கோவில் கும்பாபிஷேகம்

Saturday, June 23, 2018

இடையத்தான்குடியில் கோடை உழவு பயிற்சி

இடையத்தான்குடியில் கோடை உழவு பயிற்சி
By DIN  |   Published on : 22nd June 2018 09:18 AM  |   அ+அ அ-   |  

அரியலூர் மாவட்டம், இடைத்தான்குடி கிராமத்தில் மானாவாரி நில மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கோடை உழவுப் பணி குறித்த பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
மானாவாரி நில மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 1,000 ஹெக்டரில் கோடை உழவுப் பணிகள் தொடங்கியதையடுத்து விவசாயிகளுக்கு இந்தப் பயிற்சி அளிக்கப்பட்டது. வட்டார வேளாண் மையம் சார்பில் நடைபெற்ற முகாமுக்கு வேளாண் உதவி இயக்குநர் சி. பாஸ்கரன் தலைமை வகித்தார். 
வேளாண் அலுவலர் அ. சவீதா பங்கேற்று, கோடை உழவின் நன்மைகளான மண்ணின் நீர் பிடிப்புத் தன்மை அதிகரிப்பது, மண் அரிப்பு தடுக்கப்படுவது, நிலத்தடி நீர்மட்டம் உயர்த்துவது உள்ளிட்டவை குறித்து எடுத்துரைத்தார். 
வேளாண் துணை அலுவலர் அ. இளவரசன்,கோடை உழவிற்கு ஏக்கருக்கு  ரூ.500 மானியம் வழங்கப்படும். பருத்தி மக்காச்சோளம் பயிர்  காப்பீடு செய்ய 16.8.2018 கடைசிநாள் என்பதையும், பருத்திக்கு ஏக்கருக்கு 1240 மற்றும்  மக்காச்சோளத்திற்கு ஏக்கருக்கு ரூ.406-செலுத்தி பயன் பெறலாம் என்றார். கால்நடை மருத்துவர்  ஜெயசுந்தரி, கறவை மாடு வளர்ப்பு மற்றும் பராமரிப்பு பற்றியும் விளக்கம் அளித்தார்.
வேளாண் உதவி அலுவலர் எஸ். சுப்ரமணியம் பங்கேற்று, மானாவாரி நில மேம்பாட்டு திட்டத்தின் கீழ்  செயல்பாடுகள் குறித்தும், கோடை உழவு மானியம் பெற சிட்டா,வங்கி கணக்கு எண் மற்றும்  ஆதார் அட்டை நகல் மற்றும் போட்டோ ஆகியவற்றை மானாவாரி குழு தலைவரிடம் ஒப்படைத்து பயன் பெறலாம் என்றார். பயிற்சிக்கு இடையத்தான்குடி, சிறுவளுர் பகுதியை சார்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள்  கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர் மற்றும் மானாவாரி விவசாய குழுத் தலைவர் சிவப்பெருமாள் ஆகியோர் செய்தனர்.

No comments:

Post a Comment

வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க