கோவில் கும்பாபிஷேகம்

Friday, September 17, 2010

பனங்கூர் கிராமத்தில் பகுதிநேர ரேஷன்கடை திறப்பு விழா



அரியலூர்: அரியலூர் மாவட்டம், சுண்டக்குடி அருகே ஆலந்துறையார் கட்டளை பஞ்சாயத்துக்கு உட்பட்ட உள்ள பனங்கூர் கிராமத்தில் அமைக்கப்பட்ட பகுதிநேர ரேஷன்கடை திறப்பு விழா நடந்தது.ஆலந்துறையார் கட்டளை பஞ்சாயத்து தலைவர் சுப்ரமணியன் வரவேற்றார்.

அரியலூர் சட்டசபை தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, ரேஷன்கடையை திறந்துவைத்து, அரியலூர் எம்.எல்.., பாளை அமரமூர்த்தி பேசியதாவது:இன்றைய காலகட்டத்தில் ரேஷன் பொருட்கள் மக்களின் அத்தியாவசிய தேவைகளில் முதலிடம் வகிப்பதாக உள்ளது. எனவே, அரசின் விதிகளை தளர்த்தி இந்த பனங்கூர் கிராமத்தில் பகுதி நேர ரேஷன்கடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.வாழைக்குழி, நானாங்கூர், நெருஞ்சிக்கோரை ஆகிய ஊர்களிலும் திருமானூர் காந்தி நகர் பகுதியிலும் பகுதி நேர ரேஷன்கடைகள் திறக்கப்படும்.

பனங்கூர் ரேஷன்கடையானது வாரம் ஒருநாள் வியாழக்கிழமையன்று இயங்கும். கூடுதல் பணியாளர் நியமிக்கப்பட்ட பிறகு, வாரம் இரண்டு நாள் இயங்க உத்தரவிடப்படும். பொதுமக்கள் இதை பயன்படுத்தி வளமாக வாழ வேண்டும்.

சுண்டக்குடி பகுதிக்கு அரியலூரிலிருந்து கூடுதல் பஸ்வசதி ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த பகுதியில் ஏற்பட்டுள்ள நல்ல முன்னேற்றம் தொடர, பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.சிதம்பரம் லோக்சபா தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுப சுந்தரசோழன், கதிர்வேல் மைன்ஸ் கணேசன், ஆர்.., லெனின் சசிக்குமார், வி..., முருகேசன், ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ், பஞ்சாயத்து துணை தலைவர் குணசேகரன், காங்கிரஸ் வட்டார தலைவர் சௌந்தர்ராஜன், மதிவாணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.ஓட்டக்கோவில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி செயலாளர் முருகேசன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க