கோவில் கும்பாபிஷேகம்

Friday, July 11, 2014

அரியலூர் மாவட்டத்தில்ஆதிதிராவிட மாணவர்கள் விடுதியில் சேர அழைப்பு

அரியலூர் மாவட்டத்தில்ஆதிதிராவிட மாணவர்கள் விடுதியில் சேர அழைப்பு

By அரியலூர்

First Published : 12 July 2014 01:03 AM IST

அரியலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் ஆதிதிராவிட மாணவ, மாணவிகள் விடுதிகளில் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரியலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 1 கல்லூரி மாணவர் விடுதியும், 1 ஐடிஐ மாணவர் விடுதியும், 13 பள்ளி மாணவர் விடுதியும், 7 பள்ளி மாணவியர் விடுதிகளும் செயல்பட்டு வருகிறது. இந்த விடுதிகளில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்கள் மற்றும் கல்லூரிகளில் பட்டப்படிப்பு பயிலும் மாணவ, மாணவியர்கள் சேர்ந்து பயனடையலாம். இதற்கு மாணவ, மாணவியரின் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். விடுதியிலிருந்து மாணவர் குடியிருப்பு 5 கிலோ மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். மாணவியருக்கு இது பொருந்தாது.

2014-15-ம் ஆண்டுக்கு விடுதியில் சேருவதற்கான விண்ணப்பப் படிவங்கள் விடுதிக் காப்பாளர், காப்பாளினியிடம் இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தில் மாணவ, மாணவியரின் புகைப்படம் ஒட்டப்பட்டு அதில் கல்வி நிறுவனங்களின் சான்றொப்பம் பெற்றிருக்க வேண்டும். புதிதாக சேர்க்கப்படும் மாணவ, மாணவியருக்கு கண்டிப்பாக வங்கிக் கணக்கு தொடங்கப்பட வேண்டும். விண்ணப்பங்களை உடனே அந்தந்த காப்பாளர், காப்பாளினி வசம் ஒப்படைக்க வேண்டும். மாணவ, மாணவிகள் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல விடுதிகளில் சேர்ந்து பயன்பெறலாம்.

 

Nandri : http://www.dinamani.com/edition_trichy/ariyalur/2014/07/12/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4/article2326050.ece

 

No comments:

Post a Comment

வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க