கோவில் கும்பாபிஷேகம்

Thursday, August 21, 2014

கோஷ்டி மோதல்; 21 பேர் மீது வழக்குப்பதிவு

கோஷ்டி மோதல்; 21 பேர் மீது வழக்குப்பதிவு

திருமானூர் அருகே உள்ள பாலையப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 24). இவர் சில நாட்களுக்கு முன்பு பாலையப்பாடி சாலையில் வந்த அரசு பஸ்சை மறித்து தகராறு செய்தார். இதனை அதே ஊரை சேர்ந்த செல்வராஜ் (40) தட்டிக்கேட்டார். இது தொடர்பாக அவர்களுக்குள் விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு மணிவண்ணன், அவரது நண்பர் சுந்தரேசன்(23) ஆகியோர் செல்வராஜ் வீட்டிற்கு சென்று தகராறு செய்தனர். அப்போது அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இதில் செல்வராஜை இரும்பு கம்பியால் மணிவண்ணன் தாக்கினார். இதில் காயமடைந்த செல்வராஜ் தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக செல்வராஜ் திருமானூர் போலீசில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும், தன்னை அடையாளம் தெரியாத 19 பேர் தாக்கியதாக மணிவண்ணன் அளித்த புகாரின் பேரிலும் திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மணிவண்ணன், சுந்தரேசன் ஆகியோர் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Nandri : daily thanthi.

No comments:

Post a Comment

வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க