சோழ வளநாட்டில் பல ஆறுகள் உள்ளன. அவற்றில் முக்கிய நதியான மருதையாற்றின் தெற்கே கொள்ளிடத்திற்கு வடக்கே அமைந்துள்ள ஆலந்துறையார் கட்டளை என்னும் புண்ணிய ஸ்தலத்தில் எழுதருளி தன்னை வணங்குபவர்க்கெல்லாம் அருள்பாலித்து வரும் அருள்மிகு. மகா கணபதி, அருள்மிகு பாலமுருகன், அருள்மிகு மாரியம்மன், அருள்மிகு திரெளபதையம்மன், அருள்மிகு காளியம்மன் மற்றும் ஏனைய பரிவார கோவில்கள் இயற்கை சீற்றங்களால் சிதிலம் அடைந்ததை ஊர்பொதுமக்களும் ஆண்மீக அன்பர்களும் புதுபித்து எதிர்வரும் மங்களகரமான ஸ்ரீஜய வருடம் ஆவணி மதம் 15ஆம் நாள் 31-08-2014 ஞாயிற்று கிழமை ஷஷ்டி திதியும் ஸ்வாதி நட்சத்திரம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 8:30 மணிக்கு மேல் 10:00 மணிக்குள் துலா லக்கனத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதால் சமுதாய மக்களையும், ஆன்மீக நண்பர்களையும், உறவினர்களையும் பெருந்திரளாக கலந்துகொண்டு இறைவன் திருவருளை பெற்று இப்பிறவியின் பயனை அடையுமாறு ஆலந்துரையர் கட்டளை & சிறுதொண்டான் காணி கிராம பொதுமக்கள், கிராம நாட்டாண்மைகள், கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் கிராம இளைஞர்கள் அனைவரின் சார்பில் அன்புடன் அழைக்கிறார்கள்.
பேருந்து வசதி அரியலூர்/கீழப்பழுவூர் இருந்து சுண்டக்குடி செல்லும் பேருந்துகள், வி. கைகாட்டியில் இருந்து ஏலக்குருச்சி செல்லும் பேருந்துகள், ஏலக்குருச்சி இருந்து வி. கைகாட்டி செல்லும் பேருந்துகள்.
ஆலந்துறையார் கட்டளை டாட் காம் சார்பாக அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
No comments:
Post a Comment
வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க