நாகமங்கலம் நாகநாதசாமி கோவில் கும்பாபிஷேகம்
வி.கைகாட்டி அருகில் உள்ள நாகமங்கலத்தில் நாகநாதசாமி கோவிலில் 100 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
நாகநாதசாமி கோவில்
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே உள்ள நாகமங்கலத்தில் எழுந்தருளி யுள்ள பிரசன் நாயகி உடனுறை நாகேஸ்வர சுவாமி (எ)நாகநாத சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் சிதிலம் அடைந்ததை பழுதி நீக்கி புதுப்பித்து 100 ஆண்டுகளுக்கு பின் மகா கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப் பட்டது.
கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 6-ந்தேதி மாலை 4மணிக்கு மங்கள இசை,தீப வழிபாடும், திருநெறிய திருமுறைப் பன்னிசை, மூத்த நாயகர் வழிபாடு பூர்வாங்கம் ,அனுக்ஞை, வாஸ்துசாந்தி, மிருத் சங்கிரணம்,அங்குராப் பணம் புண்ணியாகவச னம்,மகாசங் கல்பம்,கல £கர் ஷணம், ஆட்சார் ண ரட்சா பந்தனம், சயனாதிவாசம், நடைபெற்றது.
நேற்று முன்தினம் மாலை 5மணிக்கு சீர்கொள் மங்கள இசை, சிவனடியார் சிவபூஜை யும்,6மணிக்கு அங்க நியாசம்,கர நியாசகம்,ஆனிரை வழி பாடு,கோபூஜை,சீர்கொள் சிவனடியார் சிவபூஜை புரிதல் திருமுறை விண்ணப்பம்,நீர் வழி நினைத்து உருகலும் நடைபெற்றது.
கும்பாபிஷேகம்
நேற்று காலை 5மணிக்கு மங்கல இசை,சீலமிகு சிவனடி யார்களின் சிவ பூஜைக் காட்சியும்,6மணிக்கு கருவறையத் திருவறையாக்கு தல்,அருள்ஒலி அலையினை நிலை நிறுத்துதல் நற்றமிழ் வல்ல ஞான சம்மந்தப் பெருமான் பெருந் துணை யோடு ஞாலம்அவன் புகழே ஆக நான்காம் கால வேள்வி, 7.30மணிக்கு நாடி சந்தானம் திருவருள் ஏற்றம்,திருக்குடங் கள் எழிழ் ஞான உலாவும்,8.30 மணிக்கு கோபுரவாயில் வழித் துணை விநாயகர் முதல் திருக் கோவில் பரிவார மூர்த்திகள் குடமுழுக் கும்,8.45மணிக்கு விண்ணழி விமானங்களுக்கு சிவாச்சாரியார்களால் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
விழாவில் திருவாருர் ஆதீனம் தம்பிரான் சுவாமி, ஊராட்சி மன்ற தலைவர் பாலுசாமி,ஒன்றியக்குழு உறுப்பினர் சிவக்குமார், மருத்துவர்கள் க.மணிவண் ணன், உமா மகேஸ்வரி மற்றும் திரளா பக்தர்கள் கலந்து கொண்டனர் .
Nandri : Dinathanthi
No comments:
Post a Comment
வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க