கோவில் கும்பாபிஷேகம்

Thursday, August 21, 2014

கோஷ்டி மோதல்; 21 பேர் மீது வழக்குப்பதிவு

கோஷ்டி மோதல்; 21 பேர் மீது வழக்குப்பதிவு

திருமானூர் அருகே உள்ள பாலையப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 24). இவர் சில நாட்களுக்கு முன்பு பாலையப்பாடி சாலையில் வந்த அரசு பஸ்சை மறித்து தகராறு செய்தார். இதனை அதே ஊரை சேர்ந்த செல்வராஜ் (40) தட்டிக்கேட்டார். இது தொடர்பாக அவர்களுக்குள் விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு மணிவண்ணன், அவரது நண்பர் சுந்தரேசன்(23) ஆகியோர் செல்வராஜ் வீட்டிற்கு சென்று தகராறு செய்தனர். அப்போது அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இதில் செல்வராஜை இரும்பு கம்பியால் மணிவண்ணன் தாக்கினார். இதில் காயமடைந்த செல்வராஜ் தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக செல்வராஜ் திருமானூர் போலீசில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும், தன்னை அடையாளம் தெரியாத 19 பேர் தாக்கியதாக மணிவண்ணன் அளித்த புகாரின் பேரிலும் திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மணிவண்ணன், சுந்தரேசன் ஆகியோர் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Nandri : daily thanthi.

Wednesday, August 20, 2014

சிறப்பு மனு நீதி முகாமில் பயனாளிகளுக்கு ரூ.5 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் அரியலூர் கலெக்டர் வழங்கினார்

சிறப்பு மனு நீதி முகாமில் பயனாளிகளுக்கு ரூ.5 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் அரியலூர் கலெக்டர் வழங்கினார்

அரியலூர் கருப்பிலாக் கட்டளையில் நடை பெற்ற சிறப்பு மனுநீதி முகாமில் பயனாளி களுக்கு ரூ.5 லட்சத்து 177 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சரவணவேல்ராஜ் வழங் கினார்.

சிறப்பு மனு நீதி முகாம்

அரியலூர் மாவட்டம் அரியலூர் ஒன்றியம் கருப் பிலாக்கட்டளை ஊராட்சியில் சிறப்பு மனுநீதி நாள் நிறைவு முகாம் கலெக்டர் சரவணவேல் ராஜ் தலைமையில் நடை பெற்றது. பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கலெக்டர் பேசியதாவது:

இந்த முகாமில் 208 மனுக்கள் பெறப்பட்டு 148 மனுக்களின் மீது ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள மனுக்கள் விரைவில் விசாரணை செய்யப்பட்டு அம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப் படும். விலையில்லா மின் விசிறி, மிக்சி மற்றும் கிரைண் டர் வழங்கும் திட்டத் தின் கீழ் இந்த நிதியாண்டில் 1,143 பயனாளிகளுக்கு அப் பொருட்கள் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசி னார்.

இம்முகாமில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் விபத்து நிவாரண உதவி தொகையாக 3 பயனாளி களுக்கு தலா ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 500 வீதம் மொத்தம் ரூ.3 லட்சத்து 7 ஆயிரத்து 500 மதிப்பிலான காசோலை களையும், திருமணம் மற்றும் ஈமச் சடங்கு உதவி தொகை 21 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பிலான காசோலை களையும், 5 பயனாளிகளுக்கு வாரிசு சான்றுகளும், 14 பயனாளிகளுக்கு குடும்ப அட்டை பெயர் சேர்த்தல் மற்றும் மாற்றுதல், 1 நபருக்கு இறப்பு சான்று, 15 நபருக்கு நத்தம் மனை வரிப்பட்டா, 53 பேருக்கு பட்டா மாறுதல் உத்தரவுகளும், வேளாண்துறை சார்பில் 5 பேருக்கு ரூ.6 ஆயிரத்து 177 மதிப்பிலான வேளாண் இடுபொருட் களையும், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 10 நபர்களுக்கு ரூ.500 மதிப்பி லான தாது உப்பு பைகளையும் என மொத்தம் 137 பயனாளி களுக்கு ரூ.5 லட்சத்து 177 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் (பொறுப்பு) மோகன் மற்றும் துணை ஆட்சியர்கள், அனைத்துத் துறை அலுவலர் கள், கருப்பிலாக்கட்டளை ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலெட்சுமி விஸ்வநாதன் மற்றும் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர். விழா முடிவில் அரியலூர் வட் டாட்சியர் முருகன் நன்றி கூறினார்.

 

Tuesday, August 12, 2014

எங்கள் பகுதி பேஸ்புக் பக்கங்கள்

எங்கள் பகுதி பேஸ்புக் பக்கங்கள்.

கட்டுநாட்டு பகுதிக்கு - https://www.facebook.com/kattunadu
ஆலந்துறையார் கட்டளை கிராமம் -https://www.facebook.com/alanthuraiyarkattalai
சுண்டக்குடி கிராமம் - https://www.facebook.com/sundakkudi.ariyalur
வாழைக்குழி கிராமம் - https://www.facebook.com/profile.php?id=100007176975336
பனங்கூர் கிராமம் - https://www.facebook.com/profile.php?id=100005899815537
கீழகாங்கியனூர் கிராமம் - https://www.facebook.com/profile.php?id=100004308345610
ஆண்டிபட்டாகாடு கிராமம் - https://www.facebook.com/profile.php?id=100005872066327
ஓட்டகோவில் கிராமம் -https://www.facebook.com/groups/673549196066394
புங்ககுழி கிராமம் - https://www.facebook.com/arul.kumar.90834776
சிலுப்பனூர் கிராமம் -https://www.facebook.com/vadakkutheruvalibarsangam.siluppanur

எனக்கு தெரிந்த கணக்குகளை சொல்லிருக்கேன். உங்களுக்கு தெரிந்தவற்றை சொல்லுங்க.

Sunday, August 10, 2014

அனைவரும் வருக! இறையருள் பெருக!

அனைவரும் வருக! இறையருள் பெருக!

31-08-2014 ஞாயிற்று கிழமை

நடைபெற இருக்கும்

அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகத்துக்கு

நண்பர்கள், உறவினர்கள் அனைவரையும்

வருக வருக என இருகரம்கூப்பி

அன்புடன் வரவேற்பது

ஆலந்துறையார் கட்டளை டாட் காம்

Saturday, August 9, 2014

ஆலந்துறையார் கட்டளை டாட் காம் சார்பாக அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம் - அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் பத்திரிகை

சோழ வளநாட்டில் பல ஆறுகள் உள்ளன. அவற்றில் முக்கிய நதியான மருதையாற்றின் தெற்கே கொள்ளிடத்திற்கு வடக்கே அமைந்துள்ள ஆலந்துறையார் கட்டளை என்னும் புண்ணிய ஸ்தலத்தில் எழுதருளி தன்னை வணங்குபவர்க்கெல்லாம் அருள்பாலித்து வரும் அருள்மிகு. மகா கணபதி, அருள்மிகு பாலமுருகன், அருள்மிகு மாரியம்மன், அருள்மிகு திரெளபதையம்மன், அருள்மிகு காளியம்மன் மற்றும் ஏனைய பரிவார கோவில்கள் இயற்கை சீற்றங்களால் சிதிலம் அடைந்ததை ஊர்பொதுமக்களும் ஆண்மீக அன்பர்களும் புதுபித்து எதிர்வரும் மங்களகரமான ஸ்ரீஜய வருடம் ஆவணி மதம் 15ஆம் நாள் 31-08-2014 ஞாயிற்று கிழமை ஷஷ்டி திதியும் ஸ்வாதி நட்சத்திரம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 8:30 மணிக்கு மேல் 10:00 மணிக்குள் துலா லக்கனத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதால் சமுதாய மக்களையும், ஆன்மீக நண்பர்களையும், உறவினர்களையும் பெருந்திரளாக  கலந்துகொண்டு இறைவன் திருவருளை பெற்று இப்பிறவியின் பயனை அடையுமாறு ஆலந்துரையர் கட்டளை & சிறுதொண்டான் காணி கிராம பொதுமக்கள், கிராம நாட்டாண்மைகள், கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் கிராம இளைஞர்கள் அனைவரின் சார்பில் அன்புடன் அழைக்கிறார்கள்.

 

பேருந்து வசதி அரியலூர்/கீழப்பழுவூர் இருந்து சுண்டக்குடி செல்லும் பேருந்துகள், வி. கைகாட்டியில் இருந்து ஏலக்குருச்சி செல்லும் பேருந்துகள், ஏலக்குருச்சி இருந்து வி. கைகாட்டி செல்லும் பேருந்துகள்.

 

ஆலந்துறையார் கட்டளை டாட் காம் சார்பாக அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

Sunday, August 3, 2014

தொழில்முனைவோர் கடன் பெற விண்ணப்பிக்கலாம்

தொழில்முனைவோர் கடன் பெற விண்ணப்பிக்கலாம்

By அரியலூர்,

First Published : 04 August 2014 05:17 AM IST

அரியலூர் மாவட்டத்தில் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் தொழில் முனைவோர் கடன் பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இத்திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்டத்தில் நகர மற்றும் கிராமப் பகுதிகளில் வசிக்கும் 18 வயது நிறைவடைந்த சுயதொழில் செய்ய விரும்பும் ஆண் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இத்திட்டத்தில் உற்பத்தி சார்ந்த தொழில் தொடங்க அதிகபட்சமாக ரூ. 25 லட்சம் வரையிலும், சேவை சார்ந்த தொழில்களுக்கு அதிகபட்சமாக ரூ. 10 லட்சம் வரையிலும் வங்கிக் கடன் பெறும் வசதி உள்ளது.

இத்திட்டத்தில் உற்பத்திப் பிரிவில் ரூ.10 லட்சத்துக்கு மேற்பட்ட திட்டங்களுக்கும், சேவை பிரிவின் கீழ் ரூ. 5 லட்சத்துக்கு மேற்பட்ட திட்டங்களுக்கும் குறைந்த பட்சம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்திட்டம் நகர் மற்றும் கிராமப் பகுதிகளில் மாவட்டத் தொழில் மையம் வாயிலாகவும், கிராமப் பகுதிகளில் கதர் கிராம தொழில்கள் ஆணையம் வாயிலாகவும் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற 2014-15 ஆம் நிதியாண்டுக்கு இலக்காக 80 திட்டங்களுக்கு ரூ.178.41 லட்சம் மானியத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தில் 30-9-2015 க்குள் இலக்கை அடைய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே ஆர்வமுள்ள தொழில் முனைவோர் அரியலூரில் கல்லூரிச் சாலையில் உள்ள மாவட்ட தொழில் மையத்தை நேரிலோ அல்லது 04329 - 224555, 9443413897 என்ற எண்ணிலோ, கதர் கிராமத் தொழில்கள் வாரியத்தை 044- 28351019, 9443728310, 9677840161 ஆகிய எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.

Nandri : www.dinamani.com