கோவில் கும்பாபிஷேகம்

Thursday, September 16, 2010

தினம் ஒரு தகவல் – இரு சகோதரர்கள்

இரு சகோதரர்கள்

சகோதரர்கள் இருவர் அவர்களின் குடும்பப் பண்ணையில் ஒன்று சேர்ந்து உழைத்தனர். சகோதரர்களில் திருமணமானவனுக்குப் பெரிய குடும்பம் இருந்தது. மற்றவன் தனிக்கட்டை. ஒரு நாள் சகோதரர்கள் குடும்பசொத்துக்களை சரிசமமாகப் பிரித்துக் கொண்டனர். விளைச்சல், லாபம் எல்லாவற்றையும். ஒரு நாள் பிரம்மச்சாரி சகோதரன் நினைத்தான், மகசூல் லாபத்தையெல்லாம் நாங்கள் சரிசமமாகப் பங்கீட்டுக் கொண்டது சரியல்ல. நான் தனியாள். எனக்கான தேவைகள் குறைவு. ஆகவே, அவன் தினமும் இரவில் ஒரு மூட்டை தானியத்தைத் தூக்கி, சகோதரனின் தானியக்கிடங்கு பக்கமாகத் தள்ளிவிட்டான்.

 

அதேநேரம், திருமணமான சகோதரன் இப்படி யோசித்தான். 'உற்பத்தி லாபத்தை எல்லாம் இருவரும் சமமாகப் பிரித்துக் கொண்டது முறையல்ல. என்னை கவனித்துக் கொள்ள மனைவி, குழந்தை குட்டியென்று இருக்கிறார்கள். சகோதரனுக்கு என்று யாரும் இல்லை. அவனுக்குத்தான் பங்கு அதிகமாகத் தேவை'. எனவே ஒவ்வொரு நாள் இரவும் ஒரு மூட்டை தானியத்தை தூக்கி பிரமச்சாரி சகோதரனின் தானியக்கிடங்கு பக்கமாகப் போட்டான்.

 

நாட்கள் பல கடந்தாலும் தத்தமது தானிய இருப்புக் குறையாமல் இருப்பதைப் பார்த்துக் குழம்பினர் சகோதரர்கள் இருவரும். இந்நிலையில் ஒரு நாள் இரவு சகோதரர்கள் தானிய மூட்டைகளைத் தூக்கிக் கொண்டு அடுத்தவர் பக்கமாக ஒரே நேரத்தில் போக, எதிரெதிரே சந்தித்துக் கொண்டனர். அதுவரை என்ன நடந்திருக்கிறது என்பதையும் புரிந்து கொண்டனர். உடனே சகோதரர்கள் மூட்டைகளைப் போட்டுவிட்டு ஓடிப்போய் ஒருவரையொருவர் ஆரத் தழுவிக் கொண்டனர்.

 

Nandri : தினம் ஒரு தகவல்

 

 

No comments:

Post a Comment

வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க