கோவில் கும்பாபிஷேகம்

Sunday, June 8, 2014

நம்ம பகுதி செய்தி : நாகமங்கலம் நாகநாதசாமி கோயில் குடமுழுக்கு

நாகமங்கலம் நாகநாதசாமி கோயில் குடமுழுக்கு

By அரியலூர்

First Published : 09 June 2014 05:19 AM IST

அரியலூர் மாவட்டம், நாகமங்கலம் நாகநாதசாமி கோயிலில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம், வி. கைகாட்டி அருகே உள்ள நாகமங்கலத்தில் உள்ள பிரசன்னநாயகி உடனுறை நாகநாதசாமி கோயிலில் திருப்பணி நடைபெற்றது.

குடமுழுக்கையொட்டி ஜூன் 6 ஆம் தேதி மங்கள இசையுடன் விழா தொடங்கி, தொடர்ந்து திருமுறைக்கோயில் வழிபாடு, நால்வர் பெருமக்கள் வழிபாட்டுடன், திருவாசகம் முற்றோதுதல், 7 ஆம் தேதி சிவனடியார் சிவபூசையும், கோபூசை, தொடர்ந்து இரண்டாம் கால வேள்வி, திருமுறை விண்ணப்பம், பேரொளி வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை காலை சீலமிகு சிவனடியார்களின் சிவபூசைக் காட்சியும், நான்காம் கால வேள்வி நாடி சந்தானம் திருவருள் ஏற்றம், திருக்குடங்கள் எழில் ஞான உலாவும், தொடர்ந்து சிவாச்சாரியார்களால் விமானங்கள் திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது.

திருவாவடுதுறை ஆதீனம் தம்பிரான் சுந்தரேசன் சுவாமிகள், அரியலூர் ரத்னா அச்சகம் தங்கவேல் பிள்ளை, செந்தில், ஊராட்சித் தலைவர் பாலுசாமி, ஒன்றியக் குழு உறுப்பினர் சிவகுமார், மருத்துவர்கள் க. மணிவண்ணன், உமாமகேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Nandri: Dinamani

 

No comments:

Post a Comment

வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க