சிறப்பு மனு நீதி முகாமில் பயனாளிகளுக்கு ரூ.5 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் அரியலூர் கலெக்டர் வழங்கினார்
அரியலூர் கருப்பிலாக் கட்டளையில் நடை பெற்ற சிறப்பு மனுநீதி முகாமில் பயனாளி களுக்கு ரூ.5 லட்சத்து 177 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சரவணவேல்ராஜ் வழங் கினார்.
சிறப்பு மனு நீதி முகாம்
அரியலூர் மாவட்டம் அரியலூர் ஒன்றியம் கருப் பிலாக்கட்டளை ஊராட்சியில் சிறப்பு மனுநீதி நாள் நிறைவு முகாம் கலெக்டர் சரவணவேல் ராஜ் தலைமையில் நடை பெற்றது. பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கலெக்டர் பேசியதாவது:–
இந்த முகாமில் 208 மனுக்கள் பெறப்பட்டு 148 மனுக்களின் மீது ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள மனுக்கள் விரைவில் விசாரணை செய்யப்பட்டு அம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப் படும். விலையில்லா மின் விசிறி, மிக்சி மற்றும் கிரைண் டர் வழங்கும் திட்டத் தின் கீழ் இந்த நிதியாண்டில் 1,143 பயனாளிகளுக்கு அப் பொருட்கள் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசி னார்.
இம்முகாமில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் விபத்து நிவாரண உதவி தொகையாக 3 பயனாளி களுக்கு தலா ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 500 வீதம் மொத்தம் ரூ.3 லட்சத்து 7 ஆயிரத்து 500 மதிப்பிலான காசோலை களையும், திருமணம் மற்றும் ஈமச் சடங்கு உதவி தொகை 21 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பிலான காசோலை களையும், 5 பயனாளிகளுக்கு வாரிசு சான்றுகளும், 14 பயனாளிகளுக்கு குடும்ப அட்டை பெயர் சேர்த்தல் மற்றும் மாற்றுதல், 1 நபருக்கு இறப்பு சான்று, 15 நபருக்கு நத்தம் மனை வரிப்பட்டா, 53 பேருக்கு பட்டா மாறுதல் உத்தரவுகளும், வேளாண்துறை சார்பில் 5 பேருக்கு ரூ.6 ஆயிரத்து 177 மதிப்பிலான வேளாண் இடுபொருட் களையும், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 10 நபர்களுக்கு ரூ.500 மதிப்பி லான தாது உப்பு பைகளையும் என மொத்தம் 137 பயனாளி களுக்கு ரூ.5 லட்சத்து 177 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் (பொறுப்பு) மோகன் மற்றும் துணை ஆட்சியர்கள், அனைத்துத் துறை அலுவலர் கள், கருப்பிலாக்கட்டளை ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலெட்சுமி விஸ்வநாதன் மற்றும் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர். விழா முடிவில் அரியலூர் வட் டாட்சியர் முருகன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment
வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க