அரியலூர் மாவட்டத்தில் நாளை குரூப் 2 தேர்வு: 6283 பேர் பங்கேற்பு
By அரியலூர்,
First Published : 28 June 2014 01:00 AM IST
அரியலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 29) நடைபெற உள்ள குரூப் 2 தேர்வில் 6283 பேர் பங்கேற்று தேர்வு எழுதவுள்ளனர். இதுகுறித்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஜூன் 29-ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ஒருங்கிணைந்த குடிமைப்பணித் தேர்வு (குரூப் 2) நடைபெற உள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் மையத்தில் 21 தேர்வுக் கூடங்களில் மேற்படி தேர்வு நடைபெற உள்ளது. அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 6283 தேர்வர்கள் தேர்வு எழுதவுள்ளனர். அனைத்து தேர்வு மையங்களிலும் தேர்வு எழுதுவதற்கான முன்னேற்பாடுகள் மாவட்ட நிர்வாகத்தால் செய்யப்பட்டுள்ளது. அனைத்துத் தேர்வர்களும் தேர்வு தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்னதாக தேர்வுக் கூடத்துக்குள் இருக்க வேண்டும். செல்போன், கால்குலேட்டர், கால்குலேட்டர் வசதி பொருத்தப்பட்ட கைக்கடிகாரங்கள் ஆகியன தேர்வுக் கூடத்துக்குள் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டாது.
அனைத்துத் தேர்வர்களும் நுழைவுச் சீட்டில் குறிப்பிட்டுள்ள முகவரியில் கண்டுள்ளவாறு சரியான முறையில் தேர்வு எழுதச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
அரியலூர், ஜயங்கொண்டம், செந்துறை ஆகிய பேருந்து நிலையங்களிலிருந்து தேர்வுக் கூடங்களுக்கு தேர்வர்கள் உரிய நேரத்தில் செல்ல ஏதுவாக காலை 7 மணி முதல் அந்தந்த பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது. தேர்வர்கள் மேற்படி வசதிகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அந்தச் செய்திக் குறிப்பில் ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார்.
Nandri www.dinamani.com
No comments:
Post a Comment
வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க