கோவில் கும்பாபிஷேகம்

Saturday, June 30, 2018

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை - மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரியலூர்.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை

செயல்பாடுகள்
  1. கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம்
  2. இலவச மிதிவண்டிகள் வழங்கும் திட்டம்
  3. இலவச சலவைப்பெட்டி வழங்குதல்
  4. இலவச தையல் இயந்திரங்கள் வழங்குதல்
  5. கடன் திட்டங்கள்
  6. நரிக்குறவர் நல வாரியம்
  7. முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம்
  8. உலமாக்கள் மற்றும் இதர பணியாளர்கள் நல வாரியம்
  9. உணவு மானியம் வழங்குதல்
  10. இலவச வீட்டுமனைப்பட்டா வழங்குதல்
  11. விடுதி மாணவ/மாணவியர்களுக்கான உணவு கட்டணம்
  12. சீருடை வழங்குதல்
  1. கல்வி உதவித்தொகை
    திட்டத்தின் பெயா் மற்றும் விபரம்தகுதிகள்
    அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு படிப்புக்கட்டணம் வழங்கப்படுகிறது. மேலும், கல்வி நிலையங்கள் இணைந்துள்ள விடுதிகளில் தங்கி 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு கல்வி பயிலும் மாணவர்களுக்கு உண்டி, உறையுள் கட்டணம் வழங்கப்படுகிறது. பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு மற்றும் தொழில் நுட்ப படிப்புகள் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியர்களுக்கு இலவச கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித்தொகைகள் வழங்கப்படுகிறது.
    1. பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவராக இருத்தல் வேண்டும்.
    2. ஆண்டு வருமானம் ரூ.200000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
    3. குடும்பத்தில் முதல் பட்டதாரி மாணவர்களுக்கு இலவச கல்வி திட்டத்தின் கீழ் அனைத்து திரும்ப செலுத்தப்படாத கட்டணங்கள் வழங்கப்படும்.
    அரசு, அரசு உதவிப்பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 1ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகைகள் வழங்கப்படுகிறது..அ) சிறுபான்மையினத்தவராக இருக்க வேண்டும்.
    ஆ)
    1. பள்ளி படிப்பு – ஆண்டு வருமானம் – ரூ.100000/-க்கு மிகாமலும்,
    2. பள்ளி மேற்படிப்பு – ஆண்டு வருமானம் – ரூ.200000/-க்கு மிகாமலும்,
    3. முந்தைய ஆண்டில் இறுதித்தேர்வில் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
    பெண் கல்வி ஊக்குவிப்பு சிறப்பு திட்டம்
    கிராம புறங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் 3ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் பெண் பிள்ளைகளுக்கு ஊக்கத்தொகையாக ரூ.500/-ம் 6ம் வகுப்பு பயிலும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் பெண் பிள்ளைகளுக்கு ஊக்கத்தொகையாக ரூ.1000/-ம் வழங்கப்படுகிறது.
    பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ.72000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
  2. இலவச மிதிவண்டிகள்
    அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 11ம் பயிலும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மாணவ, மாணவியர்களுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி இலவசமாக மிதிவண்டி வழங்கப்படுகிறது.
  3. இலவச சலவைப்பெட்டி வழங்குதல்
    பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் இனத்தை சேர்ந்த சலவை தொழில் செய்யும் நபர்களுக்கு சலவைப்பெட்டிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
    தகுதிகள்
    கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு ஆண்டு வருமானம் ரூ.60,000/-க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.
  4. இலவச தையல் இயந்திரங்கள் வழங்குதல்
    பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் இனத்தை சேர்ந்த தையற்கலை தெரிந்த 20 வயது முதல் 45 வயது வரை உள்ள பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
    தகுதிகள்
    1. கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு ஆண்டு வருமானம் ரூ.40000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
    2. நகர்புறங்களில் வசிப்பவர்களுக்கு ஆண்டு வருமானம் ரூ.60000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
  5. கடன் திட்டங்கள்
    தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (TABCEDCO) சென்னை மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (TAMCO) சென்னை அலுவலகங்கள் மூலம் கீழ்காணும் கடன் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
    1. தனிநபர் கடன்
    2. சுய உதவிக்குழுக்களுக்கு சிறு வணிக கடன்
    3. நீர்பாசனக்கடன்
    தகுதிகள்
    1. பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் இனத்தவராக இருத்தல் வேண்டும்.
    2. கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு ஆண்டு வருமானம் ரூ.81,000/-க்கு மிகாமலும், நகர்புறங்களில் வசிப்பவர்களுக்கு ஆண்டு வருமானம் ரூ.1,03,000/-க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.
    3. வயது வரம்பு 18 முதல் 60 வயது வரை இருக்க வேண்டும்.
  6. நரிக்குறவர் நல வாரியம்
    தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு அதிகபட்சமாக ரூ.7500/- முழு மானியமாக நல வாரியம் மூலம் வழங்கப்படுகிறது. குழுக்களாக சேர்ந்து தொழில் தொடங்குவதற்கு தனிநபர் மானியமாக ரூ.10000/- அல்லது குழுவிற்கு ரூ. 1,25,000/- அல்லது திட்ட மதிப்பில் 50 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது.
    இவ்வாரிய உறுப்பினர்களுக்கு கீழ்க்காணும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
    • மாத ஓய்வூதியம் ரூ.1000/-
    • விபத்தினால் மரணம் ஏற்பட்டால் உதவித்தொகை ரூ.100000/-
    • இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை ரூ.15000/-
    • ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை ரூ.2000/-
    • திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, கருச்சிதைவு மற்றும் கண் கண்ணாடிக்கான உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
    • விபத்தினால் ஊனம் ஏற்பட்டால் ஊனத்தின் தன்மைக்கேற்ப ரூ.10000/- முதல் ரூ.100000/- வரை வழங்கப்பட்டு வருகிறது.
    • இவ்வாரிய உறுப்பினாகளின் குழந்தைகளுக்கு உயர்நிலை, மேல்நிலை மற்றும் உயர்கல்வி பயில்வோருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
  7. முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம்
    தமிழ்நாட்டில் வாழும் வயது முதிர்ந்த ஆதரவற்ற கணவரால் கைவிடப்பட்ட முஸ்லீம் மகளிர் நலனுக்காக மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் அனைத்து மாவட்டங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
    • ஒவ்வொரு சங்கத்திற்கும் தலா ரூ.1 இலட்சம் விதை தொகை வழங்கப்பட்டுள்ளது,
    • சங்கங்களின் வளர்ச்சிக்காக சங்கத்தின் மூலம் திரட்டப்படும் நிதி ஆதாரத்திற்கேற்ப ஒரு சங்கத்திற்கு அதிகபட்சமாக ஆண்டிற்கு ரூ.20 இலட்சம் இணை மானியம் அரசால் வழங்கப்படுகிறது.
  8. உலமாக்கள் மற்றும் இதர பணியாளர்கள் நல வாரியம்
    இஸ்லாமியர்களின் பள்ளி வாசல்கள், மதரசாக்களில் பணிபுரியும் ஆலீம்கள், பேஷ், இமாம்கள், அரபி, ஆசிரியர்கள்/ஆசிரியைகள், மோதினார்கள், பிலால்கள், தர்க்காக்கள், ஆஷீர்கானாக்கள், அடக்கத் தலங்கள், தைக்காக்கள், முஸ்லீம் அனாதை இல்லங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்களின் பொருளாதாரம் மற்றும் கல்வி நிலையங்களில் முன்னேற்றம் அடைவதற்காக உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் செயல்பட்டு வருகின்றது.
    இவ்வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் குடும்ப வாரிசுகளுக்கு கீழ்க்காணும் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
    1. கல்வி உதவித்தொகை ரூ.1000/- to ரூ.6000/-
    2. திருமண உதவித்தொகை ரூ.2000/-
    3. கண் கண்ணாடி செலவு உதவித்தொகை ரூ.500/-
    4. மகப்பேறு உதவித்தொகை ரூ.6000/-
    5. மாத ஓய்வூதியம் ரூ.1000/-
    6. ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை ரூ.1000/-
    7. விபத்தினால் மரணம் ஏற்பட்டால் உதவித்தொகை ரூ.10000/- to ரூ.100000/-
    8. இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை ரூ.15000/-
  9. உணவு மானியம் வழங்குதல்
    அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியரால் நிர்வகிக்கப்படும் திருவள்ளுவர் அனாதை இல்லம் லிங்கத்தடிமேடு இல்லத்திற்கு ஓர் கல்வி ஆண்டில் மாணவர் ஒருவருக்கு மாதம் ஒன்றுக்கு உணவு மானியமாக ரூ.650/- வழங்கப்பட்டு வருகிறது.
  10. இலவச வீட்டுமனைப்பட்டா வழங்குதல்
    மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையின்கீழ் குழு ஏற்படுத்தப்பட்டு நில உரிமையாளர்களிடம் பேச்சு வார்த்தை மூலம் நிலகையகப்படுத்தும் திட்டம் மேற்கொள்ளப்பட்டு, மிகப்பிற்படுத்தப்பட்டோர் இனத்தை சார்ந்த நரிக்குறவர், ஒட்டர், வண்ணார் மற்றும் நாவிதர் ஆகியவர்களுக்கு தகுதிகுட்பட்டு தலா 3 செண்ட் நிலம் வழங்கப்பட்டு வருகிறது.
  11. விடுதி மாணவ/மாணவியர்களுக்கான உணவு கட்டணம்
    விடுதி மாணவ/மாணவியர்களுக்கு நல்ல உணவளிக்கும் பொருட்டு கட்டணத்தொகையினை கல்லூரி விடுதி மாணவ/மாணவியர்களுக்கு ரூ.1000/- ஆகவும், பள்ளி விடுதி மாணவ/மாணவியர்களுக்கு ரூ.900/- ஆக உயர்த்தியும் மற்றும் நாள்தோறும் வழங்கப்படும் உணவுகளுக்கான உணவுப்பொருட்களும் அங்கீகரிக்கப்பட்டது.
    சிறப்பு உணவு கட்டணம்
    விடுதி மாணவ/மாணவியர்களுக்கு கீழ்க்கண்ட பண்டிகை நாட்களில்
    1. பொங்கல்
    2. குடியரசு தினம்
    3. தமிழ் வருடப்பிறப்பு
    4. சுதந்திர தினம்
    5. தீபாவளி
    சிறப்பு உணவு வழங்க நபர் ஒருவருக்கு கல்லூரி விடுதிக்கு ரூ.40/-ம் பள்ளி விடுதிக்கு ரூ.20/-ம் அனுமதிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  12. சீருடை வழங்குதல்
    விடுதி மாணவ/மாணவியர்களுக்கு ஒவ்வொரு கல்வி ஆண்டிற்கும் மாணவ/மாணவியர்களுக்கு தலா நான்கு இணை சீருடை வழங்கப்பட்டு வருகிறது.
நிர்வாக அமைப்பு
நிர்வாக அமைப்பு
பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகள் பெயா்
  1. கல்லூரி மாணவர் விடுதி, அரியலூர்
  2. பள்ளி மாணவர் விடுதி, மேலணிக்குழி
  3. பள்ளி மாணவர் விடுதி, அரியலூர்
  4. பள்ளி மாணவர் விடுதி, திருபுரந்தான்
  5. பள்ளி மாணவர் விடுதி, வரதராஜன்பேட்டை
  6. பள்ளி மாணவர் விடுதி, ஏலாக்குறிச்சி
  7. பள்ளி மாணவர் விடுதி, செந்துறை
  8. பள்ளி மாணவர் விடுதி, சுண்டக்குடி
  9. பள்ளி மாணவியர் விடுதி, மேலணிக்குழி
  10. பள்ளி மாணவர் விடுதி, ஏலாக்குறிச்சி
  11. பள்ளி மாணவியர் விடுதி, மீன்சுருட்டி
  12. பள்ளி மாணவியர் விடுதி, இரும்புலிக்குறிச்சி
  13. பள்ளி மாணவியர் விடுதி, தா.பழுர்
  14. பள்ளி மாணவியர் விடுதி, ஆண்டிமடம்
  15. பள்ளி மாணவியர் விடுதி, வரதராஜன்பேட்டை
மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகள் பெயா்
  1. கல்லூரி மாணவர் விடுதி, அரியலூர்
  2. கல்லூரி மாணவியர் விடுதி, அரியலூர்
  3. பள்ளி மாணவர் விடுதி, பொன்பரப்பி
  4. பள்ளி மாணவர் விடுதி, உடையார்பாளையம்
  5. பள்ளி மாணவர் விடுதி, திருமழப்பாடி
  6. பள்ளி மாணவர் விடுதி, திருமானூர்
  7. பள்ளி மாணவர் விடுதி, மீன்சுருட்டி
  8. பள்ளி மாணவர் விடுதி, கீழப்பழுவூர்
  9. பள்ளி மாணவர் விடுதி, ஆண்டிமடம்
  10. பள்ளி மாணவர் விடுதி, ஜெயங்கொண்டம்
  11. பள்ளி மாணவர் விடுதி, மருதூர்
  12. பள்ளி மாணவர் விடுதி, சுத்தமல்லி
  13. பள்ளி மாணவர் விடுதி, இரும்புலிக்குறிச்சி
  14. பள்ளி மாணவர் விடுதி, கோடாலிகருப்பூர்
  15. பள்ளி மாணவர் விடுதி, தா.பழுர்
  16. பள்ளி மாணவியர் விடுதி, பொன்பரப்பி
  17. பள்ளி மாணவியர் விடுதி, ஜெயங்கொண்டம்
தொடர்பு முகவரி
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
அரியலூர்.

Monday, June 25, 2018

நெடுஞ்சாலைத்துறை - பொய்யூர் – சுண்டக்குடி சாலை

நெடுஞ்சாலைத்துறை

அரியலூர் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் (ம) பராமரிப்பு கோட்டம் 11.01.1997 முதல் அரியலூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இக்கோட்டம் அரியலூர், ஜெயங்கொண்டம், செந்துறை ஆகிய உட்கோட்டங்களையும் அரியலூர் பிரிவு-I, பிரிவு-II, ஜெயங்கொண்டம், செந்துறை ஆகிய பிரிவு அலுவலகங்களையும் உள்ளடக்கியது ஆகும். இக்கோட்டத்தின் மூலம் பல்வேறு சாலை உட்கட்டமைப்பு திட்டங்களான சாலை அகலப்படுத்துதல், மறுகட்டமைப்பு செய்தல், மேம்பாடு செய்தல் மற்றும் பராமரிப்பு பணிகள் மூலமாகவும் சாலைகள் மற்றும் பாலங்கள் மேம்படுத்தப்படுகின்றன. இக்கோட்டத்தில் 761.519 கி.மீ நீளமுள்ள சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. அவற்றில் மாநில நெடுஞ்சாலைகள் (157.440 கி.மீ), மாவட்ட முக்கிய சாலைகள் (131.190 கி.மீ) மற்றும் மாவட்ட இதர சாலைகள் (472.889 கி.மீ) ஆகியவை ஆகும்.
தொழில்துறையினை தொன்மையாகக் கொண்டுள்ள ஒரு முக்கிய மாவட்டமாகும். இங்கு கிடைக்கப்பெறும் சுண்ணாம்புக் கற்களைக் கொண்டு சிமெண்ட் தயாரிக்கும் ஆலைகள் அதிகமாக உள்ளது. தேவையான மூலப்பொருட்களைக் கொண்டு செல்வதற்கும், வளர்ந்து வரும் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும் சாலைகளின் கொள்ளளவை அதிகரிக்க வேண்டியுள்ளது. தொழில்மயமாக்கல் மற்றும் நகரமயமாக்கல் காரணமாக பன்மடங்கு அதிகரித்துள்ள வாகனப் போக்குவரத்திற்கேற்ப சாலைகளின் திறன் உயர்த்தப்பட்டு வருகிறது. மேலும் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கும் சாலை வசதி ஏற்படுத்தி விரைவான போக்குவரத்தை உறுதி செய்யப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் சிமெண்ட் இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால் தொழில்துறையில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேற்படி உற்பத்தி செய்யப்படும் அதிகபட்ச சிமெண்ட் சாலை வழியிலேயே கொண்டு செல்லப்படுகிறது.
அரியலூர் நெடுஞ்சாலை, கட்டுமானம் (ம) பராமரிப்பு கோட்டத்தின் மூலம் சாலைகளின் தரம் உயர்த்தப்பட்டு பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும், விவசாயிகளுக்கும் மற்றும் தொழிற்சாலைகளுக்கும் அளப்பரிய பணிகளை செய்து வருகிறது.
திட்டத்தின் பெயர்:
ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு வளர்ச்சித் திட்டம் (சி.ஆர்.ஐ.டி.பி திட்டம்) 2017-18.
நிர்வாக ஒப்புதல் அரசாணை எண். 86/நெடுஞ்சாலை (ம) சிறுதுறைமுகங்கள் (எச்.எப்.2) துறை, நாள். 24.10.2017.
வேலையின் பெயர்
  1. அரியலுர் – முத்துவாஞ்சேரி – ஸ்ரீபுரந்தான் சாலை கி.மீ 28/0-28/8 வரை உறுதிப்படுத்துதல் மற்றும் கி.மீ 28/2-ல் சிறுபாலம் திரும்பக் கட்டுதல் (மா.நெ எண். 139)
  2. பெரம்பலூர் – மானாமதுரை சாலை கி.மீ 27/300- 29/210 வரை (ஒய் பிரிவு சேர்த்து 230மீ) இடைவழித்தடத்திலிருந்து இருவழித்தடமாக அகலப்படுத்தி, உறுதிப்படுத்துதல் மற்றும் கி.மீ 28/2, 28/4 மற்றும் 28/6-ல் குழாய் பாலம் திரும்பக் கட்டுதல் (SHU)
  3. விக்கிரமங்கலம் – கடம்பூர் சாலை கி.மீ 0/0-3/0 வரை உறுதிப்படுத்துதல் மற்றும் கி.மீ 0/6, 0/10, 1/4, 2/4 மற்றும் 2/10-ல் குழாய் பாலம் திரும்பக் கட்டுதல்
  4. மேலக்கருப்பூர் – வடுகர்பாளையம் சாலை கி.மீ 0/0-1/4 மற்றும் கி.மீ 5/0-6/0 வரை மேம்பாடு செய்தல்.
  5. மேலக்கருப்பூர் – வடுகர்பாளையம் சாலை கி.மீ 1/2-ல் ஓடையின் குறுக்கே உள்ள பழுதடைந்த தரைப்பாலத்தை சிறுபாலமாக திரும்பக் கட்டுதல்.
  6. அரியலூர் – சுப்புராயபுரம் சாலை கி.மீ 6/0- 9/6 வரை உறுதிப்படுத்துதல், கி.மீ 6/2-ல் குழாய் பாலம் திரும்பக் கட்டுதல் மற்றும் கி.மீ 8/8-ல் தடுப்பு சுவர் கட்டுதல் (நெகிழி கழிவுகளைப் பயன்படுத்துதல்)
  7. பொய்யூர் – சுண்டக்குடி சாலை கி.மீ 0/2-ல் சாலை சந்திப்பினை மேம்பாடு செய்தல்
  8. விருத்தாச்சலம் – ஜெயங்கொண்டம் – மதனத்துர் சாலை கி.மீ 47/8 – 48/8 வரை உறுதிப்படுத்துதல்
  9. செந்துறை – உடையார்பாளையம் – அனைக்கரை சாலை கி.மீ 19/350 – 21/0 வரை இடைவழித்தடத்திலிருந்து இருவழித்தடமாக அகலப்படுத்தி உறுதிப்படுத்துதல், கி.மீ 20/10-ல் குழாய் பாலம் திரும்பக் கட்டுதல் மற்றும் கி.மீ 19/6, 19/8-ல் தடுப்பு சுவர் கட்டுதல்
  10. செந்துறை – உடையார்பாளையம் – அணைக்கரை சாலை கி.மீ 21/0 – 23/0 வரை இடைவழித்தடத்திலிருந்து இருவழித்தடமாக அகலப்படுத்தி உறுதிப்படுத்துதல் மற்றும் கி.மீ 22/8-ல் தடுப்பு சுவர் கட்டுதல்
  11. கல்லாத்தூர் – பாப்பாக்குடி – மேலணிக்குழி சாலை கி.மீ 2/10,3/2-ல் தடுப்பு சுவர் கட்டுதல்
  12. கல்லாத்தூர் – பாப்பாக்குடி – மேலணிக்குழி சாலை கி.மீ 3/4-ல் தடுப்பு சுவர் கட்டுதல்
  13. கல்லாத்தூர் – பாப்பாக்குடி – மேலணிக்குழி சாலை கி.மீ 3/6-ல் தடுப்பு சுவர் கட்டுதல்
  14. அணைக்குடம் – சோழமாதேவி – கோடாலிக்கருப்பூர் சாலை கி.மீ 4/0-6/0 வரை மேம்பாடு செய்தல் மற்றும் கி.மீ 4/2, 4/4, 5/6, 5/8-ல் குழாய் பாலம் திரும்ப கட்டுதல்.
  15. உட்கோட்டை – தழுதாழைமேடு சாலை கி.மீ 3/0-5/0 வரை மேம்பாடு செய்தல் மற்றும் கி.மீ 4/8, 4/10-ல் குழாய் பாலம் திரும்பக் கட்டுதல்
  16. செந்துறை – உடையார்பாளையம் – அணைக்கரை சாலை கி.மீ 11/0-12/4 மற்றும் 14/4-15/0 வரை மேம்பாடு செய்தல்
  17. செந்துறை – அங்கனூர் – அகரம்சீகூர் – திருமாந்துறை சாலை கி.மீ 1/4-ல் தடுப்பு சுவர் கட்டுதல் (மா.மு. எண். 1121).
  18. செந்துறை – நக்கம்பாடி – காடூர் சாலை கி.மீ 1/0-2/100 வரை ஒருவழித்தடத்தினை இருவழித்தடமாக அகலப்படுத்தி மறுகட்டமைப்பு செய்தல், கி.மீ 1/2 மற்றும் 1/10-ல் குழாய் பாலங்கள் திரும்பக் கட்டுதல்.
  19. வாரியங்காவல் – மாத்தூர் சாலை கி.மீ 5/0-7/0 வரை மேம்பாடு செய்தல்
  20. செந்துறை – உஞ்சினி – உடையார்பாளையம் சாலை முதல் பிலாக்குறிச்சி சாலை கி.மீ 0/0-1/3 வரை மேம்பாடு செய்தல் மற்றும் கி.மீ 1/3-ல் குழாய் பாலம் திரும்பக் கட்டுதல்
  21. வாரியங்காவல் – மாத்தூர் சாலை கி.மீ 14/8-ல் காட்டு ஓடையின் குறுக்கே உள்ள பழுதடைந்த குறுகலான சிலாப் கல்வெர்ட்டினை சிறுபாலமாக திரும்பக் கட்டுதல்.
  22. மாத்தூர் – கோட்டைக்காடு சாலை கி.மீ 0/6-லிருந்து அயன்தத்தனூர் சாலை கி.மீ 2/6-ல் தடுப்பு சுவர் கட்டுதல் மற்றும் கி.மீ 2/8-ல் குழாய் பாலம் திரும்பக் கட்டுதல்
  23. செந்துறை – உஞ்சினி – உடையார்பாளையம் சாலை முதல் பிலாக்குறிச்சி சாலை கி.மீ 3/2-ல் தடுப்பு சுவர் கட்டுதல் மற்றும் கி.மீ 0/4-ல் குழாய் பாலம் திரும்பக் கட்டுதல்.
  24. செந்துறை – நக்கம்பாடி – காடூர் சாலை கி.மீ 2/100-3/0 வரை ஒருவழித்தடத்தினை இருவழித்தடமாக அகலப்படுத்தி மறுகட்டமைப்பு செய்தல், கி.மீ 2/6-ல் குழாய் பாலம் திரும்பக் கட்டுதல் மற்றும் கி.மீ 2/10-ல் உள்ள பழுதடைந்த தரைப்பாலத்தை சிறுபாலமாக திரும்பக் கட்டுதல் (நெகிழி கழிவுகளைப் பயன்படுத்துதல்)
  25. செந்துறை – நக்கம்பாடி – காடூர் சாலை கி.மீ 3/0-4/0 வரை ஒருவழித்தடத்தினை இருவழித்தடமாக அகலப்படுத்தி மறுகட்டமைப்பு செய்தல், கி.மீ 3/2, 3/6 மற்றும் கி.மீ 3/8-ல் குழாய் பாலம் திரும்பக் கட்டுதல் (நெகிழி கழிவுகளைப் பயன்படுத்துதல்)
  26. ஜெயங்கொண்டம் – விருத்தாச்சலம் சாலை முதல் அகரம் (வழி) அழகாபுரம் கி.மீ 3/2-ல் ஓடையின் குறுக்கே சிறுபாலம் திரும்பக் கட்டுதல்
  27. திருமானூர் – ஏலாக்குறிச்சி – தூத்தூர் சாலை கி.மீ 1/0 – 3/4 வரை மேம்பாடு செய்தல் மற்றும் கி.மீ 1/6, 1/8 (i), 1/8 (ii), 2/10 (i), 2/10 (ii), 3/2 (i) மற்றும் 3/2 (ii)-ல் குழாய் பாலம் திரும்பக் கட்டுதல்
  28. பொய்யூர் – சுண்டக்குடி சாலை கி.மீ 0/2- 1/8 வரை இடைவழித்தடத்தினை இருவழித்தடமாக அகலப்படுத்துதல் மற்றும் மேம்பாடு செய்தல்
  29. பொய்யூர் – சுண்டக்குடி சாலை கி.மீ 2/0-3/2 வரை இடைவழித்தடத்தினை இருவழித்தடமாக அகலப்படுத்தி மேம்பாடு செய்தல்.
  30. பொய்யூர் – சுண்டக்குடி சாலை கி.மீ 1/10-ல் சாலை வளைவை மேம்பாடு செய்தல் மற்றும் கி.மீ 1/10-ல் தடுப்பு சுவர் கட்டுதல்
  31. பொய்யூர் – சுண்டக்குடி சாலை கி.மீ 3/2-4/4 வரை இடைவழித்தடத்தினை இருவழித்தடமாக அகலப்படுத்துதல் மற்றும் மேம்பாடு செய்தல்
  32. கீழக்காவட்டான்குறிச்சி – ஆலம்பாடி மேட்டுத்தெரு சாலை கி.மீ 12/0-15/4 வரை மேம்பாடு செய்தல் மற்றும் கி.மீ 12/10, 13/2, 13/4, 14/8 மற்றும் 15/2-ல் குழாய் பாலம் திரும்பக் கட்டுதல்
  33. விளாங்குடி – அன்னக்காரன்பேட்டை சாலை கி.மீ 17/0-19/0 வரை இடைவழித்தடத்திலிருந்து இருவழித்தடமாக அகலப்படுத்தி உறுதிப்படுத்துதல், கி.மீ 17/8, 18/6-ல் ஒரு வரிசை குழாய் பாலம் திரும்பக் கட்டுதல்
  34. கி.மீ 90/8-ல் திருச்சி – சிதம்பரம் சாலை முதல் ஆயுதகளம் சாலை (வழி) கடாரன்கொண்டான் கி.மீ 0/0-2/185-ல் மேம்பாடு செய்தல் மற்றும் கி.மீ 1/8-ல் குழாய் பாலம் திரும்பக் கட்டுதல்.
  35. இடையார் – காடுவெட்டான்குறிச்சி சாலை கி.மீ 10/0-13/0 வரை சாலை மேம்பாடு செய்தல், கி.மீ 10/10, 11/6, 12/2-ல் குழாய் பாலம் திரும்பக் கட்டுதல் மற்றும் கி.மீ 10/2, 10/4-ல் வடிகால் அமைத்தல் (நெகிழி கழிவுகளைப் பயன்படுத்துதல்)
  36. தத்தனூர் – வாணதிராயன்பட்டினம் சாலை கி.மீ 2/0-6/0 வரை மேம்பாடு செய்தல் மற்றும் கி.மீ 3/6, 4/2, 4/4-ல் குழாய் பாலம் திரும்பக் கட்டுதல்
  37. பருக்கல் – வாழாவெட்டிக்குப்பம் சாலை கி.மீ 0/0-1/785 வரை மேம்பாடு செய்தல் மற்றும் கி.மீ 0/8-ல் குழாய் பாலம் திரும்பக் கட்டுதல் (நெகிழி கழிவுகளைப் பயன்படுத்துதல்)
  38. அணைக்குடம் – நாயகனைப்பிரியாள் – வாணதிராயன்பட்டினம் சாலை கி.மீ 0/0-3/0 வரை மேம்பாடு செய்தல் (நெகிழி கழிவுகளைப் பயன்படுத்துதல்)
  39. ஆர்.எஸ். மாத்தூர் – கோட்டைக்காடு சாலை (வழி) தாமரைப்பூண்டி கி.மீ 5/0-6/0 வரை ஒருவழித்தடத்திலிருந்து இருவழித்தடமாக அகலப்படுத்தி மறுகட்டமைப்பு செய்தல், கி.மீ 5/4-ல் சிலாப் கல்வெர்ட் மற்றும் கி.மீ 5/8-ல் குழாய் பாலம் திரும்பக் கட்டுதல்
  40. ஆர்.எஸ். மாத்தூர் – கோட்டைக்காடு சாலை (வழி) தாமரைப்பூண்டி கி.மீ 9/0-10/4 வரை ஒருவழித்தடத்திலிருந்து இருவழித்தடமாக அகலப்படுத்தி மறுகட்டமைப்பு செய்தல் மற்றும் கி.மீ 9/6, 9/10 மற்றும் 10/4-ல் குழாய் பாலம் திரும்பக் கட்டுதல்
  41. வாரியங்காவல் – மாத்தூர் சாலை முதல் சிலம்பூர் சாலை (வழி) இடையாக்குறிச்சி கி.மீ 3/0-5/0 வரை மேம்பாடு செய்தல்
  42. அங்கனூர் – தாமரைப்பூண்டி சாலை (வழி) சன்னாசிநல்லூர் கி.மீ 2/6-3/6 வரை ஒருவழித்தடத்திலிருந்து இருவழித்தடமாக அகலப்படுத்தி மறுகட்டமைப்பு செய்தல் மற்றும் கி.மீ 2/8(i),2/8(ii),2/10,3/2(i),3/2(ii) மற்றும் 3/6-ல் குழாய் பாலம் திரும்பக் கட்டுதல்
  43. அங்கனூர் – தாமரைப்பூண்டி சாலை (வழி) சன்னாசிநல்லூர் கி.மீ 3/6-5/0 வரை ஒருவழித்தடத்திலிருந்து இருவழித்தடமாக அகலப்படுத்தி மறுகட்டமைப்பு செய்தல் மற்றும் கி.மீ 3/8, 4/2, 4/6 மற்றும் 4/8-ல் குழாய் பாலம் திரும்பக் கட்டுதல்
  44. மாத்தூர் – கோட்டைக்காடு சாலை முதல் முதுகுளம் ஹரிஜன காலனி கி.மீ 0/0-2/8 வரை மேம்பாடு செய்தல் (நெகிழி கழிவுகளைப் பயன்படுத்துதல்)
அலுவலக முகவரி :
கோட்டப் பொறியாளர் அலுவலகம்,
நெடுஞ்சாலைத்துறை,கட்டுமானம் (ம) பராமரிப்பு,
35 கே3, திருச்சி மெயின் ரோடு,
(நிர்மலா மகளிர் மேல்நிலைப் பள்ளி எதிரில்),
அரியலூர் – 621 704.
தொலைபேசி எண். 04329 220064
இமெயில் : tndehcmariyalur[at]gmail[dot]com

Saturday, June 23, 2018

இடையத்தான்குடியில் கோடை உழவு பயிற்சி

இடையத்தான்குடியில் கோடை உழவு பயிற்சி
By DIN  |   Published on : 22nd June 2018 09:18 AM  |   அ+அ அ-   |  

அரியலூர் மாவட்டம், இடைத்தான்குடி கிராமத்தில் மானாவாரி நில மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கோடை உழவுப் பணி குறித்த பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
மானாவாரி நில மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 1,000 ஹெக்டரில் கோடை உழவுப் பணிகள் தொடங்கியதையடுத்து விவசாயிகளுக்கு இந்தப் பயிற்சி அளிக்கப்பட்டது. வட்டார வேளாண் மையம் சார்பில் நடைபெற்ற முகாமுக்கு வேளாண் உதவி இயக்குநர் சி. பாஸ்கரன் தலைமை வகித்தார். 
வேளாண் அலுவலர் அ. சவீதா பங்கேற்று, கோடை உழவின் நன்மைகளான மண்ணின் நீர் பிடிப்புத் தன்மை அதிகரிப்பது, மண் அரிப்பு தடுக்கப்படுவது, நிலத்தடி நீர்மட்டம் உயர்த்துவது உள்ளிட்டவை குறித்து எடுத்துரைத்தார். 
வேளாண் துணை அலுவலர் அ. இளவரசன்,கோடை உழவிற்கு ஏக்கருக்கு  ரூ.500 மானியம் வழங்கப்படும். பருத்தி மக்காச்சோளம் பயிர்  காப்பீடு செய்ய 16.8.2018 கடைசிநாள் என்பதையும், பருத்திக்கு ஏக்கருக்கு 1240 மற்றும்  மக்காச்சோளத்திற்கு ஏக்கருக்கு ரூ.406-செலுத்தி பயன் பெறலாம் என்றார். கால்நடை மருத்துவர்  ஜெயசுந்தரி, கறவை மாடு வளர்ப்பு மற்றும் பராமரிப்பு பற்றியும் விளக்கம் அளித்தார்.
வேளாண் உதவி அலுவலர் எஸ். சுப்ரமணியம் பங்கேற்று, மானாவாரி நில மேம்பாட்டு திட்டத்தின் கீழ்  செயல்பாடுகள் குறித்தும், கோடை உழவு மானியம் பெற சிட்டா,வங்கி கணக்கு எண் மற்றும்  ஆதார் அட்டை நகல் மற்றும் போட்டோ ஆகியவற்றை மானாவாரி குழு தலைவரிடம் ஒப்படைத்து பயன் பெறலாம் என்றார். பயிற்சிக்கு இடையத்தான்குடி, சிறுவளுர் பகுதியை சார்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள்  கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர் மற்றும் மானாவாரி விவசாய குழுத் தலைவர் சிவப்பெருமாள் ஆகியோர் செய்தனர்.

Monday, June 18, 2018

விடியோ, போட்டோகிராபி, கணினி பயிற்சிக்கு அழைப்பு

விடியோ, போட்டோகிராபி, கணினி பயிற்சிக்கு அழைப்பு

By DIN  |   Published on : 17th June 2018 03:51 AM  |   அ+அ அ-   |  
அரியலூர் மாவட்டம், கீழப்பழூர் அருகேயுள்ள பாரத ஸ்டேட் வங்கியின் ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் இலவசமாக அளிக்கப்படவுள்ள விடியோ மற்றும் போட்டோ கிராபி, கணினி பயிற்சிக்கு வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.
பயிற்சிக்கு எந்தக் கட்டணமும் கிடையாது. பயிற்சியின்போது மதிய உணவு, தேநீர், நவீன தங்குமிட வசதி கட்டணமின்றி வழங்கப்படும். 18-ம் தேதி நேர்காணல் நடைபெறுகிறது. 18 முதல் 45 வரையுள்ளோர் எழுதப் படிக்க தெரிந்திருந்தால் போதும். நேர்காணலுக்கு வரும்போது, குடும்ப அட்டை நகல், கல்வி சான்று நகல், வறுமை கோட்டு எண்,பாஸ்போர்ட் சைஸ் போட்டோ- 4 ஆகியவற்றுடன் வரவேண்டும். மேலும் விவரங்களுக்கு பாரத ஸ்டேட் வங்கி ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், ஆர்.டி.ஓ.அலுவலகம் பின்புறம்,கீழப்பழுவூர்,அரியலூர். தொடர்புக்கு 94458-62417, 99448-50442, 90474-15423 96264-97684 என்ற எண்களில் தொடர்புக்கொள்ளலாம் என பயிற்சி நிறுவன இயக்குநர் ஏ.பு.வெங்கிடாசலம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்தார்.