கோவில் கும்பாபிஷேகம்

Monday, December 5, 2016

மேலக்காங்கியனூர் கிளை கழகம் சார்ப்பில் முதல்வர் புரட்சி தலைவி அம்மா அவர்களுக்கு எங்கள் ஆழந்த கண்ணீர் அஞ்சலி

அரியலூர் மாவட்டம் ஆலந்துறையார் கட்டளை ஊராட்சி மேலக்காங்கியனூர் கிளை கழகம் சார்ப்பில் முதல்வர் புரட்சி தலைவி அம்மா அவர்களுக்கு எங்கள் ஆழந்த கண்ணீர் அஞ்சலி தெரிவித்துக் கொள்கிறோம்


நன்றி : தங்கள் உதவி திரு. ந. செந்தில் 


கீழகாங்கியனூர் கிராமத்தில் பொது மக்கள் கண்ணீர் அஞ்சலி

அரியலூர் மாவட்டம், ஆலந்துரையார் கட்டளை பஞ்சாயத் கீழகாங்கியனூர் கிராமத்தில் மறைந்த இதய தெய்வம் புரட்சி தலை அம்மா அவர்களின் புகைபடத்திற்கும் பொது மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறனா்.

சென்று வாருங்கள் அம்மா! வீர வணக்கம்!

அம்மா அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்..!!

சென்று வாருங்கள் அம்மா! வீர வணக்கம்!

Monday, July 18, 2016

"வேலைவாய்ப்புப் பதிவு மேற்கொள்ள பள்ளிகளில் வசதி'

"வேலைவாய்ப்புப் பதிவு மேற்கொள்ள பள்ளிகளில் வசதி'

By அரியலூர்

First Published : 19 July 2016 05:17 AM IST

 

 

 

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மதிப்பெண் சான்று வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

எனவே மாணவர்கள் மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாளன்று ஆதார் அட்டை எண், குடும்ப அட்டை, செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களை எடுத்து வந்து பதிவு செய்து கொள்ளலாம்.

 

அசல் சான்றிதழ் வழங்கப்படும் நாள் முதல் 15 தினங்கள் வரை வேலைவாய்ப்பு பதிவுப்பணி அந்தந்த பள்ளிகளிலேயே நடைபெறும். பதிவுப்பணி நடைபெறும் 15 நாட்களுக்கும் மதிப்பெண் சான்று வழங்க தொடங்கிய முதல் நாளையே பதிவுமூப்பு தேதியாக வழங்கப்படும்.

 

மேலும் h‌t‌t‌p‌s:​‌t‌n‌v‌e‌l​a‌i‌v​a​a‌i‌p‌p‌u.‌g‌o‌v.‌i‌n  என்ற வேலைவாய்ப்புத் துறை இணையதளம் வழியாகவும் பதிவு செய்து கொள்ளலாம்.

 

10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற வேலைவாய்ப்புப் பதிவு செய்ய விரும்பும் அனைத்து மாணவர்களும் தவறாது இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் .சரவணவேல்ராஜ் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

 

Nandri: dinamani

 

Saturday, July 16, 2016

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் லாரி மோதி சாவு

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் லாரி மோதி சாவு

By அரியலூர்

First Published : 17 July 2016 01:26 AM IST

 

பொய்யூர் அருகே சனிக்கிழமை இரவு லாரி மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.நானங்கூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவபெருமாள்.

 

இவரது மனைவி சத்யா(35). சனிக்கிழமை இரவு சிவபெருமாள் தனது மனைவி சத்யாவை அழைத்துக் கொண்டு பொய்யூர் அருகே சென்று கொண்டிருந்தார்.

 

அப்போது அந்த வழியாக சுண்ணாம்புக் கல் ஏற்றிக்கொண்டு வந்த லாரி இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதாம்.

 

இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த சத்யா மீது லாரியின் பின்பக்கச் சக்கரம் ஏறியது.

 

இதில்,சத்யா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த சிவபெருமாள் அருகில் உள்ள அரசு ஆரம்பு சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.

 

கீழப்பழூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Monday, July 11, 2016

11 கோயில்களில் கும்பாபிஷேகம் ஏராளமானோர் தரிசனம்

11 கோயில்களில் கும்பாபிஷேகம் ஏராளமானோர் தரிசனம்

 

 

Date: 2016-07-11 12:07:26

அரியலூர் : அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 11 கோயில்களில் கும்பாபிஷேகம் நடந்தது. அரியலூர் கோ.சி.நகர் விநாயகர் கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, லட்சுமி பூஜை, கோபூஜை, முதலாம் யாக சால பூஜை என பல்வேறு பூஜைகள் நடைப்பெற்றது. நேற்று காலை கடம் புறப்பாடு நிகழ்ச்சி நடைப்பெற்று, பின்னர் கோயில் கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியர்கள் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

 

இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் கயர்லாபாத் அடுத்த கல்லங்குறிச்சி விநாயகர் மற்றும் மாரியம்மன் கோயில், செந்துறை அடுத்த பொய்யாதநல்லூர் காமாட்சியம்மன் கோயில், பெருமாண்டி விநாயகர், அய்யானார், செல்லியம்மன் கோயில், குவாகத்தை அடுத்த இருகளாங்குறிச்சி ஸ்ரீபாலகுமார விநாயகர் கோயில், கீழப்பழுவூர் ஆலந்துறையார் கட்டளை ஸ்ரீவிநாயகர், கருப்பசாமி, பெரியநாயகி கோயில், மலத்தான்குளம் மாரியம்மன் கோயில், தா.பழூர் அடுத்த மேலக்குடிகாடு சிவன் கோயில், மீன்சுருட்டி வெத்தியார்வெட்டு முனீஸ்வரர் கோயில், விக்கிரமங்கலம் அடுத்த கோரைக்குழி மாரியம்மன் கோயில் ஆகிய 11 கோயில்களில் கும்பாபிஷேக விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Wednesday, May 25, 2016

அரசுப் பள்ளிகளில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவர்கள்

அரசுப் பள்ளிகளில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவர்கள்

By dn, அரியலூர்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அரியலூர் மாவட்ட அரசுப் பள்ளிகளில் வெள்ளூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ். சரண்யா 490 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார்.

இவர் பெற்றுள்ள மதிப்பெண்கள்: தமிழ்-99, ஆங்கிலம்-91, கணிதம்-100, அறிவியல்-100, சமூக அறிவியல்-100. சுண்டக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி என். அனிதா, கீழகாவட்டாங்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ஏ. அனுசுயா, மருதூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் ஆர். ராகுல் ஆகிய 3 பேர் 486 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் இரண்டாமிடத்தைப் பெற்றனர்.

கண்டக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி எம். ராதா, அரியலூர் மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவர் டபுள்யு. பாலாஜி, சின்னவளையம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர் வி. குரு, பெரியத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவி எஸ். செந்தாமரைச்செல்வி ஆகிய 4 பேர் 485 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் மூன்றாமிடம் பெற்றனர்.

 

Nandri : Dinamani

 

சகோதரி N. அனிதா (ஆதனூர் கிராமம்)-வுக்கு வாழ்த்துக்கள்

அரியலூர் மாவட்டம்

சுண்டக்குடி அரசு மேல்நிலை பள்ளியில்

பத்தாம் வகுப்பு பொது தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற

சகோதரி N. அனிதா (ஆதனூர் கிராமம்)-வுக்கு

ஆலந்துறையார் கட்டளை & கட்டுநாடு டாட் காமின்

வாழ்த்துக்கள்

அரியலூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 158 பள்ளிகளில் இருந்து 34 மையங்களில் 5752 ஆண்கள், 5902 பெண்கள் என 11,654 பேர் தேர்வு எழுதினர்.

அரியலூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 158 பள்ளிகளில் இருந்து 34 மையங்களில் 5752 ஆண்கள், 5902 பெண்கள் என 11,654 பேர் தேர்வு எழுதினர்.

இதில் 496 மதிப்பெண்கள் பெற்று 6 பள்ளிகள் முதலிடம் பெற்றுள்ளது.

அரியலூர் மான்போர்ட் பள்ளி,

அரியலூர் அரசு நகர் பள்ளி,

கீழப்பழுவூர் சுவாமி பள்ளி,

ஜெயங்கொண்டம் பாத்திமா பெண்கள் பள்ளி,

ஆலத்தியூர் வித்யாமந்தீர் பள்ளி

தளவாய் பள்ளி

ஆகிய பள்ளிகள் 496 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளது.

தேர்ச்சி சதவீதம் 92.5
ஆகும்..

கடந்தாண்டு 499 மதிப்பெண்களைப் பெற்று மாநில அளவில் அரியலூர் முதலிடம் பெற்றது...

நடப்பாண்டில் மாநில அளவில் முதலிடத்தைப் பெற முடியவில்லை என்றாலும் தேர்ச்சி சதவிகிதத்தில் முன்னேறியுள்ளது.

வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!

Info credit: Arjun Mobiles & https://www.facebook.com/chetti.thirukkonam?fref=nf
(Thanks to Arjun mobiles Ariyalur)

Monday, May 23, 2016

அரியலூர் மாவட்டம் ஆதனூர் தீமிதி திருவிழா

அரியலூர் மாவட்டம் கட்டுநாட்டு மக்கள் கல்வி விழிப்புணர்வு கூட்டம்

இன்று அரியலூர் மாவட்டம் கட்டுநாட்டு மக்கள் கல்வி விழிப்புணர்வு கூட்டம் சுண்டக்குடி யில் நடைபெற்றது அதில் பள்ளிக்கூடம் அளவில் முதல் மூன்று இடத்தைபெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது இதில் சுண்டக்குடி கோவிலூர் காமரசவள்ளி ஏலாக்குறிச்சி ஆகிய நான்கு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர் டாக்டர் . அருணாசலம் தஞ்சாவூர் பாரத் கல்வி குழும தாளாளர் புனிதா கணேசன்., டாக்டர் மணிவண்ணன் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

 

Thanks to : https://www.facebook.com/shansathiskumar

தகவல் உதவி : சகோ. சதீஷ்   

 

 

Tuesday, May 17, 2016

சுண்டக்குடி அரசு மேல்நிலை பள்ளி - சகோதரி. ரதியா. பி. (949 மதிப்பெண்), சகோதரி. அனுஷா. எம். (941 மதிப்பெண்) , சகோதரி. ரூபினி. எம். (936 மதிப்பெண்)

நேற்று வெளியான 12ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில்

சுண்டக்குடி அரசு மேல்நிலை பள்ளியில்

முதல் மதிப்பெண் பெற்ற சகோதரி. ரதியா. பி. (949 மதிப்பெண்)

இரண்டாம் மதிப்பெண் பெற்ற சகோதரி. அனுஷா. எம். (941 மதிப்பெண்)

மூன்றாம் இடம் பெற்ற சகோதரி. ரூபினி. எம். (936 மதிப்பெண்)

வாழ்த்துக்கள். மேலும் வெற்றி பெற்ற அனைத்து தம்பிகள் & தங்கைகளுக்கும்
வாழ்த்துக்கள்.



தேர்வில் தோல்வியை தழுவிய மாணவர்கள் அதை பற்றி நினைத்து கவலைபடாமல்,
தோல்வி அடைந்த பாடங்களை படித்து தேர்வு எழுதி வெற்றி பெற வாழ்த்துகிறோம்.



வாழ்த்துக்களுடன்

www.alanduraiyarkattalai.com

www.kattunadu.com

Friday, May 6, 2016

அரியலூர் தொகுதி

149 - அரியலூர்

Advertise with Google - Reach more customers with AdWords Start now claim your 300 AED offerwww.google.ae/adwords

Ads by Google

COMMENT   ·   PRINT   ·   T+  

THE HINDU

ஒருங்கிணைந்த பெரம்பலூரில் இருந்து பிரித்து புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டு, அடுத்து வந்த ஆட்சியாளர்கள் அந்த அறிவிப்பை திரும்ப பெற்றதால், ஒருவழியாய் 2007ல் புதிய மாவட்டமாக உருவான இழுபறி பின்னணி அரியலூருக்கு உண்டு. ஆயினும் தனி மாவட்டமாக உருவான நோக்கத்தை அரியலூர் இன்னமும் அடையவில்லை.

தமிழகத்தில் சிமென்ட் ஆலைகள் அதிக எண்ணிக்கையில் குவிந்திருக்கும் பகுதி இது. அரியலூர் மக்களின் வரமும் சாபமுமாக இந்த ஆலைகளே உள்ளன. டைனோசர் முட்டை உள்ளிட்ட பல்வேறு தொல்லியிர் படிமங்கள் விரவிக்கிடப்பதால் புவியியல் ஆராய்ச்சியாளர்களின் மெக்கா என்ற சிறப்பு பெயர் அரியலூருக்கு உண்டு. ஆனால் வாரணவாசி அருகே திறந்தவெளி தொல்லுயிர் பூங்கா அமைப்பதற்கான பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுகின்றன. தமிழகத்தின் முக்கிய பறவைகள் சரணாலமான கரைவெட்டி இங்கு அமைந்துள்ளது. கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோயில், திருமழபாடி வைத்தியநாத சுவாமி திருக்கோயில், வீரமாமுனிவர் எழுப்பிய ஏலாக்குறிச்சி அடைக்கல மாதா தேவாலயம் என ஆன்மீக தலங்களும் அதிகம். வன்னியர், உடையார், தலித், மூப்பனார் என்ற வரிசை கிரமத்தில் பெரும்பான்மை மக்கள் தொகுதியில் உள்ளனர்.

அரியலூர் நகராட்சியின் புதை சாக்கடை பணிகள் 7 வருடங்களாக இழுத்தடிப்பில் உள்ளன. சாலைகள், கழிவுநீர் வாய்க்கால்கள், கழிப்பறைகள் ஆகிய வசதிகள் இன்னமும் முழுமை பெறவில்லை. அரியலூர் அரசு சிமென்ட் ஆலை, அதற்கு பின்னர் வந்த தனியாரை விட நவீனத்திலும் வளர்ச்சியிலும் தேங்கி கிடக்கிறது. சிமென்ட் ஆலைகள் வெளியேற்றும் மாசு, அகழ்ந்து அப்படியே விடப்பட்ட சுரங்கங்கள், சிமென்ட் ஆலைக்காக இயங்கும் லாரிகளால் சாலை விபத்துகள் என 'சிமென்ட் சிட்டி' எதிர்நோக்கியிருக்கும் சவால்கள் அதிகம்.

நீராதாரநிலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால் அவைகளின் பரப்பு சுருங்கி வருகின்றன. மாவட்டத்தின் டெல்டா பகுதியில் ஒன்றான திருமானூர் ஒன்றியத்தின் விவசாய நிலங்கள் புள்ளம்பாடி வாய்க்கால் திறப்பையும், கொள்ளிடம் தடுப்பணைகள் திட்ட அறிவிப்பையும் நம்பி இருக்கிறது. நவீன அரிசி ஆலைகள், நெல்கொள்முதல் நிலைய விரிவாக்கம் ஆகியவையும் விவசாயிகளின் கோரிக்கையாக நீடிக்கிறது. ஒருபுறமும் கனிம சுரங்கங்களும் மறுபுறமும் கொள்ளிடத்தில் இயங்கும் மணல் குவாரிகளும் பகுதியின் நிலத்தடி நீரை வறள செய்கின்றன. சுகாதாரம் மற்றும் கல்வியில் அரசின் பங்கை அரியலூர் அதிகம் எதிர்பார்த்திருக்கிறது இத்தொகுதி. இங்கு சாலை விபத்துகளில் இறப்பவர்களை விட காயம்பட்டு அவசர சிகிச்சைக்காக தஞ்சைக்கு கொண்டு செல்லும் வழியில் இறப்பவர்களே அதிகம்.

தமாகாவை உள்ளடக்கி 5 முறை காங்கிரஸ் கட்சிகளும், 5 முறை திமுகவும், 4 முறை அதிமுகவும் அரியலூர் சட்டமன்ற தொகுதியை வசமாக்கியுள்ளன. தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் அதிமுகவின் துரை மணிவேல். பெயர் சொல்லும்படியாக இவரது செயல்பாடுகள் அமையவில்லை.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

அரியலூர் தாலுகா- உடையார்பாளையம் தாலுகா (பகுதி) டி.சோழங்குறிச்சி (வடக்கு), தத்தனூர் (கிழக்கு), தத்தனூர் (மேற்கு), மணகெதி, வெண்மான்கொண்டான் (மேற்கு), வெண்மான்கொண்டான் (கிழக்கு), பருக்கல் (மேற்கு), பருக்கல் (கிழக்கு), நடுவலூர் (கிழக்கு), நடுவலூர் (மேற்கு), சுத்தமல்லி, உலியக்குடி, அம்பாபூர், உடையவர்தீயனூர், கீழ்நத்தம், கடம்பூர், சாத்தம்பாடி கோவிந்தப்புத்தூர், ஸ்ரீபுரந்தான் (வடக்கு) மற்றும் ஸ்ரீபுரந்தான் (தெற்கு) கிராமங்கள்.

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1952 - 2011 )

ஆண்டு

வெற்றிபெற்றவர்

கட்சி

1952

பழனியாண்டி

இந்திய தேசிய காங்கிரசு

1957

இராமலிங்கபடையாச்சி

இந்திய தேசிய காங்கிரசு

1962

ஆர்.நாராயணன்

திராவிட முன்னேற்றக் கழகம்

1967

ஆர்.கருப்பையன்

இந்திய தேசிய காங்கிரசு

1971

ஜி.சிவப்பெருமாள்

திராவிட முன்னேற்றக் கழகம்

1977

டி.ஆறுமுகம்

திராவிட முன்னேற்றக் கழகம்

1980

டி.ஆறுமுகம்

திராவிட முன்னேற்றக் கழகம்

1984

எஸ்.புருசோத்தமன்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

1989

டி.ஆறுமுகம்

திராவிட முன்னேற்றக் கழகம்

1991

எஸ்.மணிமேகலை

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

1996

டி.அமரமூர்த்தி

தமிழ் மாநில காங்கிரசு

2001

ப.இளவழகன்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

2006

டி.அமரமூர்த்தி

இந்திய தேசிய காங்கிரசு

2011

துரை.மணிவேல்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

D. அமரமுர்த்தி

ஐ.என்.சி

60089

2

M. ரவிச்சந்திரன்

அ.தி.மு.க

55895

3

ஜெயவேல். ராமா

தே.மு.தி.க

8630

4

K. மாரியப்பன்

சுயேட்சை

2936

5

K. சேகர்

பி.ஜேபி

1111

6

M. சாமிதுரை

பிஸ்பி

1041

7

G. சுகுமார்

சுயேட்சை

782

8

S.M. சந்திரசேகர்

சுயேட்சை

768

9

V. செந்தில் (எ) செந்தில் குமார்

சுயேட்சை

629

10

N. மகேஷ்குமார்

சுயேட்சை

579

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

மணிவேல், துரை

அ.தி.மு.க

88726

2

D. அமரமூர்த்தி

ஐ.என்.சி.

70906

3

C. பாஸ்கார்

ஐ.ஜே.கே

9501

4

R. பன்னீர்செல்வம்

சுயேட்சை

7099

5

P. அபிராமி

பி.ஜே.பி

2981

6

T. முருகானந்தன்

சுயேட்சை

2640

7

K. நீலமேகம்

பி.ஸ்.பி

2267

8

M.K. முத்துசாமி

சுயேட்சை

1629

Keywords: சட்டப்பேரவைத் தேர்தல், தமிழகத் தேர்தல், அரியலூர்

Topics:

தமிழகம்|