கோவில் கும்பாபிஷேகம்

Thursday, July 10, 2014

வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்யக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்யக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

By அரியலூர்,

First Published : 11 July 2014 02:54 AM IST

விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்யக் கோரி அரியலூரில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அரியலூர் மாவட்டத் தலைவர் காமரசவல்லி ரெ. ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் பூ. விசுவநாதன் ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்துப் பேசினார். இதில் 2012-ல் தமிழகம் வறட்சி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. எனவே மத்திய, மாநில அரசு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், கரும்பு டன்னுக்கு ரூ. 2650 என தமிழக அரசு அறிவித்தும், தனியார் ஆலைகள் தர மறுத்து வருகின்றனர். அந்த ஆலைகளின் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுப்பதன் மூலம் கரும்பு விவசாயிகளுக்கு அரசு அறிவித்த விலை கிடைக்க உத்தரவிட வேண்டும். டெல்டா விவசாயிகளுக்கு கிடைக்கும் சலுகைகள் அரியலூர் மாவட்டம், திருமானூர், தா. பழூர் ஒன்றியங்களில் உள்ள விவசாயிகளுக்கும் பெற்றுத் தர மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஒரியூர், காமரசவல்லி, நானாங்கூர், கோமான், குருவாடி, தூத்தூர், வைப்பூர், சிலுப்பனூர், ஆதனூர் ஆகிய கிராமங்களில் விதைக்கப்பட்டிருந்த சூரியகாந்தி விதைகள் அண்மையில் பெய்த மழையால் அழுகிப் போனது. எனவே ஏக்கருக்கு ரூ. 10 ஆயிரம் இழப்பீடு வழங்க ஆட்சியர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். புள்ளம்பாடி வாய்க்காலின் பாசனம் கொண்ட 22 ஏரிகளின் வரத்து வாய்க்கால்களையும், தண்ணீர் தேங்கி நிற்காத ஏரிகளையும் தூர் வார வேண்டும் என்பன உள்ளிட்டக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் திருமானூர் ஒன்றியத் தலைவர் சந்திரசேகரன், செந்துறை ஒன்றியத் தலைவர் சா. கோவிந்தசாமி, அரியலூர் ஒன்றியத் தலைவர் ம. கெங்காதுரை உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Nandri  : Dinamani.com

 

 

 

No comments:

Post a Comment

வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க