அரியலூர் மாவட்ட இளைஞர்கள் பங்கேற்க அழைப்பு
By அரியலூர்,
First Published : 05 June 2014 04:54 AM IST
ராணுவப் பணியில் சேருவதற்கு விருப்பமுள்ள அரியலூர் மாவட்ட இளைஞர்கள் அதற்கான முகாமில் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இந்திய ராணுவத்தின் பல்வேறு பதவிகளுக்கு தஞ்சாவூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வரும் 11 ஆம் தேதி காலை 5 மணி முதல் 19 ஆம் தேதி வரை பணியாளர்கள் தேர்வு முகாம் நடைபெறுகிறது.
இதில், சிப்பாய் டெக்னிக்கல் பதவிக்கு எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஜூன் 11,12 ஆம் தேதிகளில் தேர்வு நடைபெறும். சிப்பாய் பொதுப்பணி பதவிக்கு எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஜூன் 13, 14 ஆம் தேதிகளில் தேர்வு நடைபெறும்.
சிப்பாய் பொதுப்பணி டிரேட்ஸ் மேன் பதவிக்கு எஸ்எஸ்எல்சி, 8 ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஜூன் 14, 15 ஆம் தேதிகளில் தேர்வு நடைபெறும். சிப்பாய் கிளார்க், ஸ்டோர்ஸ் கீப்பர் டெக்னிக்கல் பதவிக்கு எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஜூன் 15,16 ஆம் தேதிகளில் தேர்வு நடைபெறும்.
முகாமில் பங்கேற்பவர்கள் கல்வித் தகுதிச் சான்றிதழ் அசல் மற்றும் 2 நகல்கள், இருப்பிடச் சான்று, ஆங்கிலத்தில் சாதிச் சான்றிதழ் கொண்டுச் செல்ல வேண்டும்.
மெட்ரிக்குலேசன் கல்வித் தகுதி இல்லாத விண்ணப்பதாரர்கள் இடமாற்றம் சான்றிதழ் மாவட்டக் கல்வி அதிகாரியிடம் கையொப்பம் பெற்றும், மதிப்பெண் சான்றிதழ் தலைமை ஆசிரியர் கையொப்பத்துடன் எடுத்துச் செல்ல வேண்டும்.
விளையாட்டு மற்றும் என்சிசி சான்றிதழ்கள், முன்னாள் படைவீரர் மகன் என்பதற்கு உரிய ஆவணக் காப்பகச் சான்று, அண்மையில் எடுக்கப்பட்ட கலர் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் 12 ஆகியவற்றையும் எடுத்துச் செல்ல வேண்டும். அரியலூர் மாவட்ட இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார் ஆட்சியர்.
No comments:
Post a Comment
வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க