கோவில் கும்பாபிஷேகம்

Sunday, June 8, 2014

பள்ளி–கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் அரசு விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

பள்ளிகல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் அரசு விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

பள்ளி மற்றும் கல்லூரி களில் பயிலும் மாணவமாணவிகள் அரசு விடுதிகளில் சேர விண் ணப்பிக்க வேண்டு கோள் விடப்பட்டுள் ளது.

32 விடுதிகள்

தமிழ்நாடு அரசால் அரிய லூர் மாவட்டத்தில் பிற் படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மாணவர் மற்றும் மாணவி யர்களுக்கென மொத்தம் 32 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

அதன்படி மாணவர்களுக் காக 20 பள்ளி விடுதிகளும், மாணவிகளுக்காக 9 விடுதி களும், மாணவர்களுக்காக 2 கல்லூரி விடுதிகளும், மாணவிகளுக்காக 1 விடுதியும், செயல்பட்டு வருகிறது.

பள்ளி விடுதிகளில் 4–ம் வகுப்பு முதல் 12 –ம் வகுப்பு வரையில் பயில்கின்ற மாணவ மாணவியர்களும் கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில், பயிலும் மாணவ மாணவியர் களும் சேரத்தகுதி யுடையவர்கள் ஆவார்கள்.

விடுதிகளில் சேருவதற்கான தகுதிகள்

அனைத்து விடுதி மாணவ மாணவியர்களுக்கும் உணவும், தங்கும் வசதியும் அளிக்கப்படும்.

பெற்றோர் மற்றும் பாது காவலரது ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இருப்பிடத்திலிருந்து, பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம், 8கிமீக்கு மேல் இருக்க வேண்டும். இந்த தொலைவு விதி மாணவியருக்கு பொருந் தாது.

தகுதியுடைய மாணவ மாணவியர் விண்ணப்பங் களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் அல்லது காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக் கொள்ள லாம்.

ஜூலை 15–ந் தேதிக்குள்

பூர்த்தி செய்யப்பட்ட விண் ணப்பங்களை பள்ளி விடுதி களைப் பொறுத்த வரையில் சம்பந்தப்பட்ட விடுதி காப் பாளர் அல்லது காப்பாளினி களிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வருகிற 20–ந் தேதிக்குள்ளாக வும், கல்லூரி விடுதிகளைப் பொறுத்தவரை அடுத்த மாதம் (ஜூலை)15–ந் தேதிக் குள்ளாகவும், சேர்ப் பிக்க வேண்டும்.

அனைத்து விடுதியிலும் முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக் கென கூடுதலாக 5 இடங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன.

எனவே, அரசு பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அரசு கல்லூரிகளில் படிக்கும் மற்றும் அரசு விடுதிகளில் தங்கி பயில முழு விருப்பம் உள்ள அனைத்து மாணவமாணவியர்களும் அரசின் இச்சலுகைகளை பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார் கள்.

மேற்கண்ட தகவலை கலெக்டர் சரவணவேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

Nandri : Dinathanthi

 

 

No comments:

Post a Comment

வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க