கோவில் கும்பாபிஷேகம்

Monday, August 14, 2017

கீழக்காங்கியனூர் அரசு பள்ளியில் சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம்

அரியலூர் மாவட்டம் ஆலந்துரையார் கட்டளை பஞ்சாயத்தை சேர்ந்த கீழக்காங்கியனூர்
அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் 71வது சுதந்திர தின விழா மிகவும் கோலாகலமாக  கொண்டாடப்பட்டது.

விழாவில் பள்ளி ஆசிரியை, மாணவ செல்வங்கள் மற்றும் ஊர் பொது மக்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.







புகைப்பட உதவி : கார்த்திக் 

பனங்கூர் கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் பணி

பனங்கூர் கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் பணி

By DIN  |   Published on : 05th February 2017 01:16 AM  |   அ+அ அ-   |  
அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டியை அடுத்த பனங்கூர் கிராமத்தில், அரியலூர் மனிதவள அறக்கட்டளை சார்பில் சீமைகருவேல மரங்களை அகற்றி, புதிய மரக்கன்றுகள் நடும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.
அரியலூர் மாவட்ட புவியியல் ஆர்வலர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். மனிதவள அறக்கட்டளை தலைவர் கதிர்கணேசன் சிறப்புரையாற்றி பேசுகையில், சீமைகருவேல மரங்களால் பொதுமக்களுக்கும், பிற உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது.
இச்செடியானது ஏரி, குளங்களை ஆக்கிரமித்து, நீர்வரத்தை உறிஞ்சும் தன்மையுடையது. எனவே, மனிதவள அறக்கட்டளை சார்பில் இச்செடிகளை அகற்ற முன்வந்துள்ளோம். இதில் பள்ளி மாணவர்கள், அறக்கட்டளை நிர்வாகிகள் பெரும் பங்கெடுத்து ஈடுபட்டு வருகின்றனர் என்றார். மனிதவள அறக்கட்டளை பொருளாளர் ஜெகதீசன் மற்றும் சுற்றுவட்டார பள்ளித் தலைமையாசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.