கோவில் கும்பாபிஷேகம்

Thursday, October 27, 2011

தமிழ் நாடு சுற்றுப்புற கட்டுபாட்டு கழகம் அவர்களால் செட்டி நாடு சிமெண்ட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட அனுமதி

நமது கிராமத்தில் இருந்து மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் பதிந்தவர்கள் விபரம்

நமது கிராமத்தில் இருந்து மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் பதிந்தவர்கள் விபரம் 

நமது பஞ்சாயத்து சாலை போடுவதற்காக கொடுக்கப்பட்ட டெண்டர் அதனுடைய நிலவரம்

நமது பஞ்சாயத்து சாலை போடுவதற்காக கொடுக்கப்பட்ட டெண்டர் அதனுடைய நிலவரம்

 

அரியலூர் ஒன்றியத்தில் வென்ற ஊராட்சி மன்ற தலைவர்கள்

அரியலூர், அக்.24-

 

அரியலூர் ஒன்றியத்தில் வெற்றி பெற்ற ஊராட்சி மன்ற தலைவர்கள் விவரம் வருமாறு:-

 

பரமேஸ்வரன் (ஆலந்துறையார் கட்டளை), நடராஜன்(ஆண்டிபட்டாகாடு), பிச்சைபிள்ளை (அருங்கால்), ரகுபதி(இடையத்தாங்குடி), தனலட்சுமி(எருத்துகாரன்பட்டி), வீரபாண்டியன் (கோவிந்தபுரம்), ராஜாத்தி(அஸ்திணாபுரம்) , தங்கவேல் இலுப்பையூர்), குரு(கடுகூர்) சாந்தி (கல்லங்குறிச்சி), ஜெயலட்சுமி (கருப்பலாக்கட்டளை) தமிழரசி(காவனூர்), மகாலட்சுமி(கயர்லாபாத்), மணியம்மாள் (மனக்கால்), தனபால்(மனக்கு) கவுரி(மேலகருப்பூர்), பாலுசாமி(ஜெமங்கலம்) லட்சுமி(ஓட்டகோவில்) சாமிதுரை (பெரியநாகலூர்) மாலா (பெரிய திருக்கோணம்) அரிகிருஷ்ணன் (பொட்டவெளி) மேகராஜன் (புதுப்பாளையம்) கவிதா (புங்கங்குழி) சம்பத்குமார் (ராயம்புரம்) ராமநாதன்(ரெட்டிபாளையம்) தனலட்சுமி( சென்னிவனம்) கருப்பையன்(சிறுவனூர்) தமிழரசன் (சீனிவாசபுரம்), அரும்பு (சுப்பராயபுரம்), சாமிநாதன்(சுன்டகுடி) சுந்தரி (தாமரைகுளம்), அண்ணாதுறை (தமிழ்தாய் குளம்) கருணாநிதியிடம்(தேளுர்) ஆகியோர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள்

 

Friday, October 21, 2011

தலைவர் திரு. நா. பரமேஸ்வரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்


வணக்கம் கிராம மக்கள் அனைவருக்கும்,

நமது கிராம பஞ்சாயத்து தலைவர் தேர்தல் முடிவுகள் வந்துவிட்டது.
நமது கிராம தலைவராக திரு. நா. பரமேஸ்வரன் அவர்கள் தேர்ந்துடுக்கப்பட்டுள்ளார்.

இந்த சந்தோச செய்தியை கிராம நண்பர்களுடன் அனைவருடனும் பகிர்ந்து
கொள்ளுவதில் யாம் பெருமையடைகிறோம்.

கிராம தலைவராக தேர்ந்துடுக்கபட்டுள்ள நண்பர் திரு. பரமேஸ்வரன்
அவர்களுக்கு வாழ்த்துக்கள். அவர்களுடைய பணி சிறக்க வாழ்த்துக்கள்.

அன்புடன்
வலைபதிவு

Sunday, October 9, 2011

திமுக வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு

 

அரியலூர், அக். 3: அரியலூர் நகர்மன்றத் தலைவர், உறுப்பினர்கள் பதவிக்கு  போட்டியிடும் திமுக வேட்பாளர்கள், நகரின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

 

  அரியலூர் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடும் ஆர். முருகேசன், 6, 8, 13, 15- வது வார்டுகளில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தார். 

 

  இதுபோல, 8-வது வார்டுக்குள்பட்ட அழகப்பாநகர், பெரியார்நகர் பகுதிகளிலும், 6- வது வார்டுக்குள்பட்ட கபிரியேல் தெரு, காளியம்மன் கோயில் தெரு, கருத்தான்படையாச்சித் தெரு பகுதிகளிலும், 13-வது வார்டுக்குள்பட்ட பெரிய அரண்மனைத் தெரு, ஒப்பிலாத அம்மன் கோயில் தெரு, கண்ணுடையான் கோயில் தெரு பகுதிகளிலும், 15-வது வார்டுக்குள்பட்ட மேல அக்ரஹாரம், முனியப்பன் கோயில் தெரு பகுதிகளிலும் திமுக வேட்பாளர்கள் வாக்கு சேகரித்தனர்.   அப்போது, திமுக வேட்பாளர்கள் முருகன், விஜயலட்சுமி செல்வராஜன், லட்சுமி, சந்திரகலா ஆகியோரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். கட்சி நிர்வாகிகள் எழில் மாறன், சின்ன முருகன், சாமிநாதன், ரவீந்திரன், செல்வராஜ், பெருமாள், ஏ.கே. ராஜா உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

 

 

அக். 18-ல் விமானப் படைக்கு ஆள்சேர்ப்பு முகாம்

அரியலூர், அக். 6: தஞ்சையில் அக்டோபர் 18 ஆம் தேதி விமானப் படைக்கான ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது.

 

 இதுகுறித்து விமானப்படை ஆள் சேர்ப்பு பிரிவு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

 

 இந்திய விமானப் படையில் குருப் ஒய் பிரிவில் (நான்-டெக்னிக்கல் டிரேடு) தொழில்பிரிவுகளில் பணியாற்றுவதற்கு விருப்பம் உள்ள இளைஞர்கள் இந்த ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்கலாம்.

 

 1991, ஜனவரி 1 முதல் 1995, மார்ச் 31 ஆம் தேதிக்குள் பிறந்த தமிழகம் மற்றும் புதுவை மாநிலத்தைச் சேர்ந்த திருமணமாகாத இளைஞர்கள் தஞ்சாவூரில் அக்டோபர் 18 ஆம் தேதிதியில் நடைபெறும் ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்கலாம்.

 

 ஆட்டோடெக், ஜிடிஐ, ஐஏஎப்(பி), மியூஸிடிசியன் டிரேடுகள் தவிர குருப் ஒய் பிரிவில் பணியாற்றுவதற்காக இந்த ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது. அக்டோபர் 18 ஆம் தேதி காலை 6 மணி முதல் 10 மணிக்குள் இந்த முகாம் நடைபெறும்.

 

 பிளஸ் 2 படிப்பில் கலை, அறிவியல் அல்லது வணிகவியல் பாடங்களுடன் குறைந்தபட்சம் 50 சத மதிப்பெண்கள் பெற்று தேர்வாயிருக்க வேண்டும் அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பாலிடெக்னிக் கல்லூரியில் ஏதாவதொரு பொறியியல் பிரிவில் மூன்று ஆண்டு பட்டயப் படிப்பில் குறைந்தபட்சம் 50 சத மதிப்பெண்கள் பெற்று தேர்வு பெற்றிருக்க வேண்டும்.

 

 முகாமில் பங்கேற்பவர்கள் தங்களது எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 அல்லது பட்டயப் படிப்புக்கான மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மை சான்றிதழ்கள், இதரச் சான்றிதழ்கள், (என்சிசி சான்றிதழ் இருந்தால் கொண்டு வரலாம்), பென்சில், ரப்பர், ôர்ப்பனர், கறுப்பு அல்லது நீல நிற பந்துமுனை பேனா, அனைத்துச் சான்றிதழ்களின் நகல், 2 வெள்ளை கவர்கள், பிளஸ் 2 படிப்பை தமிழகம், புதுவையில் படிக்காதவர்கள் இருப்பிடச் சான்றிதழ், சமீபத்தில் எடுக்கப்பட்ட வண்ணப் புகைப்படம் 7 ( பாஸ்போர்ட் அளவு ), உடல்திறன் தேர்வுக்கான ஸôர்ட்ஸ் மற்றும் ஷூ ஆகிய விளையாட்டு உடைமைகளையும் தவறாமல் கொண்டு வரவேண்டும்.

 

 எழுத்து மற்றும் உடல்திறன் தேர்வில் தேர்வானவர்களுக்கு மட்டும் விண்ணப்பங்கள் வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு

 

 WWW.indianairforce.nic.in Gu\  என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். மேலும், 044-22390561, 044-22396565 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.