கோவில் கும்பாபிஷேகம்

Monday, August 3, 2015

மானாவாரி கடலை சாகுபடியாளருக்கு மானியத்தில் நல உதவிகள் பயன்பெற அழைப்பு

மானாவாரி கடலை சாகுபடியாளருக்கு மானியத்தில் நல உதவிகள் பயன்பெற அழைப்பு

பதிவு செய்த நேரம்:2015-08-01 11:30:56

VIDEO : Police arrest dreaded Maoist commander in Jharkhand

அரியலூர், :  அரியலூர் மாவட்டத்தில் மானாவாரியில் கடலை விதைக்கும் கருவிக்கொண்டு விதைப்பு செய்யும் விவசாயிகளுக்கு மானியத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளதால் இதில் விவசாயிகள் பங்கேற்று பயன்பெறுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு தலைைம வகித்த கலெக்டர் சரவணவேல்ராஜ் பேசியதாவது:இம் மாவட்டத்தில் இம்மாதம் வரை பெறப்பட்ட மழையை கொண்டு மானவாரிப் பயிர்களான கடலை, உளுந்து, மக்காசோளம், கம்பு மற்றும் சோளம் ஆகியவற்றை பயிரிட இதுவே ஏற்றத் தருணமாகும். மானாவாரியில் கடலை சாகுபடி செய்யும் விவசாயிகள் கடலை விதைக்கும் கருவிக்கொண்டு கடலை மற்றும் ஊடுபயிராக துவரை விதைப்பு செய்ய விதைப்பு மானியம் ரூ.ஆயிரம் எக்டருக்கு பின்னேற்பாக வழங்க தமிழக அரசு தேசிய வேளாண் வளர்ச்சித் திட்ட எண்ணெய் வித்து இயக்கத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 
இத்திட்டத்தின் கீழ் நடப்பு நிதியாண்டில் அரியலூர் மாவட்டத்திற்கு பொருள் இலக்கீடாக ஆயிரம் எக்டருக்கு, பின்னேற்பு மானியத்தொகையாக ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இம்முறையில் கடலை விதைப்பு செய்யும் விவசாயிகள் தங்களின் நிலத்தின் சிட்டா, அடங்கல் மற்றும் கடலை விதைக்கும் போது எடுக்கப்படும் புகைப்படம் ஆகியவற்றுடன் பின்னேற்பு மானியத்தொகை பெறுவதற்கான உரிய படிவத்தில் பூர்த்திசெய்து தங்களது வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களிடம் அளித்து முன்னுரிமை அடிப்படையில் பயன்பெறலாம். மேலும், இந்த இலக்கீடானது அரியலூர் வட்டாரத்துக்கு 200 எக்டேரும், ஜெயங்கொண்டம் வட்டாரத்துக்கு 300 எக்டேரும், ஆண்டிமடம் வட்டாரத்துக்கு 300 எக்டேரும், தா.பழூர் வட்டாரத்துக்கு 200 எக்டேரும் வீதம் பிரித்து அளிக்கப்பட்டுள்ளது.

கடலை விதைக்கும் கருவிக்கொண்டு விதைப்புசெய்ய குறைவான நேரமே ஆகும். கூடிய ஆட்கள் தேவை மற்றும் செலவு குறைக்கப்படுகிறது. பயிர் எண்ணிக்கை பராமரிக்கப்படுகிறது. சரியான ஆழத்தில் விதைக்கப்படுவதால் நல்ல முளைப்பு திறனும், பயிர் போதுமான இடைவெளியுடன் இருக்கும். மேலும், களைமுளைப்புத் திறனும் குறைக்கப்படுகிறது. கைக்களை எடுப்பதில் சிரமம் ஏற்படுவதில்லை. எனவே இத்திட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் மற்றும் தா.பழூர் வட்டார விவசாயிகள் பங்கேற்று பயன்பெற வேண்டும் என்றார்.கூட்டத்தில் டிஆர்ஓ ரவீந்திரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரஸ்வதி கணேசன், வேளாண் இணை இயக்குநர் (பொ) மனோகரன், தோட்டக் கலைத் துறை துணை இயக்குநர் கணேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

No comments:

Post a Comment

வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க