கோவில் கும்பாபிஷேகம்

Monday, August 19, 2013

அரசு மருத்துவர்களின் அலட்சியம்: பெண் வயிற்றுக்குள் கையுறை!

அரசு மருத்துவர்களின் அலட்சியம்: பெண் வயிற்றுக்குள் கையுறை!

அரசு மருத்துவர்களின் அலட்சியம்: பெண் வயிற்றுக்குள் கையுறை!

Posted Date : 14:04 (19/08/2013)Last updated : 14:06 (19/08/2013)

அரியலூர்: அரியலூர் அரசு மருத்துவமனையில், பிரசவ அறுவை சிகிச்சையின்போது பெண்ணின் வயிற்றுக்குள் 3 கையுறைகளை வைத்து தைத்த கொடுமை நடந்துள்ளது. இது, 53 நாட்களுக்கு பின் அம்பலமாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியை அடுத்துள்ள குடிசல் கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவருக்கும், ஆலந்துறையார் கட்டளை கிராமத்தை சேர்ந்த துரைராஜ் மகள் சுமதிக்கும் ஓராண்டுக்கு முன் திருமணம் நடந்தது. இந்நிலையில், நிறை மாத கர்ப்பிணியாக இருந்த சுமதி, தலை பிரசவத்திற்காக தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.

கடந்த ஜூலை மாதம் 24 ஆம் தேதி சுமதிக்கு பிரசவ வலி ஏற்படவே, அருகிலுள்ள சுண்டக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக சேர்த்திருக்கிறார்கள். ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் 108 ஆம்புலன்ஸில் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு சுமதியை அனுப்பி வைத்துள்ளனர்.

அங்கு, சுமதியை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தையின் தலை பெரிதாக உள்ளதால் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை எடுக்க வேண்டும் என கூறி, சுமதிக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அதில், சுமதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய சுமதி, கடந்த 53 நாட்களாக உணவு உண்ண முடியாமலும், மலம் கழிக்க முடியாமலும் மிகுந்த அவதிபட்டு வந்துள்ளார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன் சுமதி மலம் கழிக்கும்போது கையுறை வெளியே தெரிந்திருக்கிறது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சுமதி, சுண்டக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றுள்ளார்.

அங்கிருந்த டாக்டர்கள் சுமதியை பரிசோதித்துள்ளனர். அப்போது, சுமதிக்கு அரியலூர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து தையல் போடும்போது கவனக்குறைவாக 3 கையுறைகளை வயிற்றில் வைத்து மருத்துவர்கள் தையல் போட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, சுண்டக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் சுமதியின் வயிற்றில் இருந்த 3 கையுறைகளை வெளியே எடுத்து, தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், சுமதியின் கணவர் மற்றும் உறவினர்கள் தவறு செய்த டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இந்த சம்பவம் அரியலூர் மாவட்டத்தில் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சி.ஆனந்தகுமார்

Nandri : http://news.vikatan.com/article.php?module=news&aid=18417

No comments:

Post a Comment

வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க