கோவில் கும்பாபிஷேகம்

Friday, February 26, 2010

நமது கிராமத்தின் பெயர் கூகிள் தேடலில் வருகின்றனது.

நமது கிராமத்தின் பெயர் தற்பொழுது கூகிள் தேடலில் வருகின்றனது.

பொங்கல் விளையாட்டு: நாளை இறுதிப்போட்டி

பொங்கல் விளையாட்டு: நாளை இறுதிப்போட்டி

ஜனவரி 16,2010,00:00 IST

அரியலூர்:பொங்கல் போட்டிகளின் இறுதிப் போட்டி நாளை (17ம் தேதி) நடக்கிறது.அரியலூர் ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்ட ஊராட்சிகளான ஆலந்துறையார் கட்டளை, மேலக்கருப்பூர், கடுகூர், காவலூர், வெங்கடகிருஷ்ணாபுரம், சுண்டக்குடி, உட்பட பல ஊராட்சிகளில் பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் நடந்தது.நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் ஆகிய போட்டிகளில் ஜூனியர் மற்றும் சீனியர் ஆண்கள் பெண்கள் இருவரும் சதுரங்கம், கேரம், நூறு மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர் ஆண்கள், பெண்கள் இருபாலரும் கைப்பந்து போட்டியில் சீனியர் ஆண்களும், டென்னிகாய்ட் போட்டியில் ஜூனியர் மகளிரும் கலந்து கொண்டனர். இறுதிப் போட்டி நாளை( 17ம்தேதி) நடக்கிறது.

Nandri: www.dinamalar.com
http://www.dinamalar.com/Tnspl_districtdetail.asp?news_id=290199&ncat=Ariyalur

சிறப்பு மனுநீதி நாள் முகாம் நிறைவு

சிறப்பு மனுநீதி நாள் முகாம் நிறைவு

First Published : 04 Jun 2009 11:57:47 AM IST

அரியலூர், ஜூன் 3: அரியலூர் ஒன்றியத்தைச் சேர்ந்த ஆலந்துறையார் கட்டளை கிராமத்தில் சிறப்பு மனுநீதிநாள் முகாம் நிறைவு விழா மாவட்ட ஆட்சியர் அனில்மேஷ்ராம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

விழாவில் திட்ட அலுவலர் எஸ்.வெங்கடாசலம், கிராமத்தில் ஊராட்சியின் மூலம் சாலை மேம்பாட்டு பணிகள், ஊரக கட்டமைப்புப் பணிகள், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் செய்யப்படும் பணிகள் குறித்துப் பேசினார்.

விழாவில் ரூ 1.63 லட்சத்தில் 22 நபர்களுக்கு பட்டா மாற்றம், இந்திராகாந்தி முதியோர் உதவித் தொகை ஆணை 22 பேருக்கு, ஊனமுற்றோர்க்கான உதவித் தொகை 2 பேருக்கு உள்ளிட்ட 63 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அனில்மேஷ்ராம் வழங்கினார்.

விழாவில் பிற்பட்டோர் நல அலுவலர் கே. சீனிவாசன், மகளிர் திட்ட அலுவலர் எஸ். வசந்தா, கோட்டாட்சியர் ஆர். சுதர்சனம், வட்டாட்சியர் எம். எட்டியப்பன், சமூக நலத் துறை வட்டாட்சியர் கே. காசி, ஆதிதிராவிடர் நலத் துறை தனி வட்டாட்சியர் எம். மகேஸ்வரன் உள்ளிட்டோர் பேசினர்.

Nandri : www.dinamani.com
http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Edition-Trichy&artid=69168&SectionID=138&MainSectionID=138&SEO=&Title=

அன்பு கிராம நண்பர்களுக்கு

அன்பு கிராம நண்பர்களுக்கு

நமது ஊருக்காக இந்த வலைப்பதிவை ஆரம்பித்து உள்ளோம். நமது கிராம உறவுகள் தங்களை பற்றிய விபரங்களை இந்த வலைபதிவில் தெரியபடுத்தலாம். நமது கிராமத்தை பற்றிய புகைப்படங்களையும் அனுப்பி வைத்தால் நமது வலைத்தளத்தில் பதிவிடுகிறோம்.

நீங்கள் தொடர்பு கொள்ள

மெயில் முகவரி alanthuraiyarkattalai@gmail.com

அன்புடன்
ரத்தினம் பத்மநாபன்

எங்கள் கிராமத்தை www.wikimapia.org வலைத்தளத்தில் பார்க்க

ஆலந்துறையார் கட்டளை கிராமம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

ஆலந்துறையார் கட்டளை கிராமம் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம். விவசாயம் தான் பிரதான தொழில். தற்பொழுது இளம் தலைமுறையினர் கல்வியில் முன்னேறி அரசாங்கம், தனியார் மற்றும் வெளி நாடுகளிலும் வேலை செய்து வருகின்றனர்.

ஆலந்துறையார் கட்டளை பஞ்சாயத்து மொத்தம் ஆறு கிராமங்களை உள்ளடக்கியது.

1. ஆலந்துறையார் கட்டளை (Alanthuraiyar kattalai)
2. வாளைக்குழி (Valaikuzhi)
3. பனங்கூர் (Panangur)
4. சிறுதொண்டான் காணி (Siruthondan Kani)
5. கீழகாங்கியனுர் (Keelakankiyanur)
6. மீளகாங்கியனுர் (Melakankiyanur)

கிராமத்தில் ஒரு பாலர் பள்ளியும் மற்றும் ஒரு தொடக்க பள்ளியும் உள்ளது. பள்ளியில் ஆண் மற்றும் பெண் இருபாலரும் படித்து வருகின்றனர்.

எங்கள் கிராமத்தை பற்றிய அதிக தகவலுக்கு எங்கள் கிராம தளத்தை பாருங்கள்.