கோவில் கும்பாபிஷேகம்

Tuesday, March 31, 2015

அரியலூர் மாவட்டத்தில் கனிம வளக் கொள்ளை: ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் விசாரணைக் குழு அமைக்க வேண்டும்: வேல்முருகன் பேட்டி

அரியலூர் மாவட்டத்தில் கனிம வளக் கொள்ளை: ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் விசாரணைக் குழு அமைக்க வேண்டும்: வேல்முருகன் பேட்டி

By DN, அரியலூர்

First Published : 01 April 2015 02:37 AM IST

அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் கனிம வளக் கொள்ளை குறித்து ஆய்வு செய்ய மூத்த ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்றார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி. வேல்முருகன்.

செந்துறை அருகேயுள்ள ஆலத்தியூரில் தனியார் சிமென்ட் ஆலைகளைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அவர் அளித்த பேட்டி:

அரியலூர் மாவட்டத்தில் உள்ள 9 தனியார் சிமென்ட் ஆலைகளால் விளைநிலங்கள், நீர்நிலை புறம்போக்குகள் என 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. மேலும் அரசு விதிமுறைகளை மீறி கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. மதுரையில் சகாயம் குழு ஆய்வு செய்ததைப் போல, அரியலூர் மாவட்டத்தின் கனிம வளங்கள் கொள்ளை குறித்து ஆய்வு செய்ய மூத்த ஐஏஎஸ் அதிகாரி தலைமையிலான குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும்.

சுண்ணாம்பு சுரங்கங்கள் அமைந்துள்ள இடங்களை சுற்றியுள்ள கிராம மக்களுக்கு  குடிநீர், சாலை வசதி, மருத்துவ வசதி உள்ளிட்டவைகளை நிறைவேற்ற வேண்டும். சிமென்ட் ஆலைகளுக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ. 20 லட்சம் இழப்பீட்டுத் தொகை, வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும். இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், சிமென்ட் ஆலைகளுக்கு மூலப் பொருள்களை ஏற்றிச் செல்லும் லாரிகள், சிமென்ட் ஏற்றிச் செல்லும் லாரிகள் சிறைபிடிக்கப்படும் என்றார்.

Nandri :

 

http://www.dinamani.com/edition_trichy/ariyalur/2015/04/01/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE-/article2740907.ece

Monday, March 30, 2015

கல்லூரிக் கல்வியோடு மாணவர்கள் போட்டித் தேர்வுக்கு தயாராக வேண்டும்

கல்லூரிக் கல்வியோடு மாணவர்கள் போட்டித் தேர்வுக்கு தயாராக வேண்டும்

By அரியலூர்,

First Published : 29 March 2015 12:49 AM IST

கல்லூரிப் படிப்பு பயிலும் காலத்திலேயே மாணவ, மாணவிகள் போட்டித் தேர்வுகளுக்கு தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அல்ட்ரா டெக் சிமென்ட் ஆலையின் பொது மேலாளர் ஆர். பாஸ்கரன்.

அரியலூர் அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரியின் 7 ஆம் ஆண்டு விழாவுக்கு தலைமை வகித்து அவர் மேலும் பேசியதாவது: மாணவப்பருவம் என்ற மிகவும் முக்கியமான இந்தக் காலக்கட்டத்தில் தங்களது வாழ்க்கையின் அடித்தளத்தை மாணவர்கள் சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டும். கல்லூரியில் பயிலும் காலங்களிலேயே பல போட்டித் தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளுதல் வேண்டும். மேலும், மாணவர்கள் அயராத ஊக்கத்துடன் உழைத்துப் படித்தால் வெற்றி நிச்சயம் என்றார் அவர்.

அரியலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அலுவலர் கே. ரகுநாதன் பேசியது:

மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடுவதன் மூலம் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். விளையாட்டுத் துறையினருக்கான ஒதுக்கீட்டின் மூலம் உயர் வேலை வாய்ப்புகளைப் பெற முடியும் என்றார்.

முன்னதாக, கல்லூரி மாணவர்கள் வி. கைகாட்டி முதல் கல்லூரி வளாகம் வரை தொடர் ஓட்டமாக வந்தனர். பல்கலைக்கழக அளவில் விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுக் கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

 

காவல் உதவி ஆய்வாளர் தேர்வு: ஏப்.1 முதல் இலவச பயிற்சி வகுப்புகள்

காவல் உதவி ஆய்வாளர் தேர்வு: ஏப்.1 முதல் இலவச பயிற்சி வகுப்புகள்

 

By அரியலூர்,

First Published : 30 March 2015 02:01 AM IST

அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் காவல் உதவி ஆய்வாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஏப். 1 ஆம் தேதி முதல் அளிக்கப்பட உள்ளன.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்படும் "தன்னார்வ பயிலும் மையத்தின்' மூலம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் காவல் உதவி ஆய்வாளர் காலிப் பணியிடத்துக்கு வருகிற மே 23 ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது.

இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயில விரும்புபவர்கள் தங்களது பெயரை மார்ச் 30 (திங்கள்கிழமை) ஆம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

Nandri : dinamani