 

No comments:

Post a Comment

வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க