கோவில் கும்பாபிஷேகம்

Tuesday, March 30, 2010

புதிய சாலைகள்,​​ மேம்பாலங்கள் அமைக்க அரியலூர் எம்எல்ஏ வலியுறுத்தல்

புதிய சாலைகள்,​​ மேம்பாலங்கள் அமைக்க அரியலூர் எம்எல்ஏ வலியுறுத்தல்
 
அரியலூர்,​​ மார்ச் 8: ​ ​ ​ அரியலூர் தொகுதிக்குள்பட்ட 12 கிராமச் சாலைகளை நெடுஞ்சாலைத் துறையில் சேர்த்து,​​ புதிய சாலைகள்,​​ மேம்பாலங்கள் அமைக்க வேண்டும் என்று அரியலூர் தொகுதி ​ சட்டப்பேரவை உறுப்பினர் பாளை.து.அமரமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.

​ ​ ​ ​ இதுகுறித்து சட்டப்பேரவை உறுப்பினர் பாளை.து.அமரமூர்த்தி,​​ மாநில நெடுஞ்சாலைத் துறை ​ அமைச்சர் சாமிநாதனிடம் அளித்த கோரிக்கை ​ மனுவில் கூறியிருப்பதாவது:

​ ​ ​ ​ அரியலூர் தொகுதிக்குள்பட்ட ​ அயன்ஆத்தூர்-​ கிளிமங்களம்-​ அய்க்கால் வரை உள்ள சாலை,​​ ஆனந்தவாடி கிளிமங்களம்-காவனூர்-​ அம்பாபூர் சாலை,​​ அரியலூர்-​ ராவுத்தன்பட்டி-​ அயன்ஆத்தூர் இணைப்புச் ​ சாலை,​​ ராயம்புரம்-​ காவேரி பாளையம்-​ கடுகூர் ​ வரை உள்ள சாலை,​​ மணக்கால்-​ வெண்மணி இணைப்புச் சாலை,​​ கோவிந்தாபுரம்-​ மணக்கால்-​ நல்லாம்பத்தை-​ ஓ.கூத்தூர் வரையுள்ள இணைப்புச் ​ சாலை,​​ ஓட்டக்கோயில்-​ சாளையக்குறிச்சி-​ காவேரிபாக்கம் வரை உள்ள சாலை,​​ அரியலூர்-​ அம்மாக்குளம்-​ பொய்யூர் வரையிலான சாலை,​​ குறிச்சிநத்தம்-​ புதுப்பாளையம் சாலை,​​ கோப்பிலியன்குடிகாடு-​ பெரியநாகலூர் சாலை,​​ சீனிவாசபுரம்-​ மொரக்குழி-​ பொய்யூர் வரையிலான சாலை ஆகிய கிராமச் சாலைகளை நெடுஞ்சாலைத் துறையில் சேர்த்து,​​ புதிய சாலைகள் மற்றும் உயர்மட்ட பாலங்கள் அமைத்துத் தர வேண்டும்.

​ ​ ​ ​ கல்லகம்-​ திருமழபாடி சாலையில் ​ வெங்கனூர்-​ கோவில்எசனை கிராமங்களுக்கிடையில் உள்ள ஆண்டி ஓடைப்பாலம் பழுதடைந்து போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வருகிறது.​ ​ இந்தப் பாலத்தை உயர்மட்ட பாலமாக அமைத்துத் தர வேண்டும்.

​ ​ ​ அரியலூர் தொகுதிக்குள்பட்ட பழைய ​ மாவட்ட சாலைகளான மேலக்கருப்பூர்-​ ஏலாக்குறிச்சி சாலை,​​ மேலக்கருப்பூர்-​ விழுப்பனாங்குறிச்சி சாலை,​​ அரியலூர்-​ பொய்யூர் சாலை,​​ ​ பொய்யூர்-​ சுண்டக்குடி சாலை உள்ளிட்ட சாலைகளை பிரதான மாவட்டச் சாலைகளாக ​ தரம் உயர்த்தி இருவழிப் பாதைகளாக மாற்ற ​ வேண்டும்.

​ ​ ​ அரியலூர் தொகுதியில் உள்ள 5 கி.மீ.​ தொலைவுக்கு மேல் உள்ள ஒன்றியச் சாலைகள் ​ அனைத்தையும்,​​ நெடுஞ்சாலைத் துறையின் கீழ் சேர்த்து மேம்பாடு செய்ய வேண்டும்.

​ ​ ​ அரியலூர் தொகுதிக்குள்பட்ட ஊராட்சி ​ ஒன்றிய சாலைகளான சுண்டக்குடி-​ ஓரியூர் சாலை,​​ சுண்டக்குடி-​ சிலுப்பனூர் சாலை,​​ ​ அரியலூர்-​ முட்டுவாஞ்சேரி சாலை,​​ திருச்சி-​ சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து செம்மந்தங்குடி செல்லும் சாலை,​​ பொய்யூர்-​ சுண்டக்குடி-​ வைப்பம் செல்லும் சாலை,​​ ​ கருவிடைச்சேரி செல்லும் சாலை,​​ ஓட்டக்கோயில்-​ ஓ.கூத்தூர் செல்லும் சாலை,​​ அரியலூர்-​ ஒ.கூத்தூர் சாலை உள்ளிட்ட சாலைகளை ​ நெடுஞ்சாலைத் துறையின் கீழ் எடுத்து மேம்பாடு செய்ய வேண்டும் என்று அவர் ​ கேட்டுக்கொண்டுள்ளார்.
---------------------------------------------------------------------------------------
நன்றிகள் கட்டுநாட்டின் தளபதிக்கு. மதிப்புக்குரிய பாளை அமரமூர்த்தி அவர்களுக்கு நீங்கள் பொய்யூர்-​ சுண்டக்குடி சாலை புரனமைக்க எடுத்துள்ள முயற்சிக்கு கட்டுநாட்டின் சார்பாக நன்றிகள் தெரிவித்கொல்லுகிறேன்.
---------------------------------------------------------------------------------------

சுண்டக்குடி மருதையாற்றில் உயர்மட்ட பாலம் கட்டப்படுமா?

சுண்டக்குடி மருதையாற்றில் உயர்மட்ட பாலம் கட்டப்படுமா?
 
அரியலூர்: அரியலூர் மாவட்டம், அரியலூர் தாலுகாவை சேர்ந்த சுண்டக்குடி அருகே உள்ள மருதையாற்றில் தரைமட்ட பாலம் உள்ளது. கட்டுநாடு எனப்படும் சுண்டக்குடி, ஓட்டக்கோவில், ஆண்டிப்பட்டாக்காடு, வல்லக்குளம், ஆலந்துறையார்கட்டளை, வாழக்குழி, ஓரியூர், நாணாங்கூர், சிலுப்பனூர், புத்தூர், ஆதனூர், கீழக்காங்கியனூர், மேலக்காங்கியனூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கும் முக்கிய போக்குவரத்து மார்க்கமாக உள்ளது சுண்டக்குடி மருதையாறு ஆகும். மழை காலத்தில் ஏற்படும் கடும் மழை காரணமாக, மருதையாற்று வெள்ளம் சூழ்ந்து கொள்ளும் போது, சுண்டக்குடி பகுதியானது தீவு போல் மாறிவிடுகிறது. சுண்டக்குடி பகுதியிலிருந்து...
 
--------------------------------------------------------------------------------------------------------
எந்த கோரிக்கை கட்டுநாட்டு பகுதி மக்களின் ரொம்ப நாளைய கோரிக்கை. எந்த அரசாங்கம் வந்தாலும் இதை கண்டுகொல்லுவாத இல்லை. நமது பகுதி மக்கள் எல்லாரும் இணைந்து போராடினால் மட்டுமே நிறைவேறும் இந்த கோரிக்கை. நடக்குமா இது?
---------------------------------------------------------------------------------------------------------
 
 

ஆலந்துறையார் கட்டளை கிராமத்தில் குடிசைகளுக்கு இலவச இணைப்பு

ஆலந்துறையார் கட்டளை கிராமத்தில் குடிசைகளுக்கு இலவச இணைப்பு 

அரியலூர்,​​ மார்ச் ௬ 2010:​ அரியலூர் அருகேயுள்ள ஆலந்துறையார் கட்டளை கிராமத்தில் குடிசை வீடுகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ​ ​ ​ மத்திய அரசின் ராஜீவ் காந்தி தேசிய மின்மயமாக்கல் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் குடிசைகளில் வாழும் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

​ விழாவுக்கு,​​ மின் வாரிய செயற்பொறியாளர் பி.​ விருத்தாசலம் தலைமை வகித்தார். திருமானூர் ஒன்றியக் குழுத் தலைவர் மா.​ நடராஜன்,​​ உதவிச் செயற்பொறியாளர்கள் ஜெ.​ ராஜேந்திரன்,​​ எஸ்.​ சுரேஷ்குமார்,​​ மின் வாரியப் பணியாளர்கள் அருள் சகாயராஜ்,​​ திருஞானசம்பந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அரியலூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் பாளை து.​ அமரமூர்த்தி,​​ புதிய மின் மாற்றியை தொடக்கிவைத்து,​​ இலவச மின் இணைப்புத் திட்டத்தைத் தொடக்கிவைத்தார்.​ மேலும்,​​ பயனாளிகளுக்கு மின் உரிம அட்டைகளை வழங்கினார்.  ஊராட்சித் தலைவர் க.​ சுப்பிரமணியன்,​​ துணைத் தலைவர் வி.​ குணசேகரன் உள்ளிட்டோர் பேசினர்.

நன்றி : தினமணி

Thursday, March 18, 2010

எங்கள் கிராமத்திற்கு எப்படி வந்தது இந்த பெயர்?

எப்படி வந்தது நம் கிராமத்திற்கு இந்த பெயர்? இப்படி நான் பல ஆண்டுகளாக நினைத்து பார்த்தது உண்டு. அந்த கேள்வியை சிலரிடம் கேட்பதும் உண்டு. ஆனால் எனக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. அதற்க்கு காரணம் எங்கள் கிராமத்தின் வரலாறுகளை சரியாக தெரிந்தவர்கள் இப்பொழுது யாரும் இல்லை என்பது தான்.

சில முதியவர்கள் எங்கள் கிராமத்தின் வரலாறுகளையும் பண்டைய புராண கதைகளையும் எங்களுக்கு சொல்லுவார்கள். ஆனால் நாங்கள் அந்த சின்ன வயதில் அதை எல்லாம் காது கொடுத்து கேட்டதாக எனக்கு நினைவில் இல்லை. அவர்களை கிண்டல் செய்வதும் கேலி செய்வதுமே வேலையாக இருந்தோம்.

ஆனால் இன்று நினைத்து பார்க்கையில் வெறுமைதான் கண்ணுக்கு தெரிகிறது. காரணம் இன்று யாராவது நண்பர்கள் "என்ன விசேசம் உங்கள் கிராமத்தில்" என்று கேட்டல் சொல்லுவதற்கு கூட ஒரு நாலு வார்த்தை என்னிடம் இல்லை. அதனால் தெரிந்த ஒரு சில செய்திகளையாவது பதிவு செய்யவேண்டும் என்று முடிவு செய்துதான் இந்த பதிவை எழுதுகிறேன்.

"ஆலந்துறையார் கட்டளை" எங்கள் கிராமத்தின் பெயர். இப்பொழுதுதான் எல்லோரும் ஆலந்துறையார் கட்டளை என்று சொல்லுகிறார்கள். ஆனால் நான் சின்ன பிள்ளையாக இருந்தபொழுது அரசாங்க பதிவேடுகளில் தான் இந்த பெயரை பாக்கமுடியும். மற்றபடி எல்லோரும் வாடா புதுப்பாளையத்தான் என்றுதான் அழைப்பார்கள். காரணம் எங்கள் கிராமத்திற்கு "புதுபாளையம்" என்ற வேறு ஒரு பெயரும் உண்டு. இன்றும் சில இடங்களில் நீங்கள் "ஆலந்துறையார் கட்டளை" என்று சொன்னால் அவர்களுக்கு தெரியாது. அரசாங்க பதிவேடுகள் எல்லாவற்றிலும் ஆலந்துறையார் கட்டளை என்ற பெயர்தான் உள்ளது.


எங்கள் ஊரில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ள "ஆலந்துறையார்(வடமூலநாதர்)" என்ற திருத்தலம் உள்ளது. அங்கு உள்ள தெய்வம் எங்கள் கிராமத்திற்கு அதன் பெயரை வைக்கசொல்லி கட்டளை இட்டதாகவும் அதன் கட்டளையை ஏற்று எங்கள் கிராமத்திற்கு அதன் பெயரை வைத்ததாகவும் சொல்லுவார்கள். ஆனால் எப்பொழுது முதல் இந்த பெயர் வந்தது, இதற்க்கு எதாவது ஆதாரம் உண்டா, இது உன்னமைதான நீருப்பிக்க முடியுமா இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

ஆலந்துறையார்(வடமூலநாதர்) கோவிலை பற்றிய மேல் அதிக தகவல்களை கீழே கொடுத்துஉள்ளேன் பாருங்கள்.

மூலவர் : ஆலந்துறையார்(வடமூலநாதர்)\
உற்சவர் : -
அம்மன்/தாயார் : அருந்தவ நாயகி
தல விருட்சம் : ஆலமரம்
தீர்த்தம் : பிரம, பரசுராம தீர்த்தம்
ஆகமம்/பூஜை : சிவாகமம்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருப்பழுவூர்
ஊர் : கீழப்பழுவூர்
மாவட்டம் : அரியலூர்
மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்:

திருஞான சம்பந்தர்

தேவாரப்பதிகம்

கோடலொடு கோங்கவை குலாவுமுடி தன்மேல்
ஆடரவம் வைத்தபெரு மான்திடம் என்பர்
மாடமலி சூளிகை யிலேறி மடவார்கள்
பாடலொலி செய்ய மலிகின்ற பழுவூரே.

திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 55வது தலம்


திருவிழா:

பங்குனி உத்திரம்

தல சிறப்பு:

இத்தல சிவனுக்கு சாம்பிராணித்தைலம் பூசப்படுகிறது. லிங்கம் மிகச்சிறியது என்பதால் அடையாளம் காட்ட, அதன் மீது ஒரு குவளை கவிழ்த்தப்பட்டிருக்கிறது. இந்த குவளைக்கே அபிஷேகம் நடக்கும். பரசுராமர் தன் தாய் ரேணுகா தேவியை கொன்ற பாவம் நீங்க வழிபட்ட தலமாக இது கருதப்படுகிறது. அவர் உருவாக்கிய குளம் "பரசுராம தீர்த்தம்' எனப்படுகிறது. சில சிவன் கோயில்களில் மூலவர் சன்னதியின் நுழைவு வாயிலின் மேற்பகுதியில், கஜலட்சுமி சிற்பம் அமைத்திருப்பார்கள். ஆனால், இத்தலத்தில் பரசுராமர் சயனத்தில் இருப்பதைக் காணலாம். விநாயகர் நடனம் ஆடும் கோலமும், சண்டிகேஸ்வரரின் பஞ்சலோக சிலையும் வித்தியாசமானவை. பங்குனி 18ல், சூரியன் தன் கதிர்களால் இத்தல இறைவனை வழிபாடு செய்கிறான். திருஞானசம்பந்தரின் தேவாரப்பாடல் பெற்ற தலம். வள்ளலார் விண்ணப்பக்கவி வெண்பாவில்,"நற்கருணை வாய்க்கும் பழுவூர் மரகதமே' என்று சிவனையும், அருணகிரி நாதர் திருப்புகழில் இத்தல முருகனையும் புகழ்ந்து பாடியுள்ளனர்.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்

முகவரி:

அருள்மிகு ஆலந்துறையார் (வடமூலநாதர்) திருக்கோயில், கீழப்பழுவூர் அஞ்சல்-621 707 அரியலூர் மாவட்டம்.

பொது தகவல்:

முதலாம் பராந்தக சோழன் காலத்தில் இங்கு திருப்பணி நடந்துள்ளது. கிழக்கு நோக்கிய 5 நிலை ராஜகோபுரத்துடன், இரண்டு பிரகாரங்கள் உள்ளன.

உள் பிரகாரத்தில் கமல கணபதி, முருகன், பஞ்சபூதலிங்கங்கள், மகாலட்சுமி, லிங்கோத்பவர், அறுபத்து மூவர், சிவ துர்க்கை, சப்த கன்னியர் சன்னதிகள் உள்ளன.

பிரார்த்தனை

பிரம்மஹத்தி தோஷம் நீங்கவும், பிரிந்த தம்பதியினர் ஒன்று சேரவும் இங்கு வழிபாடு செய்யப்படுகிறது.

நேர்த்திக்கடன்:

இங்குள்ள பரசுராம தீர்த்தத்தில் நீராடி, சிவனுக்கு அபிஷேகம் செய்து வணங்குதல்.

தலபெருமை:

"பழு' என்றால் ஆலமரம். எனவே சுவாமி "ஆலந்துறையார்' எனப்படுகிறார்.

தல விருட்சமான ஆலமரம் இப்பகுதியில் அதிகமாதலால் "திருப்பழுவூர்' என பெயர் பெற்றது.

தல வரலாறு:

கயிலாயத்தில் அன்னை பார்வதி விளையாட்டாக சிவனின் கண்ணை பொத்தியதால், சிவனின் இரு கண்களாக விளங்கும் சூரிய, சந்திரரின் ஒளி இல்லாமல் போனது. இதனால் உலக இயக்கம் நின்றது. முனிவர்களும் தேவர்களும் கலங்கி நின்றனர். அப்போது சிவபெருமான் தனது தேவியிடம், ""விளையாட்டாக தவறு செய்தாலும் மற்றவர்களுக்கு அது பாதிப்பை ஏற்படுத்துமானால், அது பாவமே ஆகும். இந்த பாவத்திற்கு பிராயச்சித்தமாக, நீ என்னைப் பிரிந்து பூலோகம் செல். அங்கு பல தலங்களில் தவம் செய்து இறுதியாக அங்குள்ள யோகவனத்தில் தங்கியிரு. நான் அங்கு வந்து உன்னுடன் சேர்வேன்,'' என்றார்.

அதன்படி பார்வதி தவத்தை முடித்து விட்டு, யோகவனத்தில் புற்று மண்ணால் சிவலிங்கம் அமைத்து, ஒற்றைக்காலில் நின்று தவம் செய்தாள். இறைவனும் அவளுடன் இணைந்தார். அந்த யோகவனமே இன்றைய பழுவூராகும். தவம் செய்த அம்பிகை என்பதால் அம்பாள் "அருந்தவநாயகி' எனப்படுகிறாள்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் பங்குனி 18ல், சூரியன் தன் கதிர்களால் இத்தல இறைவனை வழிபாடு செய்கிறான்.

Thursday, March 4, 2010

அரியலூரில் விஜயகாந்த் ஆர்ப்பாட்டம்

அரியலூரில் வருகின்ற 7ஆம் தேதி நமது மாவட்டம் அரியலூரில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலைகளில் அதற்க்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று போராட்ட்டம் நடத்த உள்ளார்.

Wednesday, March 3, 2010

நமது கிராமத்தின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் விபரம் 2001

நன் இன்று ஆங்கிலம் www.wikipedia.org சென்று நமது கிராமத்தின் பெயரை தட்டி பார்த்தேன், நம்பவே முடியவில்லை நமது கிராமத்தை பற்றியும் ஒரு ரெண்டு வரி உள்ளது.
 
இணைப்பு : நமது கிராமத்தின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் விபரம் 2001 :

Tuesday, March 2, 2010

அறத்திற்கு அழிவுண்டா?

உண்மையே பேசு; அறமே செய் என்கிறது வேதம். இந்த கலிகாலத்தில் உண்மையே பேசினால் ஊரெல்லாம் எதிரி; உலகெல்லாம் பகை என்று பலர் பயப்படுகின்றனர். உண்மையைப் பேசுகிறவர்கள், உண்மை பேசினால் மட்டும் போதாது; அறவழியில் வாழ்கிறவர் களாகவும் இருக்க வேண்டும். உங்கள் வாழ்வு, அறவழியில் இல்லாமல் உண்மை பேசுகிறேன் என்று பிறரைப்பற்றி பேசினால் துன்பம் தான் மிஞ்சும்.

 

பழைய வைத்திய முறையில் மருந்துகள் கொடுக்கும் போது, மருந்து மட்டும் சாப்பிட்டால் போதாது; பத்திய உணவுகள் சாப்பிட்டு, சில மோசமான உணவுகளை சாப்பிடாமல் இருந்தால்தான் மருந்து வேலை செய்யும் என்று சொல்வர். சிலசமயம், பத்தியமற்ற உணவுகள் சாப்பிட்டால் மருந்து விபரீதமாகக் கூட வேலை செய்யும்; அதே மாதிரிதான் உண்மை பேசுவது என்பது மருந்து மாதிரி. அறவழியில் வாழ்வது பத்திய உணவு மாதிரி. இரண்டும் இணைந்து நிகழ வேண்டுமே ஒழிய, உண்மை மட்டும் பேசி அறவழியில் நாம் நடக்கா விட்டால் அடி, உதைதான் கிடைக்கும்.

 

அறவழியில் நடக்கக் கூட பலர் பயப்படுகின்றனர். அறவழியில் நடந்த ராமர், தருமர் கஷ்டப்பட்டனர். அயோக்கியர்கள் சுகவாழ்வு வாழ்கின்றனர் என்று பலர் புலம்புகின்றனர். இது மாயை; பெரிய பொய். அவர்கட்கு நேர்ந்த சோதனை களைத் துன்பங்களாக கருதுகின்றனர்; ஆனால், அவர்கள் அப்படி இல்லை. நெருப்புக்குக் காகிதம் அஞ்சும்... தங்கம் பயப்படுமா? நீங்கள் அறவழியில் நடந்தால் வரும் அனுபவங்களைத் துன்பம் என்று முத்திரை குத்தாதீர்கள்; அறவழியில் நடப்பவருக்கு ஒருநாளும் துன்பம் வராது. "இன்பமே எந்நாளும்... துன்பம் இல்லை' என்கிறது நாவுக்கரசர் தேவாரம்.

 

ஒரு ராஜாவின் அரண்மனையில் சிலம்பு திருட்டுப் போய்விட்டது. அரசனுக்குக் கடுங்கோபம். சிலம்பைக் கண்டுபிடிக்க ஒற்றர்களை ஏவினான்; பயன் இல்லை."ஒரு மாதத்திற்குள் சிலம்பைக் கொண்டு வந்து தருபவர்கட்கு பெரும் பரிசுத் தொகை...' என்று அறிவித்தான். கூடவே, மக்களை மிரட்ட, அதற்கு பிறகு, அது யாரிடம் இருந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டால் மரண தண்டனை என்று அறிவித்தான்.
அந்த ஊருக்குத் தம் சீடர்களோடு வந்து கொண்டிருந்தார் துறவி ஒருவர். வழியில் கீழே கிடந்த சிலம்பு இவர் கைக்கு அகப்பட்டது. விசாரித்தபோது, "இது ராஜாவின் சொத்து; அதை உடனே கொண்டு போய் கொடுத்தால் பரிசு உண்டு. குறிப்பிட்ட நாளுக்குப் பிறகு கொடுத் தால், மரண தண்டனை!' என்று துறவிக்குத் தகவல் கிடைத்தது.

 

அதை கொடுக்கவில்லை துறவி; வைத்துக் கொண்டார். சீடர்களுக்கு ஒன்றும் புரியவே இல்லை. சரியாக எந்த நாளுக்குப் பிறகு, கொடுத்தால் மரண தண்டனை என்று ராஜா அறிவித்தாரோ, அதற்குப் பிறகு, அரசரிடம் சிலம்பைக் கொடுத்தார். "இப்போது உமக்கு மரண தண்டனை நான் விதிக்க வேண்டி இருக்குமே, ஏன் கிடைத்ததும் தரவில்லை?' என்று சீறினான் அரசன்.

 

"ஒன்று... கிடைத்ததும் ஓடோடி வந்திருந்தால் பரிசுக்கு நான் ஆசைப்பட்டதாக அர்த்தம்; நான் பரிசை விரும்பவில்லை. இரண்டு, மரண தண்டனை கிடைக்கும் என்று அஞ்சி கொடுக்காமலேயே வைத்திருந்தால் நான் சாவுக்குப் பயந்தவன் என்று அர்த்தம்; நான் மரணத்திற்குப் பயப்படுபவன் இல்லை. சிலம்பை அப்படியே வைத்துக் கொண்டால் பிறர் பொருளுக்கு ஆசைப்படுபவன் என்று ஆகிவிடும்; நான் பிறர் பொருளை விரும்புவதே இல்லை. அதனால், இப்போது கொடுத்து விட்டேன்!' என்றார் துறவி. "இப்போது உமக்கு மரணதண்டனை கிடைக்குமே!' என்றான் அரசன். அவனைப் பார்த்து, "அறவழியில் நடக்கும் ஒருவனை அழிக்க எந்த அரசுக்கும் அதிகாரம் இல்லை. தர்மம், உன் சட்டத்தை விட மேலானது... விடு வழியை...' என்று கூறியபடி கம்பீரமாக நடந்தார் துறவி. தலை வணங்கி வழிவிட்டான் அரசன்.

 

அறம் அழிவற்றது


Nandri : Meera Rajan @ only-for-tamils@yahoogroups.com