கோவில் கும்பாபிஷேகம்

Friday, June 20, 2014

"அரியலூரில்24 மணி நேர மருத்துவ உதவி, தகவல் மையம்'

"அரியலூரில்24 மணி நேர மருத்துவ உதவி, தகவல் மையம்'

By அரியலூர்

First Published : 21 June 2014 03:32 AM IST

அரியலூர் மாவட்டத்தில் 24 மணி நேர தொலைபேசி மருத்துவ உதவி மற்றும் தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக முதல்வரால் 24 மணி நேர 104 தொலைபேசி மருத்துவ உதவி மற்றும் தகவல் மையம் 30-12-2013 அன்று தொடங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

அனைத்துத் தரப்பினருக்கும் சுகாதார ஆலோசனை, 108 திட்டத்துடன் இணைப்பு, சிறப்பு மருத்துவர் ஆலோசனை போன்ற சேவைகளுக்கு இத்திட்டம் முக்கியத்துவம் அளிக்கிறது. ஊரகப் பகுதிகளில் பணிபுரியும் மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கு உரிய மருத்துவ வழிகாட்டுதல்கள், சுகாதாரம் சார்ந்த பொதுமக்கள் குறைகளை குறித்த நேரத்தில் தீர்ப்பதற்கான வழிமுறைகள், கொள்ளை நோய் தொடர்பான தகவல்கள் மற்றும் வளரிளம் பருவத்தினர் மற்றும் இதரப் பருவத்தினருக்கான மருத்துவ ஆலோசனைகள் வழங்குதல் போன்ற முக்கிய சேவைகள் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. மேலும், எம்பிபிஎஸ் பட்டம் பெற்ற மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் மூலமாக சுகாதாரம் சார்ந்த அறிவுரைகள் மற்றும் தகவல்கள் வழங்கப்படுகிறது. 24 மணி நேர அவசர கால பணிகளில் குறிப்பாக ஆபத்தான நிலையில் உள்ள மனிதர்களுக்கு மற்றும் பேறுகால சிரமங்களை எதிர்கொள்ளும் தாய்மார்களுக்கு உரிய சுகாதார வசதிகள் குறித்த தகவல் அளிக்கப்படும். மேலும், 108 அவசர கால ஊர்தியுடன் இணைப்பு ஏற்படுத்தி தரப்படுகிறது என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

 

Nandri : www.dinamani.com

 

 

No comments:

Post a Comment

வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க